போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 01-07-2023
தேசியம் :-

- இந்தியாவில் அரிவாள் செல் ரத்தசோகை நோய் 2047-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
- ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கம் செயல்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
- மத்திய பிரதேசத்தில் 3.57 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அட்டைகளையும் பிரதமர் வழங்குகிறார்.
தமிழ்நாடு :-

- உணவு வணிகங்களுக்கான உரிமம் மற்றும் பதிவுச் சான்று வழங்குதல், உணவு மாதிரிகள் பரிசோதனை, தர மதிப்பீடு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவது தொடா்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தால் ‘ஈட் ரைட் சேலஞ்ச்’ என்ற போட்டி நடத்தப்பட்டது.
- நாடு முழுவதும் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டதில் 31 மாவட்டங்கள் வெற்றி பெற்றன. அதில், தமிழகத்தின் கோவை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூா், திருப்பூா், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலூா் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகளைப் பெற்றன.
- கோவை மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
- மேலும், நிகழாண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக தோ்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது. தில்லியில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகள் அளிக்கப்பட்டன.
- அதை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனா்.
முக்கிய நாட்கள் :-

- GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 29.03.2017 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017- ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் சரக்கு மற்றும் சேவை வரி தினமாக கொண்டாடப்படுகிறது.
- மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கும் மாற்றாக கொண்டுவரப்பட்டது.
- இதன் குறிக்கோள் - "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி"
GST- யின் அமைப்பு
- GST- யின் கீழ் மூன்று வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன
- ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய GST (CGST) ஒன்றிய அரசாலும், மாநில GST (SGST) மாநில அரசினாலும் விதிக்கப்படும்.
- வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த GST (IGST) ஒன்றிய அரசினால் விதிக்கப்படும்.
GST- யின் நன்மைகள்
- அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
- ஒருமுனை வரியாக உள்ளது.
- இணையவழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
- தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
- அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.
- வரி ஏய்ப்புகளை தடுக்கும்.
GST பற்றிய முக்கிய குறிப்புகள்
- GST- யில் உள்ள அடுக்குகள் - 5 அடுக்குகள் / விகிதங்கள் (0%, 5%, 12% 18% மற்றும் 28%)
- GST வரி வரம்புக்குள் வராதவை - பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்கள், மின்சாரம்
- GST அமைப்பை வடிவமைத்த குழு- அசிம் தாஸ் குப்தா
- GST அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்த குழு - விஜய் கேல்கர்
- GST - ஐ நடைமுறைப்படுத்திய அரசியலமைப்புச் திருத்தசட்டம் – 101(2016)
- GST கவுன்சில் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு -279 A
- GST கவுன்சில் தலைவர் - மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்)
- GST- ஐ முதலில் ஏற்றுக்கொண்ட மாநிலம் - அசாம்
- GST - ஐ முதலில் அறிமுகப்படுத்திய நாடு - பிரான்ஸ் (1954)
- தற்போது இந்தியாவில் உள்ள ‘இரட்டை வரி’ GST அமைப்பு எந்த நாட்டை பின்பற்றி அமைக்கப்பட்டது – கனடா
- GST வரி அமலான இந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் இந்த புதிய வரி விதிப்பின் மூலம்ரூ.1.5 லட்சம் கோடி வரி வருவாய் உருவாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- 6 ஆண்டுகளில் அதிக GST வசூலான மாதம் - ஏப்ரல் 2023(ரூ.1.87 லட்சம் கோடி)
- அதிக GST வருவாய் ஈட்டி தரும் மாநிலம் - மகாராஷ்டிரா

- ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1-ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (IMA) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது.
- மகாத்மா காந்தியின் மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சராகவும் பதவி வகித்து, சர்வதேச புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
- 1991ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிதான் சந்திர ராய் பற்றிய குறிப்புகள்
- பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார்.
- இவர் ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர்.
- நாட்டு மக்கள் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருந்தால் தான், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க முடியும் என்று தீவிரமாக நம்பினார்.மக்களின் உடல் நலத்தைப் பேண, ஜடவ்பூர் டிபி மருத்துவமனை, கமலா நேரு நினைவு மருத்துவமனை,விக்டோரியா நிறுவனம் (கல்லூரி), சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சித்தரஞ்சன் சேவா சதான் ஆகியவற்றை உருவாக்க பெரும்பங்காற்றினார்.
- இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர்.
- 1948-ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை, 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
- இவரது பணிகளை பாராட்டும் வகையில் பிப்ரவரி 4,1961-ஆம் ஆண்டு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது.
- சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்ற பிதான் சந்திர ராய், தன்னுடைய பிறந்த தினத்திலேயே 1962-இல் மறைந்தார்.
- 1976 முதல் சிறந்த மருத்துவ சேவை செய்பவர்களுக்கு பி. சி. ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
முக்கிய தகவல்கள்
- தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவலின்படி, நாட்டில் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த 13 லட்சத்து 8ஆயிரத்து 9 மருத்துவர்கள் உள்ளனர்.(ஜூன் 2022 கணக்கெடுப்பின்படி)
- இதில் 80 சதவீதம் அலோபதி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர்.
- இந்தியாவில் 854 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதாசாரம் உள்ளது. இது, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற தரநிலையைவிட மேம்பட்டது.
- இது தவிர 34.33 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியா்கள், 13 லட்சம் துணை மருத்துவ மற்றும் சுகாதார பணியாளா்கள் உள்ளனா்.
- 2020-21 ஆம் ஆண்டுக்கான கொரோனா ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் வருடாந்திர சுகாதாரக் குறியீட்டில் முதல் இடம் பிடித்த மாநிலம் – கேரளா (தமிழ்நாடு - இரண்டாமிடம்)
- இந்தியாவில் அதிக MBBS இடங்களை கொண்ட மாநிலம் - தமிழ்நாடு
- தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளது.
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் 1923-ஆம் ஆண்டில் பொது சுகாதாரத்திற்கென பிரத்யேகமாக நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- நாட்டிலேயே முதன்முதலில் பொது சுகாதார சட்டம் 1939-இல் தமிழ்நாட்டில் தான் இயற்றப்பட்டது.
Tags:
Current Affairs