1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
காலாண்டுத் தேர்வு தொடக்கம்:
15.09.2023 (11-12 வகுப்புகள்),
18.09.2023 (6-10 வகுப்புகள்),
காலாண்டுத் தேர்வு முடிவு:
27.09.2023 (6-12 வகுப்புகள்),
தேர்வு விடுமுறை:
28.09.2023 முதல் 02.10.2023 வரை 5 நாட்கள்.
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
வழக்கமாக பள்ளி அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்டே காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்தது ; முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது .
1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.