இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 12-06-2023

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  12-06-2023


தமிழ் நாடு :-



Card image cap

  • தமிழகத்தில் ‘பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு’ கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் பாய்மர படகு பயணத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • சென்னை துறைமுகம்பழவேற்காடுகோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தில் பெண் காவலர்கள் பயணிக்கின்றனர்.
  • உலக அளவில் இதுபோன்ற படகு சாகச பயணங்களை ஆண்காவலர்கள் பலமுறை மேற்கொண்டுள்ளனர். முதன்முதலாக தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் 1,000 கி.மீ. தூர படகு சாகச பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

 

முக்கிய குறிப்புகள்

  • தமிழக காவல் துறையில் பெண்கள் முதன்முறையாக பணியமர்த்தப்பட்ட ஆண்டு - 1973
  • முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர்ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.
  • தமிழகத்தில் தற்போது 202 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
  • தமிழகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை – 228 (இந்தியாவில் அதிக மகளிர் காவல் நிலையங்ள் கொண்ட மாநிலம்)
  • தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி-  திலகவதி(1976)
  • தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி - லத்திகா சரண்(2010)
  • தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட 
  • ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு -1989

பொருளாதாரம் :-



Card image cap
  1. சிங்கப்பூர் - 17.2 பில்லியன் டாலர் (ரூ.1.41 லட்சம் கோடி)
  2. மொரிஷியஸ் - 6.1 பில்லியன் டாலர் (ரூ.50,000 கோடி)
  3. அமெரிக்கா - 6 பில்லியன் டாலர் (ரூ.49,000 கோடி)
  4. ஐக்கிய அரபு அமீரகம் - 3.35 பில்லியன் டாலர் (ரூ.27,500 கோடி)
  5. நெதர்லாந்து - 2.498 பில்லியன் டாலர்(ரூ 20,594 கோடி)

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

Card image cap
  • 2020 முதல் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் எஸ் ராஜுவுக்குப் ஓய்வுபெற்ற பிறகு ஜனார்தன் பிரசாத் புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
  • 1851-இல் நிறுவப்பட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம்உலகின் பழமையான கணக்கெடுப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • பல ஆண்டுகளாகஇந்திய புவியியல் ஆய்வு மையம்,  பல்வேறு புவிஅறிவியல் தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து பன்முகத்தன்மையோடு  வளர்ச்சியடைந்துபுவிஅறிவியல் துறையில்  குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
விளையாட்டுச் செய்திகள்:-


Card image cap
  • பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்துடென்னிஸ் சகாப்தத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
  • 34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
  • ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார்.

 

அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றவர்கள்

  1. நோவக் ஜோகோவிச் - 23
  2. ரஃபேல் நடால் - 22
  3. ரோஜர் பெடரர்  - 20



முக்கிய நாட்கள்:-



Card image cap
  • குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சர்வதேச பிரச்னைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002-ஆம் ஆண்டில் நிறுவியது.
  • உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பால்(ILO), குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  •   2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் "அனைவருக்கும் சமூக நீதிகுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!"
  • உலகிலே இந்தியாவில் தன் அதிக குழந்தை தொழிலார்கள் உள்ளனர். 2011-இன் கணக்கெடுப்பின்படி10.1 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
  • 2021-22-ஆண்டில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22-ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் நலனுக்காக இந்திய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்

  • சட்டப்பிரிவு 21வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்
  • சட்டப்பிரிவு 21 A : 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி
  • சட்டப்பிரிவு 23ஆட்கடத்தல்பிச்சையெடுக்க வைத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • சட்டப்பிரிவு 24: குழந்தைகளை தொழிற்சாலை அல்லது வேறு அபாயகரமான வேலையில் அமர்த்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
  • சட்டப்பிரிவு 39(e): வேலையாட்களின் உடல்நலத்தையும்திறத்தையும்ஆண்பெண்சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும்மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்
  • சட்டப்பிரிவு 39(f):குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும்அப்படி வாழ்வதற்கான வசதிகளையும்வாய்ப்புகளையும் அளிப்பதற்கும்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும்ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • சட்டப்பிரிவு 45: ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும்
  • சட்டப்பிரிவு 51 A (K): முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது  பெற்றோர்/காப்பாளரின் கடமை

இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க  இயற்றப்பட்டுள்ள சட்டங்கள்

  • கல்வி உரிமைச் சட்டம்,2009- 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு  வழிவகைச் செய்கிறது.
  • குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச்சட்டம், 1986)இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.
  • சிறார் நீதிச்சட்டம், 2000 (குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) - இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களைச் சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
  • குழந்தை உரிமைகள் பாதுகாக்கும் ஆணையங்கள் சட்டம் 2005 (Commissions for Protection of Child Rights Act) இச்சட்டம்மாநிலங்களுக்குமாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களை (SCPCR) உருவாக்கிட மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விரைவாக நடத்த குழந்தைகளுக்கான நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரத்தை அளிக்கிறது.
  • போக்சோ (POCSO) சட்டம், 2012 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

பிற தகவல்கள்

  • 1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண்: இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள்குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
  • PENCIL போர்ட்டல்- குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆன்லைன் புகார்களை தெரிவிப்பதற்கு.
  • சர்வதேச குழந்தைகள் ஆண்டு என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1979

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post