போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 26-08-2023
தேசியம் :-

- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது
- பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்படத் தொடங்கி இருப்பதாக ISRO தெரிவித்திருந்தது.
- இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, ISRO விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தார்.
- பின்னர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரை அவர் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.பிரதமரிடம் லேண்டர் விண்கலனின் மாதிரியை திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வழங்கினார்.
- இதனை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய குறிப்புக்கள்
- நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
- நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவசக்தி பாயின்ட்' என்றழைக்கப்படும்.
- நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆகஸ்ட் 23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்
- கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு 'திரங்கா பாயின்ட்' எனப் பெயர் சூட்டப்பட்டது என்பதையும் பிரதமர் தெரிவித்தார்.
தமிழ்நாடு :-

- தமிழகத்தில்முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தும்போது அதற்கான நிலங்களை ஒருங்கிணைக்க இந்த சட்ட மசோதா வழி வகுக்கும்.
- இது ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டம்) சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
- நிலங்களை பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அரசு நிலத்துக்கான உரிமையானது உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களுக்கு பெரிய அளவில் நிலங்கள் தேவைப்படும் பட்சத்தில், பல்வேறு துறைகளின் கீழ் நிர்வாக உத்தரவுகள், குறிப்பாணைகள் பிறப்பிக்கப்படுதல் என அந்த நிலத்தை ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நேரம், பண இழப்பு ஏற்படுகிறது.
- இயற்கையாகவே நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் தங்கள் பரப்பை விரிவாக்கி, போகும் பாதையையும் மாற்றிக் கொள்கின்றன. இவற்றை பொதுநலன் கருதி பாதுகாக்க வேண்டியது அவசியம். தனியார் நிலங்களின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், அந்த நிலத்துக்கான பரிமாற்ற முறையை சட்டப்படியாக ஒழுங்குபடுத்துவது, அதன்மூலம் நீர்நிலையைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இந்த சட்டம் வழிசெய்கிறது.

- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாநகராட்சி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை புனரமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

- சந்திரயான்-3 விண்கலம் ஏறத்தாழ 40 நாட்கள் பயணத்துக்குப் பின்னர், நிலவின் தென்துருவத்தில் நேற்று மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது.
- இந்நிலையில், கடந்த 2019-இல் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியபோது, அங்கு தரையிறங்குவது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- இந்த சோதனை ஓட்டத்துக்கு, நிலவின் மேற்பரப்பில் உள்ள `அனார்த்தசைட்'('Anorthosite') வகை மண் தேவைப்பட்டது.
- இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் பாறை வகைகள், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகேயுள்ள சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது, சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையினர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து 50 டன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ISRO மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
- அங்கு அனார்த்தசைட் பாறை மற்றும் மண் மூலம் அமைக்கப்பட்ட தளத்தில், ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல, தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்கும் இந்த மண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அதேபோல் சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு, சேலம் இரும்பாலையில் இருந்து வழங்கப்பட்டது. சந்திரயான் திட்டத்துக்காக சேலம் இரும்பாலை தொடர்ச்சியாக மூன்று முறை பங்களிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-

- சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 விண்கலம் செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என ISRO தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
- ஆதித்யா L1 என்ற இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும்.
இந்த ஆய்வின் நோக்கம்:
- சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களை கண்டறிய முடியும். சூரிய வெடிப்பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.
- ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் அறிய முடியும்.
விருதுகள் :-

- பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் 2-வது உயரிய விருதான ‘Grand Cross of the Order of Honour’ விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.
- கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த விருது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2014 முதல் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளில் வழங்கப்பட்ட விருதுகள்
- Order of Abdulaziz Al Saud - சவுதி அரேபியா (2016)
- State Order of Ghazi Amir Amanullah Khan – ஆப்கானிஸ்தான் (2016)
- Grand Collar of the State of Palestine Award – பாலஸ்தீனம் (2018)
- Order of Zayed Award - ஐக்கிய அரபு அமீரகம் (2019)
- Order of St. Andrew award – ரஷ்யா (2019)
- Order of the Distinguished Rule of Nishan Izzuddin – மாலத்தீவு (2019)
- King Hamad Order of the Renaissance – பஹ்ரைன் (2019)
- Legion of Merit - அமெரிக்க பாதுகாப்புப்படை விருது (2020)
- Order of the Druk Gyalpo – பூடான் (2021)
- Ebakl Award - பலாவ் குடியரசு (2023)
- Companion of the Order of Fiji - பிஜி (2023)
- Companion of the Order of Logohu – பப்புவா நியூ கினியா (2023)
- Order of the Nile - எகிப்து (2023)
- Grand Cross of the Legion of Honour – பிரான்ஸ் (2023)
- Grand Cross of the Order of Honour – கிரீஸ் (2023)
விளையாட்டு செய்திகள் :-

- சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது.
- இதில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்வதற்கு 634 வீரர், வீராங்கனைகளை அனுப்புகிறது இந்தியா.
- 38 விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி
- வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள் :-

- அமெரிக்காவில் பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை கிடைத்த நாள் பெண்கள் சமத்துவ தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- 1920-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1973-ஆம் ஆண்டு இத்தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
- கல்வி, வேலை வாய்ப்பு, ஊதியம், அரசியல்உட்பட அனைத்திலும் சம உரிமை வழங்க வலியுறுத்தி இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தரவரிசை பட்டியல் :-

- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
- இந்த நகரங்களில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நவீன வசதிகள், வைஃபை, இன்டர்நெட் இணைப்பு போன்ற இணைய வசதிகள், நவீன சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அமைத்து வருகிறது.
- மேலும், இந்தத் திட்டத்தின் கீழ்மேம்படுத்தப்பட்ட நகரங்களிடையே போட்டியையும் மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
- இப்போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது
- மேலும்,குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சூரத் 2-வது இடத்தையும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ரா 3-ம் இடம் பிடித்துள்ளது.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தை மத்தியபிரதேசம் பெற்றுள்ளது. 3-வது இடத்தை ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் கூட்டாகப் பிடித்துள்ளன.
- யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- தேசிய ஸ்மார்ட் சிட்டிக்கான விருதுகள் போட்டியை மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு தொடங்கியது.
- கரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இந்த போட்டி நடத்தப்படவில்லை.
- தற்போது நடத்தப்பட்ட போட்டி 2022- ஆம் ஆண்டுக்கானது ஆகும்.
Tags:
Current Affairs