போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 28-08-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 28-08-2023


தமிழ்நாடு :-


 

Card image cap
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த சிற்பம் பிடாரி என்ற ஏகவீரி அன்னையாகும்.
  • தொடக்க காலங்களில் தாய் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தவ்வைகொற்றவைசப்தமாதர்கள் எனபல்வேறு தாய் தெய்வ வழிபாடுகள் இருந்தாலும்இந்த சிற்பங்கள் அனைத்தும் ஊருக்குள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
  • ஆனால்ஏகவீரி அன்னை ஊரின் எல்லையில் தான் இருப்பாள்.
  • பெரியசாமிபுரத்தில் பிடாரி சிற்பம் அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. இந்த சிற்பத்தின் காலம் 9-ஆம் நூற்றாண்டு ஆகும். இதற்கு எல்லைப்பிடாரி என்ற பெயரும் உண்டு. காளியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.


அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-


Card image cap
  • சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலமாக ISRO செலுத்திய ‘விக்ரம்’ லேண்டா் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதையடுத்துஅதில் உள்ள அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வுப் பணிகளை லேண்டா் தொடங்கியது.
  • நிலவின் மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பு வெப்பநிலைகளை அளவிடுவதற்கான கருவி லேண்டரில் பொருத்தப்பட்டிருந்தது. நிலவின் மேற்பரப்பிலும்நிலத்துக்கு அடியே 10 சென்டி மீட்டா் வரையிலும் நிலவும் வெப்பநிலையை அக்கருவி ஆய்வு செய்தது.
  • அதன்படிநிலவின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகபட்சமாக 70 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
  • அதே வேளையில்தரைப் பகுதிக்கு அடியே 8 செ.மீ. ஆழத்தில் வெப்பநிலையானது மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 4 செ.மீ. ஆழத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், 2 செ.மீ. ஆழத்தில் 40 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.
  • பூமியின் மேற்பரப்புக்கும் அடிப்பகுதிக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு முதல் டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால்நிலவின் தென்துருவத்தில் இந்த வேறுபாடு சுமாா் 50 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.


Card image cap
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ISRO-வின் ‘ககன்யான்’ திட்டத்தில்இரண்டாம் கட்டமாக பெண் ரோபோ "வியோமித்ரா"வை அனுப்பவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  • 'வயோமித்ரா', ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காக ISRO-வால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • வியோமித்ரா என்பது வியோமா (விண்வெளி) மற்றும் மித்ரா (நண்பர்) ஆகிய இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையாகும்.
  • வியோமித்ரா ரோபோ முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 'மனித விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு’ என்ற  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • விண்வெளியில் இருக்கும்போது மனிதர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை மதிப்பிடுவதற்காக வியோமித்ரா ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி பயணத்தில் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால் எச்சரிக்கும் வகையிலும் சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் பேன்ற செயல்களை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி பயணத்தின் பாதுகாப்பை மனிதர்கள் செல்வதற்கு முன்பாகவே உறுதி செய்யவே இந்த வியோமித்ரா ரோபோ விண்வெளிக்குகு அனுப்பப்படுகிறது.

ககன்யான் திட்டம்

  • ககன்யான் திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர்.
  • ரஷ்யாஅமெரிக்காசீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
  • இதன்படி 2007-ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2014-ஆம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
  • விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி பெற்றனர்.
  • வரும் 2024-ஆம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதனோடு 'வியோமித்ராஎன்ற பெண் ரோபோ அனுப்பப்படுகிறது. இந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து ISRO-வுக்கு தகவல் அனுப்பும்.
  • அதன்பின் 2024-ஆம் ஆண்டு இறுதியில் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • இத்திட்டம் LVM3 – HLVM3 ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

விருதுகள் :-


Card image cap
  • முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
  • அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
  • தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதேபோல் தமிழக அரசு சார்பில் 385 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.இதன் பட்டியல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு செய்திகள் :-

Card image cap
  • டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஆடவர் ஒற்றையர் அரை இறுதியில் மூன்றாம் நிலை வீரரான தாய்லாந்து வீரர் குன்லாவுட் விடிட்சர்னுடன் விளையாடினார் இந்திய வீரர் பிரனோய்.
  • அதில் 18-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தார். அதனால் வெண்கல பதக்கத்துடன் நடப்பு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை அவர் நிறைவு செய்துள்ளார்.

Card image cap
  • ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
  • கடைசி நாளன்று இந்தியா சார்பில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராடிபி மானு மற்றும் கிஷோர் ஜேனா பங்கேற்றனர்.
  • அதில்நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார்.
  • இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • இந்திய வீரர்கள் டிபி மானு (6-வது இடம்)  மற்றும் கிஷோர் ஜேனா (5-வது இடம்) பிடித்து டாப் 6 வீரர்களில் இடம் பெற்றனர்.

நீரஜ் சோப்ரா சாதனைகள்

  • ஹரியாணாவின் பானிபட்டை சேர்ந்த நீரஜ் சோப்ரா  2021-இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.
  • 2022-இல் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்தார்.
  • மேலும், 2022-இல் யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் அவர் வெள்ளியை கைப்பற்றினார்.


இராணுவம் :-


Card image cap
  • இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள HSL கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன.
  • போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள்உணவுப் பொருட்கள்குடிநீர்வெடிமருந்துகள்ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல உதவி போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும். இதன்மூலம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமல் நீண்ட காலத்துக்கு கடலிலேயே முகாமிட்டிருக்க முடியும்.
  • புதிதாக தயாரிக்கப்படும் 5 உதவி போர்க்கப்பல்களிலும் எதிரிகளின் கப்பல்கள்நீர்மூழ்கிகளை தகர்க்கும் அதிநவீன ஏவுகணைகள்அதிநவீன ரேடார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன.
  • இந்த 5 உதவி போர்க்கப்பல்களால் இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும். அதோடு இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களை மீட்கவும் உதவி போர்க்கப்பல்களை பயன்படுத்த முடியும்.
  • இவை தலா 44,000 டன் எடை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆண்டுகளுக்குள் கடற்படையிடம் உதவி போர்க்கப்பல்களும் ஒப்படைக்கப்பட உள்ளன.

முக்கிய குறிப்புகள்

  • உலகின் வலுவான கடற்படையை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவிடம்  தற்போதுள்ள போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின்  எண்ணிக்கை சுமார் 150 ஆக உள்ளது.
  • இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 2027-ஆம் ஆண்டுக்குள்  200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post