போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 18-08-2023
தேசியம் :-

- வெள்ளம் காரணமாக, உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் தடுக்கும் நோக்கிலும், வெள்ள சூழலைக் கண்காணிக்கும் நோக்கிலும் ‘FloodWatch’என்ற செயலியை மத்திய நீர் ஆணையம்(Central Water Commission) உருவாக்கியது.
- 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலவும் வெள்ள சூழலைக் கண்காணிக்கும் வகையிலும், அத்தகவல்களை மக்களுக்குக் கொண்டுசோ்க்கும் நோக்கிலும் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள 338 வானிலை ஆய்வு மையங்கள் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தச் செயலி வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும். 7 நாள்கள் வரையிலான வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் இந்தச் செயலி வழங்கும்.
- தற்போதைய சூழலில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் இந்தச் செயலி விரிவாக்கம் செய்யப்படும்.
மத்திய நீர் ஆணையம் பற்றிய குறிப்புகள்
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
- தலைவா் - குஷ்வீந்தா் வோரா
தமிழ்நாடு :-

- 60 வயதுக்கு மேற்பட்ட 15,000 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்.
- மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு தொகை ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- 45,000 மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
- தூத்துக்குடி, நெல்லை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரிக்கப்படும்.
- காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- தங்கச்சி மடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். ஊந்துகாலில் மீன் இறங்குத்தளமும், பாம்பனில் தூண்டில் வளைவும் அமைக்கப்படும்.
- மீனவ கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளை பாதுகாக்கவும் கடலோர மேலாண்மை திட்டம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
- 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
- விசைப்படகுகளுக்கு 19,000 லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4,400 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும்
- அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களும் ரூ.1000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முக்கிய குறிப்புகள்
- தமிழக கடற்கரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்டது(குஜராத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவது நீளமான கொண்ட மாநிலம் தமிழ்நாடு)
- தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கை - 14
- மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் தமிழகம் உள்ளது.

- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில், அங்கிருந்து 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- மேலும், இதே இடத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்கப்பட்டு, இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- இங்கிருந்து சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி பானை, தோசைக் கல், இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகழாய்வின் போது, சங்கு கலைப் பொருள்கள் உற்பத்திக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுரம், உருண்டை வடிவிலான மெருகூட்டும் கற்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சல்லடை, பானை உள்பட 10-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இதன் மூலம், இங்கு நம் முன்னோா்கள் வசித்ததற்கான ஆதாரமும், அவா்கள் தொழிலில் ஈடுபட்டதற்கான அடையாளமும் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
- இந்த நிலையில், தற்போது தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிராம் எடைக்கொண்ட தங்கத் தாலியில் 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2023-இல் தமிழகத்தில் அகழாய்வுகள் நடைபெறும் இடங்கள்
- கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள தொல்லியல் தளங்கள் (அகரம், கொந்தகை) - சிவகங்கை மாவட்டம்
- கங்கைகொண்ட சோழபுரம் - அரியலூர் மாவட்டம்
- வெம்பக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்
- துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்
- கீழ்நமண்டி - திருவண்ணாமலை மாவட்டம்
- பொற்பனைக்கோட்டை - புதுக்கோட்டை மாவட்டம்
- பூதிநத்தம் - தருமபுரி மாவட்டம்
- பட்டறைப்பெரும்புதூர் - திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரே ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்வது, தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
விருதுகள் :-

- உலகை அச்சுறுத்தி வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான தீர்வுகளை உருவாக்கும் இளைஞர்களுக்கு (8 முதல் 16 வயது) ஆண்டுதோறும் அமெரிக்காவின் ‘ஆக்சன் பார் நேச்சர்' என்ற அமைப்பு விருதுகளை வழங்கி வருகிறது.
- இதன்படி, நடப்பு ஆண்டுக்கு சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க தேவையான முன்முயற்சிகளை மேற்கொண்டதில் உலகம் முழுவதிலுமிருந்து 17 இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
விருது வென்ற 5 இந்தியர்கள்
- எய்ஹா தீக்சித் (மீரட்)
- மன்யா ஹர்ஷா(பெங்களூர்)
- நிர்வான் சோமானி(டெல்லி)
- மன்னத் கவுர் (டெல்லி)
- கர்னவ் ரஸ்தோகி (மும்பை)
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.
- இதில் தலைவராக பிரிட்டனை சேர்ந்த செபாஸ்டியன் கோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2015 முதல் செபாஸ்டியன் கோ தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் கொண்டது.
- துணைத் தலைவர்களாக இந்திய தடகள சங்கத்தின் தலைவர் ஆதில் சுமரிவாலா, கென்யா தடகள சங்கத்தின் தலைவர் ஜாக்சன் டுவி, கொலம்பியாவின் ஸிமெனா ரெஸ்ட்ரேபோ, ஸ்பெயினின் ரால் சாபடோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- 65 வயதான சுமரிவாலா, துணைத் தலைவர் பதவியில் 4 வருடங்கள் இருப்பார்.
- இதன் மூலம் வலிமையான உலக தடகள நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமரிவாலா.
விளையாட்டுச் செய்திகள் :-

- உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது.
- இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஷிவா நார்வால், சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,734 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
- சீன அணி 1,749 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கமும், ஜெர்மனி 1,743 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றது.
முக்கிய நாட்கள் :-

- 1897- ஒடிசா மாநிலம் கட்டாக்கில், வங்காள குடும்பத்தில் பிறந்த சுபாஷ் சந்திர போஸ், பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார். பின்னர் கொல்கத்தா மாநில கல்லூரியிலும், ஸ்காட்டிஷ் கல்லூரியிலும் தத்துவம் பயின்றார்.
- 1919- கொல்கொத்தா பல்கலைகழக தேர்வுகளில் இரண்டாவது மாணவராக தேர்ச்சி பெற்று, இளங்கலை பட்டம் பெற்றார்.
- 1920- பிரிட்டன் சென்று கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இந்தியாவிற்கான ICS தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். ஆனால் அந்த வாய்ப்பை தூக்கியெறிந்து விட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அதிர் வலைகளை ஏற்படுத்தினார்.
- 1921- இந்தியா திரும்பிய போஸ், மகாத்மா காந்தியை சந்தித்து, இந்திய விடுதலை போராட்டம் குறித்து பல கேள்விகளை எழுப்பினார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து, சித்தரஞ்சன் தாஸின் தொண்டராக, தீவிரமாக பணியாற்றினார்.
- 1925- விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட போஸ், மியான்மருக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1927- விடுதலை செய்யப்பட்ட போஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
- 1930- கொல்கொத்தாவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1938- காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ், காந்தியின் அகிம்சை வழிமுறைகளை நிராகரித்ததால், இருவருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன.
- 1939- காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த போஸ், ஃபார்வார்ட் பிளாக் கட்சியை தொடங்கினார்.
- 1941 - இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின், ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
- 1943 - இந்திய விடுதலைக்கு ஹிட்லரின் உதவியை நாடிய போஸ், ஜப்பானிற்கு சென்றார். ஜப்பானியர்கள் உதவியுடன், சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இணைந்தனர். அசாம் மற்றும் இதர வட கிழக்கு மாநிலங்கள் மீது ஜப்பானிய ராணுவம் படையெடுத்த போது, இந்திய தேசிய ராணுவம் அதனுடன் இணைந்து போரிட்டது. ஆனால் போரில் தோல்வியடைந்ததால், பின் வாங்க வேண்டிய நிலை உருவானது.
- 1945 ஆகஸ்ட் 18- தைவானில் இருந்து விமானம் மூலம் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போஸ், விமான விபத்தில் உயிரிழந்தார்.
இராணுவம் :-

- ‘Project 17A’ திட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட INS விந்தியகிரி போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (ஆகஸ்ட் 17) தொடங்கிவைத்தார்.
INS விந்தியகிரி பற்றிய குறிப்புகள்
- கர்நாடகாவில் உள்ள மலையின் பெயர் (விந்தியகிரி) இக்கப்பலுக்கு சூட்டப்பட்டு இருக்கிறது.
- 6,670 டன் எடை, 488 அடி நீளம், 59 அடி அகலம் கொண்ட இக்கப்பலில் மின்சார, டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
- இதில் 35 அதிகாரிகளும் 226 வீரர்களும் பணியாற்ற உள்ளனர்.
- நீர்மூழ்கிகளை அழிக்கும் ஏவுகணைகள், எதிரி போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்களை தாக்கி தகர்க்கும் ஏவுகணைகள் கப்பலில் பொருத்தப்பட்டு உள்ளன.
- ரேடார் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டறியும் கருவிகளும் நிறுவப்பட்டு உள்ளன.
- 2 ஹெலிகாப்டர்களையும் கப்பலில் நிறுத்த முடியும்.
- இவை தவிர அதிநவீன பிரம்மோஸ், பாரக் 8 ரக ஏவுகணைகளையும் கப்பலில் பொருத்த முடியும்.
- இந்தபோர்க்கப்பல் வரும் 2026-ஆம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
முக்கிய குறிப்புகள்
- உலகின் வலுவான கடற்படையை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவிடம் தற்போதுள்ள போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை சுமார் 150 ஆக உள்ளது.
- இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 2027-ஆம் ஆண்டுக்குள் 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- இதன் ஒரு பகுதியாக ‘Project 17A’ என்ற திட்டத்தின் கீழ் INS நீலகிரி, INS உதயகிரி, INS தாராகிரி, INS மகேந்திரகிரி, INS ஹிம்கிரி, INS துனாகிரி, INS விந்தியகிரி ஆகிய 7 போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணி கடந்த 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இதில் நீலகிரி, உதயகிரி, தாராகிரி, ஹிம்கிரி, துனாகிரி ஆகிய 5 போர்க்கப்பல்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பல்வேறு வகைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வரும் 2024, 2025-ஆம் ஆண்டுகளில் இந்த 5 போர்க்கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
Tags:
Current Affairs