போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 25-08-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 25-08-2023


தேசியம் :- 


Card image cap

  • இந்தியாவின் முதல் AI பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
  • இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
  • இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தொழில்நுட்பமும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளது.
  • மாணவர்கள் கல்வி கற்கும் முறையை மேம்படுத்தப்பட்ட வகையில் மாற்றும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளது சாந்திகிரி வித்யாபவன் எனும் பள்ளி.
  • இதன் மூலம் மாணவர்கள் தனித்துவ கற்றல் முறையை பெற முடியும் என அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சர்வதேசம் :- 



Card image cap

  • உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலைஅமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
  • இந்தப் பட்டியலில்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாகஉலகம் முழுவதும் உள்ள, 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் இடம் பிடித்துள்ளனர்.
  • 2022-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் துறைப் பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்வேதியியல் துறைப் பேராசிரியர்கள் எம்.ஜி.சேதுராமன்எஸ்.மீனாட்சிஇயற்பியல் துறைப் பேராசிரியர் கே.மாரிமுத்து ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
  • 2019, 2020, 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றிருந்த நிலையில்தொடர்ந்து நான்காவது முறையாக 2022-ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு :- 


Card image cap

  • இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 103 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சென்னை மாநகராட்சி நிா்வாக மன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 16-09-1920 அன்று நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் இந்தியாவிலேயே முதல் முறையாகசென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. பின்னா்சேத்துப்பட்டுமீா்சாகிப்பேட்டை பகுதிகளில் இயங்கிய மேலும் நான்கு பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
  • இதன் பயனாகஇத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஐந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது 1922-23 ஆம் ஆண்டு  811-லிருந்து 1925-26 ஆம் ஆண்டில் 1,671 ஆக உயா்ந்தது.
  • இதனை தொடர்ந்து சுதந்திரத்திற்கு பின்னர் 1957-இல் தொடக்க கல்வி பயிலும் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை பாரதியார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் தொடக்கி வைத்தாா்.இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.18 என்ற அளவில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது(காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியவர் - அப்போதைய பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தர வடிவேலு)
  • 1975-ஆம் ஆண்டு முழுமையாக மாநில அரசின் நிதியில்ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மாநிலம் முழுவதும் நடத்திக்காட்டினார்.
  • அதன் பின்னர் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா்9-வயது வரையுள்ள மாணவா்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை 1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடங்கப்பட்டது.
  • பின்னர் முன்னாள் முதல்வா் கருணாநிதிசத்துணவு திட்டத்தை மேலும் சிறப்பாக செய்லபடுத்திட சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினாா்.
  • பின்னா் ஜூலை 23, 1998 -இல் வாரத்துக்கு ஒருமுறை முட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால்காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ஐ  கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஆணையிடப்பட்டுஅந்நாளில் பள்ளி குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தினாா்.
  • பின்னர் 2007 ஆம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாரம் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இதனை தொடர்ந்து ஜூலை 15 2008 முதல் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாழைப்பழங்கள் வழங்கும் திட்டமும்பின்னர் ரூ 125.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சத்துணவுடன் வாரம் முறை முட்டைகள் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுசத்துணவு திட்டம் மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது..
  • பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், மாணவர்களுக்கு கலவை சாதம் வழங்கினார்.
  • வாஷிங்டன் பல்கலை கழகமும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில்2006-2016 காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் 13 முதல் 32 % உயர்ந்ததற்கு சத்துணவு திட்டம் ஒரு முக்கிய கரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Card image cap
  • தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில்(மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளி) முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.404.41 கோடி ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • இத்திட்டம்சில மாநகராட்சிகள்நகராட்சிகள்தொலைதூர கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று மே 7, 2022-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுஅரசாணையும் வெளியிடப்பட்டது.
  • இதனை தொடர்ந்து முதல் கட்டமாக 2022 செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில்மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

  • மாணவமாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல்
  • ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல்,
  • ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல்
  • பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்
  • கற்றல் இடைநிற்றலை குறைத்தல்
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்


Card image cap
  • சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன.
  • சிறார்களின் நலன்களைப் பாதுகாத்து அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதே இந்த சிறார் மன்றங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
  • சென்னை பெருநகர காவல் துறையின்கீழ் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் குறைந்தது ஒரு காவல் சிறார் மன்றம் அமைக்க வேண்டும் எனக் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.
  • காவல் சிறார்மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து சென்னை பெருநகர காவல் துறை தேவையான நிதி உதவிகளைப் பெறுகிறது.
  • அந்த வகையில் HCL நிறுவனம்காவல் சிறார் மன்ற சிறுவர்களின் கல்வித்திறன்பொருளாதார பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றுக்காக நிதியுதவி வழங்கிசிறார் மன்றங்களை 3 ஆண்டுகள் பராமரிக்க முன்வந்துள்ளது.
  • இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்அந்நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.



அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :- 





Card image cap
  • இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம்சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ளது.
  • இந்த சந்திராயான்-3 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளார்.
  • அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுரிமணி என்ற விஞ்ஞானி டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
  • இவர் சந்திராயன்-திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் சந்திரனில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் சந்திரனை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவற்றை பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர்.
விருதுகள் :- 



Card image cap
  • இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டப் பிரிவில்வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கு 2023-ஆம் ஆண்டுக்கான `நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருதுசென்னை ICF-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய திட்ட மேலாண்மை நிறுவனம் இந்த விருதை வழங்கியுள்ளது.
  • கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெற்ற விழாவில்நிதி ஆயோக் நிறுவன இயக்குநர் விஜய்குமாரிடமிருந்து ICF பொது மேலாளர் பி.ஜி.மால்யா விருதைப் பெற்றுக்கொண்டார்.

முக்கிய குறிப்புகள்

  • உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ICF விளங்குகிறது.
  • இங்கு 71,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • இங்கு தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
  • முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2018-ம்ஆண்டு தயாரிக்கப்பட்டது.
  • முதல் வந்தே பாரத் ரயிலின் சேவை டெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கியது.
  • 2023-24-ஆம் நிதியாண்டில் சென்னை ICF-இல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



Card image cap
  • சிறந்த படம் - 'ராக்கெட்ரிதி நம்பி எஃபெக்ட்' (இயக்குனர் -ஆர். மாதவன்)
  • சிறந்த இயக்குநர்- நிகில் மகாஜன் (கோதாவரி-மராத்திய படம்)
  • சிறந்த நடிகர்-அல்லு அர்ஜூன்(புஷ்பா)
  • சிறந்த நடிகை- ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி)
  • சிறந்த குழந்தைக் கலைஞர் -பவின் ரபாரி (சல்லோ ஷோ)
  • சிறந்த குழந்தைகள் திரைப்படம்- காந்தி&கோ (குஜராத்தி)
  • சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்- ஆர்.ஆர்.ஆர்
  • சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி(மிமி)
  • சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி(தி காஷ்மீர் பைல்ஸ்)
  • தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது - தி காஷ்மீர் பைல்ஸ்
  • சிறப்பு ஜூரி விருது - இயக்குனர் விஷ்ணுவர்தன்(ஷேர்ஷா- இந்தி திரைப்படம்)
  • சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது - விஷ்ணு மோகன் (மேப்படியான்-மலையாள திரைப்படம்)

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்:

  • சிறந்த தமிழ் திரைப்படம்- கடைசி விவசாயி (இயக்குனர் - மணிகண்டன்)
  • சிறந்த குஜராத்தித் திரைப்படம் - சல்லோ ஷோ
  • சிறந்த கன்னட திரைப்படம் -777 சார்லி
  • சிறந்த மலையாள திரைப்படம் -Home
  • சிறந்த மராத்தி திரைப்படம் -Ekda Kay Zala
  • சிறந்த இந்தி திரைப்படம்-சர்தார் உதம்
  • சிறந்த தெலுங்கு படம்- உப்பெனா
  • சிறந்த பெங்காலி திரைப்படம்- Kalkokkho – House of Time

தொழில் நுட்ப  விருதுகள்

  • சிறந்த பாடல் இசைக்கான விருது - தேவி ஸ்ரீ பிரசாத்(புஷ்பா)
  • சிறந்த பின்னணி இசை - கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த பின்னணி இசை பாடகி - ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)
  • சிறந்த பின்னணி இசை பாடகர் - கால பைரவா (கோமுரம் பீமடு - ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)
  • சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியர் சந்திரபோஸ் (தெலுங்கு)
  • சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வீர கபூர் (சர்தார் உதம்)
  • சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ப்ரீதிஷீல் சிங் டிசோசா (கங்குபாய் கத்யாவாடி)
  • சிறந்த திரைக்கதை - ஷாஹி கபீர் ((நயாட்டு -மலையாளம்) மற்றும்  சஞ்சய் லீலா பன்சாலி உட்கர்ஷினி வசிஷ்டா (கங்குபாய் கத்யாவாடி)
  • சிறந்த வசன எழுத்தாளர்- உத்கர்ஷினி வசிஷ்டா பிரகாஷ் கபாடியா (கங்குபாய் கத்யாவாடி)
  • சிறந்த Special Effect - வி ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரக்ஷித் (ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் - கிங் சாலமன் (ஆர்.ஆர்.ஆர்)
  • கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஸ்ரீகாந்த் தேவா (Special mention)

தேசிய திரைப்பட விருதுகள் -முக்கிய குறிப்புகள்

  • தேசிய திரைப்பட விருதுகள் தொடங்கப்பட்ட ஆண்டு - 1954
  • 69-வது தேசிய திரைப்பட விருது தேர்வுக்குழு உறுப்பினர்களின் தலைவர் - இயக்குநர் கேட்டன் மேத்தா
  • 69-வது தேசிய திரைப்பட விழாவில் அதிக விருதுகளை வென்ற திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர்(விருதுகள்)

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post