10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 14 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
10x 1 = 10
1. ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்)
அ) மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.
ஆ) ஆற்றல் செலவிடப்படுகிறது
இ) அவை மேல் நோக்கி கடத்துதல் முறையாகும் ஈ) இவை அனைத்தும்
2. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேல் பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது.
அ) புறணி
ஆ) புறத்தோல்
இ) புளோயம்
ஈ) சைலம்
3. நீராவிப்போக்கின் போது வெளியேற்றப்படுவது
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) ஆக்சிஜன்
இ) நீர்
ஈ) இவை எதுவுமில்லை
4. வேர்த்தூவிகளானது ஒரு
அ) புறணி செல்லாகும்
ஆ) புறத்தோலின் நீட்சியாகும்
இ) ஒரு செல் அமைப்பாகும்
ஈ) ஆ மற்றும் இ
5. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
அ) எண்டேகார்டியம்
ஆ) எபிகார்டியம்
இ) மையோகார்டியம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
6. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை?
அ) செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
ஆ) பரவல்
இ) சவ்வூடு பரவல்
ஈ) இவை அனைத்தும்
7. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை
அ) வெண்ட்ரிக்கிள் - ஏட்ரியம் - சிரை - தமனி
ஆ) ஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - சிரை - தமனி
இ) ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் - தமனி - சிரை
ஈ) வெண்ட்ரிக்கிள் - சிரை - ஏட்ரியம் - தமனி
8. விபத்து காரணமாக 'O' இரத்த வகையை சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
அ) O வகை
ஆ) AB வகை
இ) A அல்லது B வகை
ஈ) அனைத்து வகை
9. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது
ஆ) AV கணு
அ) SA கணு
இ) பர்கின்ஜி இழைகள்
ஈ) ஹிஸ் கற்றைகள்
10. இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
அ) பிளாஸ்மா = இரத்தம்+லிம்ஃபோசைட்
ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC +WBC
ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC +WBC + இரத்த தட்டுகள்
சுருக்கமாக விடையளி. 6 × 2 = 12
11. கூட்டிணைவு என்றால் என்ன?
12. மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டை சுற்றோட்டம் என அழைக்கப்படுவது ஏன்?
13. சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக.
14. சைனோ ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கர் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
15. தமனிகள் மற்றும் சிரைகள் வேறுபடுத்துக.
16.வேறுபடுத்துக உடல் இரத்த ஓட்டம் நுரையீரல் இரத்த ஓட்டம்.
III விரிவான விடையளி. 2 x 4 = 8
17.நீராவிப்போக்கு என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
18. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
