போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 19-08-2023
தேசியம் :-

- இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் வீடு, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திறந்து வைக்கப்பட்டது.
- ராணுவ கட்டுமானங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சியின் அடிப்படையில் கவுஹாத்தி ஐஐடி மூலம் ராணுவ நிலை அலுவலகங்கள் கடந்த ஆண்டு கட்டப்பட்டன.
- தெலங்கானாவின் சித்திபெட் பகுதியில் 3,800 சதுர அடி பரப்பளவில் கோவில் ஒன்று 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.
- இதன் தொடர்ச்சியாக, 3டி பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட முதல் தபால் நிலையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது.
3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பம் என்றால் என்ன?
- கனிணி மூலம் வரையப்பட்ட ஒரு ஓவியத்தை பிரின்ட் எடுப்பதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக இதை குறிப்பிடலாம்.
- ஒரு கட்டுமானத்தை எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை கனிணி மூலம் வரைந்து, 3டி முறையில் ரோபோ அமைப்புகளைக் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.
- இத்தகைய கட்டுமானத்துக்கு செலவு குறைவு என்றும், வழக்கமான கட்டுமானச் செலவில் 4-ல் ஒரு பங்கு மட்டுமே செலவாகும் என்றும், அதேபோல், வழக்கமான கட்டுமானத்துக்கான கால அளவைவிட மிக குறைந்த கால அளவில் இந்தக் கட்டுமானங்களை கட்டி முடிக்க முடியும் என்றும் 3டி பிரின்டிங் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு :-

நடப்பு நிகழ்வுகள்
- 2022-ஆம் ஆண்டிற்கான, நாட்டிலேயே எஸ்.ஐ., க்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக, தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் சுழற்கோப்பை வழங்கி உள்ளது. தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகம் அமைந்துள்ள இடம் - வண்டலூர், சென்னை.
- 2023 ஆண்டு தமிழகத்தில் ‘பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு’ கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் சென்னை துறைமுகம் முதல் கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர். – சிவன்யா (தமிழகத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் - பிரித்திகா யாஷினி)
- காவலர் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், காவலர் நலன் காத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(முதல் காவல் ஆணையம் ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது)
- குடியரசு தினவிழாவையொட்டி, மாநிலத்தில் உள்ள சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இதில் சிறந் காவல் நிலையத்துக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையமும், இரண்டாம் பரிசு திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையமும், மூன்றாவது பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் வழங்கப்பட்டது.
- சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டம் “ஸ்காச் தங்க விருது”(Skoch Award-2022 - Gold) வென்று சாதனை படைத்துள்ளது.(காவல் கரங்கள் திட்டம் - சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்)
- கனடாவில் நடைபெற்ற உலக காவல்துறை தடகளப் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் வேகநடை பிரிவில் 3-வது முறையாக தங்கம் வென்றார்.
- கனடாவின் வின்னிபெக் நகரில் சர்வதேச அளவில் காவல் துறை, தீயணைப்பு, மீட்பு படையினருக்கான ' Police and Fire’ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்த தலைமை காவலர் லீலாஸ்ரீ, அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டிகள் கொண்ட 'ஹெப்டத்லான்' பிரிவில் கலந்து கொண்டு விளையாடி தங்கம் வென்றார். மேலும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
தமிழக காவல்துறையில் முக்கிய நியமனங்கள்
- தமிழக காவல் துறையின் புதிய தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு DGP - சங்கர் ஜிவால்
- சென்னை காவல் ஆணையர் - சந்தீப் ராய் ரத்தோர்
- தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் DGP - அருண்
சென்னை பெருநகர காவல் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- காவல் கரங்கள் - சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கவும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யவும் செயல்படுத்தப்படும் திட்டம்
- சிற்பி - மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்
- ஆனந்தம் - பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்
- மகிழ்ச்சி - தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்-2023
- போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.
- அஸ்ரா கார்க், ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர்.
- வி. பத்ரிநாராயணன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- டோங்கரே பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- எம். குணசேகரன், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்.
- எஸ். முருகன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்.
- ஆர். குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380.
சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்-2023
- க. வெங்கடராமன்- கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
- அஸ்ரா கர்க்- காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
- சு. ராஜேந்திரன்- காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
- ப.ஹீ. ஷாஜிதா - காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
- ஹா. கிருஷ்ணமூர்த்தி -காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
தமிழக காவல் துறையில் பெண்கள் பற்றிய குறிப்புகள்
- தமிழக காவல் துறையில் பெண்கள் முதன்முறையாக பணியமர்த்தப்பட்ட ஆண்டு - 1973
- முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.
- தமிழகத்தில் தற்போது 202 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
- தமிழகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை – 228 (இந்தியாவில் அதிக மகளிர் காவல் நிலையங்ள் கொண்ட மாநிலம்)
- தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி- திலகவதி(1976)
- தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி - லத்திகா சரண்(2010)
- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு -1989
விளையாட்டு செய்திகள் :-

- 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் 76 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பிரியா மாலிக் ஜெர்மனி வீராங்கனை லாராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
- இதன் மூலம் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பிரியா மாலிக் பெற்றுள்ளார்.
இறப்பு :-

- பிரபல விஞ்ஞானியும் முன்னாள் DRDO-தலைவருமான டாக்டர் வி.எஸ்.அருணாசலம் தனது 87வது வயதில் ஆகஸ்ட் 16 அன்று வயது மூப்பின் காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காலமானார்.
- மேலும் இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் இவருக்கு 1985 ஆம் ஆண்டும் பத்ம பூஷன் விருதும் 1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள் :-

- உலக மனித நேய தினம் (World Humanitarian Day), ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- மனிதாபிமான தொண்டுகளில் ஈடுபட்டு, அயராது உழைக்கும், இத்தகைய பணிகளில் தங்கள் இன்னுயிரையும் துறக்கும் மனித நேய தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மனித நேய தினத்தின் வரலாறு
- 2003-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19- ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு.
- அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
- அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ, `உலக மனித நேய தினமாக' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

- உலக புகைப்பட நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில் இந்நாள் சிறப்பு பெற்றது.
உலக புகைப்பட தினத்தின் வரலாறு
- 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் (Daguerreotype) எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார்.
- 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி France Academy of Science இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது.
- ஆகஸ்ட் 19 ஆம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை 'உலகிற்கு ஒரு பரிசு' என அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
Tags:
Current Affairs