போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 16-08-2023
தேசியம் :-

- மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது. அங்குள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காணப்படும்
- 2014- ஆம் ஆண்டில் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 2023- ஆம் ஆண்டில் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும்,அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.
- 2047-ஆம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும்.
- பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்(OBC) சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில் ‘விஷ்வகர்மா திட்டம்’ தொடங்கப்படும். சுமார் ரூ.13-15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் தொடங்கும் இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
- இரண்டு கோடி ‘லக்பதி தீதி’ (லட்சாதிபதிப் பெண்) உருவாக்குவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருவகிறது. இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளனர்.
- 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்குவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் கடன் மற்றும் பயிற்சி வழங்கப்படும் "ட்ரோன் கி உடான்" திட்டம் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்படும்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு, 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குச் சென்றது ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது, இன்று அது ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
- முன்பு ஏழைகளின் வீடுகளைக் கட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்று அது 4 மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.
- சில உலகளாவிய சந்தைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகளை, நமது விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அரசாங்கம் நம் விவசாயிகளுக்கு யூரியாவுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
- சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட 'முத்ரா திட்டம்', நம் நாட்டு இளைஞர்களுக்கு சுயதொழில், தொழில் மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.முத்ரா திட்டத்தின் மூலம் 8 முதல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் எட்டப்பட்டுள்ளது.
- மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
- வீட்டுவசதித் திட்டங்கள், ரூ. 50,000 கோடி ஒதுக்கீட்டில் தெருவோர வியாபாரிகளுக்கு ‘பிரதமரின் ஸ்வநிதித் திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களின் விளைவாக 13.5 கோடி ஏழை மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு, புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர்.
- மனித வளம், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை இந்தியாவின் அனைத்து கனவுகளையும் நனவாக்கும் வல்லமை கொண்டது. உலகளாவிய அளவில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் வசிக்கும் நாடு என்றபெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
- உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க உகந்தநாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய இளைஞர்களே காரணம்.

- வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987-இல் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்’ நிறுவப்பட்டது. இதை அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் தொடங்கி வைத்தார்.
- 1993-இல் இந்த அமைப்பு டெல்லியிலிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு மாற்றப்பட்டது.
- இந்த அமைப்பின் முக்கியப் பணி, வேத பாடசாலைகளை உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். தற்போது நாடு முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவர்கள் சம்ஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்து வருகின்றனர்.
- இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு நிறைவுச் சான்றிதழ்களை வைத்து உயர் கல்வியில் சேர முடியும்.
- இந்த மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் அமைப்பு மூலம் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்நிலையில் வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ராமேசுவரம், பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

- கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சையை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்தார்.
- இதன் மூலம் நாட்டில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது.
- IVF சிகிச்சை மையத்துடன் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) மற்றும் இன்ட்ரா கருப்பையக கருவூட்டல் (IUI) மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
முக்கிய குறிப்புகள்
- கோவா மாநில முதல்வர் - பிரமோத் சாவந்த்
- கோவா மாநில ஆளுநர் - பி.எஸ்.ஸ்ரீதரன்
சர்வதேசம் :-

- பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
- இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை இடைக்காலப் பிரதமர் தலைமையிலான அரசு நடத்துவதற்கேற்ப, கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) இடைக்காலப் பிரதமராக அன்வாருல் ஹக் காதர் தேர்வு செய்யப்பட்டார்.
- பிரதமர் பதவியில் இருந்த ஹெபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்த ராஜா ரியாஸ் ஆகியோர் மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நாட்டின் இடைக்காலப் பிரதமராக அன்வாருல் ஹக் காதரை தேர்வு செய்தனர்.
- இதையடுத்து, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழ்நாடு :-

- தமிழ்நாட்டில் இருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் அரசு வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்துக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும்.
- அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தில் தினமும் 50 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இத்திட்டத்துக்கு ‘விடியல் பயணம்’ என பெயர் சூட்டப்படுகிறது.
- புதுமைப்பெண் திட்டத்தில், இந்த ஆண்டில் உயர்கல்வி பயிலும் 2.11 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டம் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கப்படுகிறது.இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஓலா, ஸ்விகி, ஸ்மோட்டா போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும்.
- சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் ரூ 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்.
- இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக் காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடியில், 10 ஆயிரம் பேருக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரை தக்க உதவி செய்யவும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தில் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், மேலும் 500 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்கள் நடப்பு ஆண்டில் நிரப்பப்படும்.
விருதுகள் :-

- தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் ‘தகைசால் தமிழர் விருது’ - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
- அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘அப்துல் கலாம் விருது’- விஐடி பல்கலைக்கழக கணித பேராசிரியர் டபிள்யூ.பி.வசந்தா
- துணிவு மற்றும் சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா.முத்தமிழ்ச்செல்வி
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்
சிறந்த மாநகராட்சி
- திருச்சி
- தாம்பரம்
சிறந்த நகராட்சி
- ராமேஸ்வரம்
- திருப்புறைப்பூண்டி
- மன்னார்குடி
சிறந்த பேருராட்சி
- விக்கிரவாண்டி
- ஆலங்குடி
- வீரக்கால்புதூர்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்
- மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் விருது - கோவை மாவட்டம் உதவும் கரங்கள் நிறுவனத்தை சேர்ந்த ரத்தன் வித்யாகர்
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்காக சிறந்த தொண்டு நிறுவன விருது - ‘சாந்தி நிலையம்’(கன்னியாகுமரி)
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்காக சிறந்த மருத்துவர் விருது - டாக்டர் த.ஜெயக்குமார்(சென்னை)
- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக சிறந்த தனியார் நிறுவன விருது - டெடி எக்ஸ்போர்ட் நிறுவனம்(மதுரை)
- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி அளிப்பதில் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி- ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
மகளிர் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்
- மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் - ‘கிராமத்தின் ஒளி’(கள்ளக்குறிச்சி மாவட்டம்)
- மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது - ஸ்டான்லி பீட்டர்(கோவை மாவட்டம்)
தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் -2023
- சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் - கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைத்து சிகிச்சை அளித்ததற்காக
- கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் - பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக
- கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் - நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது மகப்பேறு இறப்புகளை குறைத்தது மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியமைக்காக
- கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் - இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும் திட்டத்துக்காக
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான செயலியை உருவாக்கியதற்காக
தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்
- போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.
- அஸ்ரா கார்க், ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர்.
- வி. பத்ரிநாராயணன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- டோங்கரே பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- எம். குணசேகரன், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்.
- எஸ். முருகன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்.
- ஆர். குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380.
சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்
- க. வெங்கடராமன்- கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
- அஸ்ரா கர்க்- காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
- சு. ராஜேந்திரன்- காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
- ப.ஹீ. ஷாஜிதா - காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
- ஹா. கிருஷ்ணமூர்த்தி -காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது
- ஆண்கள் பிரிவு
- சி.தஸ்தகீர்(நீலகிரி)
- ரா.தினேஷ்குமார்(திருச்சி)
- கோ.கோபி(ராணிப்பேட்டை)
- ப.ராஜசேகர்(செங்கல்பட்டு)
- பெண்கள் பிரிவு
- மு.விஜயலட்சுமி(சென்னை)
- செ.சந்திரலேகா(மதுரை)
- தா.கவிதா தாந்தோணி(காஞ்சிபுரம்)
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்-

