போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 17-08-2023
தேசியம் :-

- நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, புதுடில்லியில் 28 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள, 'தீன் மூர்த்தி பவன்' என்ற பங்களாவில் வசித்து வந்தார்.
- அவரது மறைவுக்குப் பின், அந்த பங்களா அரசுடைமை ஆக்கப்பட்டு, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகமாக(NMML) மாற்றப்பட்டது
- இதன் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) சொசைட்டி என மாற்ற கடந்த ஜூன் மாதத்தில் முடிவு செய்யப்பட்டது.
- இந்த பெயர் மாற்றம் தற்போது ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வந்துள்ளது.

- பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, 2,339 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே வழித்தடங்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்கம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
‘பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டம்
- பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் இத்திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.
- மேலும், இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இதில் வழங்கப்படும். அதோடு, நவீன உபகரணங்களை வாங்க ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
- இத்திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தியை(செப்டம்பர் 17) முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெரும் 18 பாரம்பரிய தொழில்கள் - தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல்
பிரதமரின் இ-பேருந்து சேவை திட்டம்
- 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 169 நகரங்கள் நாடு முழுவதும் தேர்வுசெய்யப்பட்டு அந்த நகரங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 10,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
- இத்திட்டத்தின் மதிப்பு ரூ.57,613 கோடி. இதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும்.
- இத்திட்டம் மின்சார பேருந்துகள் இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு ஆதரவு அளிக்கும்.
- இத்திட்டம் மூலம் நகரப் பேருந்து சேவையில் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

- ரூ.14,903 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட விரிவாக்கத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
விரிவாக்கத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- தகவல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் பேருக்குத் தகவல் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
- புதுயுக ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு திட்டத்தின் கீழ் உள்ள UMANG செயலி /இணையதளம் கூடுதலாக 540 சேவைகளுக்குக் கிடைக்கும். தற்போது 1,700-க்கும் அதிகமான சேவைகள் உமாங்கில் ஏற்கனவே கிடைக்கின்றன.
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். ஏற்கெனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
- செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பல மொழிகளின் மொழிபெயர்ப்பு கருவியான ‘பாஷினி’, 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது 10 மொழிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
- 1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பு நவீனமாக்கப்படும்.
- டிஜிலாக்கர் மூலமான டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி MSME மற்றும் பிற நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.
- 12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும்.
- சுகாதாரம், விவசாயம் மற்றும் மாற்றத்தை ஏற்றுத் தாங்கவல்ல நகரங்கள் குறித்த செயற்கை நுண்ணறிவின் மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
முக்கிய குறிப்பு
- இந்தியாவை மின்னணுத் துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜூலை 1, 2015 அன்று தொடங்கப்பட்டது
தமிழ்நாடு :-

- தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்வதால் செலவினம் அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது.
- இந்த இடர்பாடுகளை களையும் நோக்கத்துடன் ஒன்றிய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் (DTIS), இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை(Unmanned Aerial Systems Common Testing Centre) அமைக்க TIDCO நிறுவனம் திட்டமிட்டது.
- அதன் அடிப்படையில், Keltron, Sense image, Standard Testing & Compliances மற்றும் Aviksha Retailers முதலான நான்கு நிறுவனங்கள் TIDCO- வுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன.
- இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும்.
- இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.
- ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழவும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையை பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்கும்.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையின் மேம்பாட்டுக்கான முகவாண்மை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) செயல்பட்டு வருகிறது.
- TIDCO தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1965

- சுயஉதவிகுழுக்களின் தயாரிப்புகளை விற்க,‘மதி சந்தை’ என்ற இணையவழிவிற்பனை தளம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இதுதவிர, உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்கவும்முக்கிய சுற்றுலா தலங்களில் ‘மதிஅங்காடிகள்’ நிறுவப்படும்.
- பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்பட உள்ளன.
- சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட உள்ளன.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- சுனில் மாத்தூர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக(Principal Chief Commissioner of Income Tax) பொறுப்பேற்றுக்கொண்டார்.
- அவர் 1988ஆம் பிரிவை சேர்ந்த இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரி ஆவார்.
விளையாட்டுச் செய்திகள் :-

- பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் ஆகியவை இணைந்து ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’ என்ற பெயரில் கார் பந்தய போட்டியை சென்னையில் நடத்த உள்ளனர்.
- F4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகியவை வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் மின்னொளியில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட உள்ளது.
- இதன் மூலம் இந்த போட்டி இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் இரவு நேரத்தில் சாலையில் நடத்தப்படும் முதல் கார் பந்தய போட்டி என்ற பெருமையை பெற உள்ளது.
- இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.42 கோடி நிதி வழங்குகிறது. மேலும் சாலை கட்டமைப்பு, போட்டி பணிகளுக்காக தனியார் பங்களிப்பாக சுமார் ரூ.200 கோடி வரை செலவிடப்பட உள்ளதாக போட்டி அமைப்பார்கள் தெரிவித்தனர்.
Tags:
Current Affairs