போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 12-07-2023
தேசியம் :-

- ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பு(UNDP) உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை(Multidimensional Poverty Index) வெளியிட்டுள்ளது.
- சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது.
- 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 81 நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன.
- கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் 25 நாடுகள் பல்பரிமாண வறுமையை பாதியாகக் குறைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் ஐநா தெரிவித்துள்ளது.
- குறிப்பாக இந்தியாவில், 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்தில் 41.5 கோடி பேர் பல்பரிமாண வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
தமிழகம் :-

- ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 1லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.44.5கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் கூடிய புதிய விடுதி கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில, சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர்.
- சமூகநலத்துறையிலிருந்து பிரித்து ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை தனியே நிறுவப்பட்ட ஆண்டு -1988
பொருளாதாரம் :-

- ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத GST வரி விதிக்க முடிவு
- தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு GST-யில் இருந்து விலக்கு
- செயற்கை ஜரிகை நூல்களுக்கான GST வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
- புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு GST வரி விதிப்பில் இருந்து விலக்கு
- திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான GST வரி 18 சதவீதத்தில் 5 சதவீதமாக குறைப்பு
- கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய GST வரி பாக்கி ரத்து
GST கவுன்சில் பற்றிய குறிப்புகள்
- GST தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட அரசியலமைப்பு கூட்டாட்சி அமைப்பாகும்.
- GST கவுன்சில் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 279 A
- GST கவுன்சில் தலைமையகம் - டெல்லி
- GST கவுன்சிலின் தலைவர் - மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்)
- GST கவுன்சில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 33
- மத்திய அரசின் உறுப்பினர்கள் – 2(நிதியமைச்சரும் துணை நிதியமைச்சரும்)
- மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 31
- GST கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 50% பேர் இடம்பெற்றிருக்க வேண்டும் (தற்போதைய Quorum - 17)
- கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த ஒரு முடிவும் அதிகபட்சமாக 75% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
- இரண்டு உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அரசாங்கத்திற்கான மதிப்பு - மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (33%)
- மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு(67%) அனைத்து மாநிலங்களும் சேர்ந்து பகிர்ந்துகொள்கின்றன.
- பெரும்பான்மைக்கு 75% தேவைப்படுகிறது ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 67% வாக்குகள் மட்டுமே உள்ளதால், இந்த வாக்களிப்பு விகிதம் கவுன்சிலில் மத்திய அரசை அதிக சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.
- மேலும் மத்திய அரசுக்கு 33% வாக்குகள் மட்டுமே உள்ளதால், சில மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் தனியாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது.
முக்கிய நாட்கள் :-
மு

- இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளான ஜூலை 12-ஆம் தேதி, சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது.
- பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.
- 2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா.
- மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார்.
- 2013 ஆம் ஆண்டு மலாலா தனது 16ஆவது பிறந்தநாளான ஜூலை 12-இல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை "மலாலா தினம்" என்று குறிப்பிட்டது. தலிபான்களால் சுடப்பட்டு, பல கட்ட சிகிச்சைக்கு பிறகு மீண்ட மலாலா, முதல் முறையாக பேசியது இதுவே ஆகும்.
- டிசம்பர் 2014-இல், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார், மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
- பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2017-இல் ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டார்.
- எல்லா பெண்களும் கல்வி கற்கவும், அறிவை வளர்க்கவும், வழிநடத்தவும் கூடிய ஒரு உலகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மலாலா தொடர்ந்து போராடி வருகிறார்.
இராணுவம் :-

- ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ்(HAL) நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை, இந்தியா - மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், கோலாலம்பரில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிக்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடு மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
HAL பற்றிய குறிப்புகள்
- நிறுவப்பட்ட ஆண்டு - 1964
- தலைமையகம் - பெங்களூரு
Tags:
Current Affairs