இந்தியா
- இந்திய விமானப்படை துணைத் தளபதி - ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித்
- இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவர் - ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா
- சென்னையில் உள்ள தென்பிராந்திய (தக்ஷிண பாரத்) ராணுவ அதிகாரி- லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார்
- தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை அதிகாரி- ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா
- எல்லை பாதுகாப்புப் படை (BSF) தலைமை இயக்குநர் - சுஜோய் லால் தாவ்சென்
- இந்திய கடலோர காவல்படையின் 25-வது தலைமை இயக்குநர் - ராகேஷ் பால்
- ரயில்வே பாதுகாப்பு படைக்கு(RPF) தலைமை இயக்குநர் - மனோஜ் யாதவா
- இந்திய உளவு அமைப்பின்(RAW) புதிய செயலாளர் - ரவி சின்ஹா
- துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- பங்கஜ் குமாா் சிங் (தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - அஜீத் தோவல்)
- இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் 28-வது கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெனரல்(CGA) - எஸ்.எஸ்.துபே
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்(CVC)- பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா
- மத்திய பணியாளர் தேர்வாணையக் குழு(UPSC)-யின் தலைவர்- மனோஜ் சோனி
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பொறுப்பு தலைவர்- நீதிபதி எஸ் கே சிங்
- இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) தலைமை இயக்குநர்- ஜனார்தன் பிரசாத்
- இந்திய போட்டி ஆணையத்தின்(CCI) தலைவர் - ரவ்னீத் கவுர்
- தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குநர்- பிரவீன் சர்மா
- இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி- அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா
- ரிசர்வ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர்- பி.வாசுதேவன்
- LIC-யின் புதிய நிா்வாக இயக்குநர்- சத்பால் பானு
- ONGC நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்- அல்கா மிட்டல்
- ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி- அனில் குமார் லஹோட்டி
- தேசிய தூய்மை பணி ஆணையத்தின்(National Commission for Safai Karamcharis) தலைவர்- ம.வெங்கடேசன்
- Bharat Heavy Electricals Limited (BHEL) இயக்குநர்- கிருஷ்ண குமார் தாக்குர்
- இந்திய வர்த்தக தொழிலக கூட்டமைப்பான 'அசோசாம்'(Assocham) அமைப்பின் தலைவர் - அஜய் சிங்
- இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தலைவர் - ஆர். தினேஷ்
- டாடா கன்சல்டன்சி சா்வீஸின் (TCS) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி(CEO) - கே. கீா்த்திவாசன்
- சென்னை விமான நிலைய இயக்குநர் - சி.வி.தீபக்
- கர்நாடக சட்டப்பேரவை அவைத் தலைவர்- யு.டி. காதர்
- இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புத் தலைவர்- ஆதவ் அர்ஜூனா
- இந்திய கிரிக்கெட் ஆடவா் அணி தோ்வுக் குழு தலைவர்- அஜித் அகா்கா்
சமீபத்தில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்
- கொல்கத்தா - டி.எஸ். சிவஞானம்
- சென்னை - சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா
- கேரளா - ஆசிஷ் ஜே தேசாய்
- ஒடிசா - சுபாஷிஸ் தலபத்ரா
- மகாராஷ்டிரா- தேவேந்திர குமார் உபாத்யாயா
- குஜராத்- சுனிதா அகர்வால்
- தெலங்கானா- அலோக் ஆராதே
- ஆந்திர பிரதேசம் - திராஜ் சிங் தாக்குர்
2023-ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள்
- ஆந்திரப் பிரதேசம் - அப்துல் நசீர்
- அருணாசலப் பிரதேசம் - கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்
- அசாம் - குலாப் சந்த் கட்டாரியா
- பீகார்-இராசேந்திர அர்லேகர்
- சத்தீஸ்கர் - பிசுவபூசண் அரிச்சந்தன்
- இமாச்சலப் பிரதேசம்- சிவ பிரதாப் சுக்லா
- ஜார்க்கண்ட்- கோ. போ. இராதாகிருஷ்ணன்
- மகாராஷ்டிரா - ரமேஷ் பைஸ்
- மணிப்பூர்- அனுசுயா யுகே
- மேகாலயா - பாகு சவுகான்
- நாகாலாந்து- இல. கணேசன்
- சிக்கிம்- லட்சுமன் ஆச்சார்யா
தமிழகம்
- தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளர் - சிவ்தாஸ் மீனா
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் - ஆர்.பழனிகுமார்
- தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையர் - ஷகீல் அக்தர்
- சென்னை மாவட்ட ஆட்சியர் – அருணா
- சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் - ஜெ.ராதாகிருஷ்ணன்
- தமிழக காவல் துறையின் தலைவர்(சட்டம் - ஒழுங்கு புதிய DGP) - சங்கர் ஜிவால்
- சென்னை காவல் ஆணையர் - சந்தீப் ராய் ரத்தோர்
- மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத் தலைவர் - சீமா சின்ஹா
- தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி- ஏ.கே.எஸ். விஜயன்
- பள்ளிக்கல்வி இயக்குநர் - க.அறிவொளி
- மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் - டாக்டர் ஆர்.சாந்திமலர்
- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் - எஸ்.ஆறுமுகம்
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் - கே.கலா
- எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் - நாராயணசாமி
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்- ஜெயந்தி
- கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் - B. வெங்கட்ராமன்
- முதல் பெண் யானை பராமரிப்பாளர் - பெள்ளி (ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படத்தில் நடித்தவர்)
சர்வதேசம்
- யூடியூப்-இன் தலைமை செயல் அதிகாரி - நீல் மோகன்
- ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO)- லிண்டா யாக்கரினோ
- நாசா தலைமை தொழில்நுட்ப நிபுணர் - ஏ.சி.சரணியா
- அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநரான முதல் இந்திய வம்சாவளி பெண் - அருணா மில்லர்
- அமெரிக்காவின் முதல் சீக்கிய பெண் நீதிபதி- மன்பிரீத் மோனிகா
- உலக வங்கி தலைவர் - அஜய் பங்கா
- உலக ஐ.நா. கூட்டமைப்புகள் சம்மேளன துணைத் தலைவர் - இந்தியரான சுரேஷ் ஸ்ரீவாஸ்தவா
- 78வது ஐ.நா. பொதுச்சபை தலைவர்- டென்னிஸ் பிரான்சிஸ்
- உலக வானிலை ஆய்வு அமைப்பின் துணைத் தலைவார் - இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா
- பிரேசில் நாட்டின் 39-வது அதிபர் - லுலாடா சில்வா
- நியூசிலாந்து பிரதமர் - கிறிஸ் ஹிப்கின்ஸ்
- பின்லாந்து பிரதமர் - பெட்டேரி ஓர்போ
- நேபாள அதிபர்- ராம்சந்திர பவுடேல்
- நைஜீரிய அதிபர் - போலா டினுபு
- வங்கதேசத்தின் 22-வது அதிபர் - மொகமத் ஷகாபுதீன்
- ஆப்கானிஸ்தான் பிரதமர் - மவுலவி அப்துல் கபீர்
இறப்பு :-

