போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 30-06-2023
தேசியம் :-

- நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல் டிஜிட்டல் பரிவா்த்தனைகளைக் கொண்டவையாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஏற்கெனவே 98 சதவீத ஊராட்சிகள் UPI கட்டமைப்பைக் கொண்டவையாக மாறிவிட்டன. ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான கட்டணங்கள் பொது நிதி மேலாண்மை முறையில் செலுத்தப்படுகின்றன. ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தற்போது டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட உள்ளன.
- டிஜிட்டல் பரிவா்த்தனைகளை மேற்கொள்வது ஊழலைத் தடுக்க உதவும்.
- த்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 12.98 லட்சம் கோடி மதிப்பிலான 806.3 கோடி டிஜிட்டல் பரிவா்த்தனைகள் பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய குறிப்புகள்
- மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் - கிரிராஜ் சிங்
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகச் செயலாளா் - சுனில் குமாா்
தமிழ்நாடு :-

- முதலமைச்சர் மற்றும் அவரின் தலைமையிலான அமைச்சரவை மட்டுமே மாநில நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துகிறது. ஆளுநரின் பெயரால் முதலமைச்சர் மாநில நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.
- சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார்.
- அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கான அதிகாரம் முதல்வருக்கே உள்ளது.
- முதலமைச்சர், ஒரு அமைச்சரை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய சொல்லலாம். சட்டப்பேரவையை கலைக்கவும் முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடியும்.
- அதே போல், ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க தான் முடியும். நிராகரிக்க முடியாது.
- ஒருவேளை முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-வது முறையாக நிராகரிக்கும் பட்சத்தில், மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றிக் கொள்ளலாம்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 191-இன் படி, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் போது, சட்டப்பிரிவு 192-இன் படி ஆளுநர் அவரை தகுதி நீக்கம் செய்யலாம்.
- ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானால் தவிர, அவர் பெயரில் குற்ற வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சராகவோ, எம்.எல்.ஏ-வாகவோ பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லை என ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியாது.
- சட்டப்பிரிவு 163: முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும். ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி, அல்லது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனது விருப்புரிமைப்படி செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- சட்டப்பிரிவு 164: முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். ஆளுநரின் விருப்புரிமைப்படி அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- குறிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இங்கு ஆளுநரின் விருப்புரிமை என்பது தேர்ந்துடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டது.
ஆளுநர் எப்போது தனித்து செயல்படலாம்?
- சட்டப்பேரவையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது, ஆளுநர் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம்.
- அவசர நிலை பிரகடனத்தின் போது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 353-இன் படி, குடியரசு தலைவரால் அனுமதிக்கப்படும் போது மட்டுமே ஆளுநர் அமைச்சரவை குழுவின் ஆலோசனையை புறக்கணிக்க முடியும்.
- மற்றபடி தேர்ந்தெடுக்கப்பட்டுக்கப்பட்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு பொறுப்பில் இருக்கும்போது அமைச்சரவை குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் முடியாது.