- இந்தியாவின் ‘கழிவறை மனிதர்’ என அறியப்பட்ட பிந்தேஷ்வர் பதக் நேற்று (ஆகஸ்ட் 15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிந்தேஷ்வர் பதக் பற்றிய குறிப்புகள்
- தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் பொதுக் கழிப்பறைகள் அதிக அளவிலான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்.
- பிந்தேஷ்வர் பதக் 1970 ஆம் ஆண்டு சுலாப் இண்டர்நேஷனல் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சுகாதாரம் சார்ந்த நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
- திறந்தவெளி மலம் கழித்தலுக்கு எதிராக அவர் பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். அவரை ‘சானிடேசன் சாண்டா கிளாஸ்’ எனவும் அழைக்கின்றனர்.
- அவரது சுலாப் இண்டர்நேஷனல் மனித உரிமைகள், சமுதாய சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. அவரது இந்த சேவைகளுக்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
முக்கிய நாட்கள் :-

- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று(ஆகஸ்ட் 16) அனுசரிக்கப்படுகிறது.
வாஜ்பாய் அரிய தகவல்கள்:
- அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் (1924) பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
- விக்டோரியா கல்லூரியில் சமஸ் கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பில் சேர்ந்தவர், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார்.
- ‘பாஞ்சஜன்யா’ என்ற இந்தி வார இதழ், ‘ராஷ்டிரதர்மா’ என்ற இந்தி மாத இதழ், ‘அர்ஜுன்’, ‘ஸ்வதேஷ்’ நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ‘பாரதிய ஜனசங்கம்’ கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக செயல்பட்டார்.
- நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவை கட்சித் தலைவராக 1957 முதல் 1977 வரை இருந்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர்.
- பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு அமைச்சராக அங்கம் வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார்.
- நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். பாஜகவை சேர்ந்த வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
- இவரது ஆட்சியில், பொக்ரானில் 5 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
- இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டவர். இவரது ஆட்சிக்காலத்தில், டெல்லி - லாகூர் இடையே பஸ் போக்குவரத்துடன், பாகிஸ்தானுடனான அமைதிக்கான நம்பிக்கையும் துளிர்விட்டது. சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் தவிர்த்து முதல்முறையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தது இவரது அரசு மட்டுமே.
- மக்களவை உறுப்பினராக 9 முறை, மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை இருந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் இவரது ஆழமான கருத்துகளும், அவற்றை இவர் வெளியிடும் பாங்கும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன.
- இவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- பல நூல்கள், கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 1992-ல் பத்மவிபூஷன் விருது பெற்றார். கான்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு தத்துவத்துக்கான டாக்டர் பட்டம் வழங்கியது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, லோகமான்ய திலகர் விருது, கோவிந்த வல்லப் பந்த் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நாட்டின் மிக உயரிய ‘பாரத் ரத்னா’ விருது 2015 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.
- இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையாகப் புகழ் பெற்ற இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் மறைந்தார்.
- அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 25, நல் நிர்வாகம் தினமாகக்(Good Governance Day) கொண்டாடப்படுகிறது.
Tags:
Current Affairs