- தருமபுரி மாவட்டம், பூதிநத்தம் என்னும் கிராமத்தில் தமிழக அரசு தொல்லியல் துறையால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- இவ்வகழாய்வில் இதுவரை 17 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு 52-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இதில் கடந்த 10.06.2023 அன்று கண்டெடுக்கப்பட்ட கற்கருவியானது C9 என்னும் அகழாய்வு குழியில் சுமார் 36 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றது.
- தற்போது அதே போன்ற மற்றொரு கற்கருவி D9 என்னும் அகழாய்வு குழியில் 28.06.2023 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இக்கருவியின் முனை மிகவும் மழுங்கியும் உடைந்தும் காணப்படுவதால் இக்கருவியினை கொண்டு மரத்தினை வெட்டவோ அல்லது வேட்டையாடவோ பயன்படுத்தி இருக்கலாம் என கருத முடிகிறது.
- மேலும், இக்கற்கால கருவிகள் புதிய கற்காலத்தில் நிலத்தினை உழும் வகையில் ஏர்க்கலப்பையாகவும், வெட்டுவதற்கு கோடரியாகவும் பயன்பட்டிருக்கக்கூடும்.
- இக்கருவி டோலராய்ட் (Doloraid) என்னும் மூலக் கல்லினை கொண்டு செய்யப்பட்டுள்ளது.
- பூதிநத்தம் கள ஆய்விலும், அகழாய்விலும் இதுவரை மொத்தமாக 6 புதிய கற்கால கருவிகள் வெவ்வேறு அகழாய்வு குழிகளில் வெவ்வேறு ஆழத்தல் கிடைத்துள்ளன.
- தொடர்ச்சியாக புதிய கற்கால கருவிகள் கிடைக்கப் பெறுவதாலும் இதனுடன் சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்களி, வட்ட சில்லுகள், சூது பவள மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணலான உருவங்கள் கிடைக்கப் பெறுவதாலும் இப்பகுதி இடைக்கால வரலாற்று தொடக்க காலத்தினை சார்ந்தாக கருதலாம்.
- மேலும் இடைக்காலத்திலும் புதிய கற்கால கருவியானது தொடர்ச்சியாக இப்பகுதியில் பயன்பாட்டில்
- இருந்திருக்கலாம்.
- நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- தமிழகத்தின் புதிய DGP-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் - ஒழுங்கு புதிய DGP-யாகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தற்போது தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் சி.சைலேந்திரபாபு இன்று (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார்.
- உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரி. முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தராகண்டின் குமாவுனி மொழியில் புலமை பெற்றவர்.
- சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். சென்னையின் 108-வது காவல் ஆணையராக சங்கர் ஜிவால் 08.05.2021 முதல் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இவர் தமிழக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பிற முக்கிய நியமனங்கள்
- சென்னை காவல் ஆணையர் - சந்தீப் ராய் ரத்தோர்
- தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் DGP - அருண்
விளையாட்டுச் செய்திகள் :-

- ஆசிய யோகா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஜூன் 24 முதல் 26-ம் தேதி வரை நடந்தது.
- ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா, சீனா, தாய்லாந்து, ஈரான், ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட 30 நாடுகளிலிருந்து 125 யோகா போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
- இதில் இராமநாதபுரம் மாவட்டம் பொசுக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, இந்தியா சார்பில் பங்கேற்றார். இவர் 24 முதல் 28 வயதுக்கு உட்பட்ட பாரம்பரிய யோகா சுற்று மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான குழு யோகா சுற்று ஆகிய 2 போட்டிகளில் முதலிடம் பிடித்து 2 தங்கப் பதக்கங்களை வென்றார். யோகா ஆர்ட்டிஸ்டிக் ஃபேர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
- மேலும் 14 முதல்18 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் கடலாடி மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியின் பிளஸ் 2 மாணவி வில்வ முத்தீஸ்வரி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்
முக்கிய நாட்கள் :-

- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ஆம் தேதி சர்வதேச நாடாளுமன்ற தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1889 ஆம் ஆண்டில் பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் (IPU) நிறுவப்பட்ட நாளையே இந்த தினம் குறிக்கிறது.
- இந்த நாள் நவீன சமூகங்களை வடிவமைப்பதில் அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
- சர்வதேச நாடாளுமன்ற தினத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: 'Parliaments for the Planet'.
முக்கிய குறிப்புகள்
- ‘நாடாளுமன்றம்’ என்ற சொல் மக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் சட்டம் இயற்றப்படும் இடம் என்று அறியப்படுகிறது.
- அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 79-இன் படி இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மற்றும் ஈரவைகளைக் கொண்டது ஆகும். (ஈரவைகள் - மாநிலங்களவை, மக்களவை)
- இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை 1927, ஜனவரி 18 அன்று அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் திறந்து வைத்தார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி 2023, மே 28 அன்று திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்
- புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
- மக்களவை அரங்கு மயில் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. மாநிலங்களவை அரங்கு தாமரையை கருப்பொருளாகக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
- 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
- நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் HCP டிசைன் வழங்கியது.
உலக நாடுகளின் பாராளுமன்ற பெயர்கள்
Country
| Name of Parliament |
Israel | Knesset |
Germany | Bundestag |
Japan | Diet |
Norway | Stortinget |
Nepal | Rashtriya Panchayat |
Pakistan | National Assembly |
Russia | Duma |
U.S.A | Congress |
South Africa | Parliament |
Switzerland | Federal Assembly |
சர்வதேச சிறுகோள் தினம்

- 30 ஜூன் 1908- இல் ரஷ்யாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று வானில் கடந்தது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின.
- இந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது.
- இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.
- ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர்.
- இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Tags:
Current Affairs