போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 04-09-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 04-09-2023


தேசியம் :-


Card image cap

  • தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
  • அதன்படிகாசநோய்கல்லீரல் தொற்றுபுற்றுநோய்இளம்பிள்ளை வாதம்கக்குவான் இருமல்ரண ஜன்னிதொண்டை அடைப்பான்இன்ஃப்ளூயன்சா தொற்றுநிமோனியாவயிற்றுப்போக்குதட்டம்மைரூபெல்லாநோய்ஜப்பானிய மூளைக்காய்ச்சல்விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
  • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்வட்டார மருத்துவமனைகள்மாவட்ட தலைமை மருத்துவமனைகள்ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
  • பயனாளிகளுக்கு தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டுஅதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில்மத்திய அரசு U WIN என்ற வலைளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
  • இந்த முறையில் தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் இனி டிஜிட்டல் முறையிலேயே பாதுகாக்கப்பட்டுசான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு கா்ப்பிணியின் விவரத்தையும் பதிவு செய்து அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல்அவா்களின் பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த சிசு குறித்த விவரங்களை பதிவு செய்தல்சிசுவுக்கு தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கு U WIN வலைதளம் பயன்படுத்தப்படும்.


Card image cap
  • ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில்காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிஉள்துறை அமைச்சர் அமித் ஷாகுலாம் நபி ஆசாத்ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.கே.சிங்அரசியல் சாசன வல்லுநர் சுபாஷ் காஷ்யப்சட்ட வல்லுநர் ஹரிஷ் சால்வேஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்தக் குழு அளிக்கும். பரிந்துரைக்கான கால நிர்ணயம் அளிக்கப்படவில்லை.
  • இந்நிலையில்தான் அந்த குழுவில் இடம்பெறப் போவதில்லை என்று ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Card image cap

  • உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மரியா பிரான்யாஸ் என்ற மூதாட்டி இடம் பெற்றிருந்தார்.
  • தற்போது அவரை பின்னுக்கு தள்ளி கேரள மாநிலம்மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற மூதாட்டி 'உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
  • குஞ்சீரும்மாவின் ஆதார் அட்டையின்படிகடந்த ஜூன் மாதம் அவருக்கு 120 வயதாகிறது.


Card image cap
  • புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
  • அதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
  • இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.
  • இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்திருக்க வேண்டும்.
  • 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
  • குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும்.




சர்வதேசம் :-


Card image cap
  • ஐ.நா. பொதுச் சபையின் 78-வது ஆண்டுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 5) தொடங்குகிறது.
  • அதையொட்டி நடைபெறும் நீடித்த மேம்பாட்டு இலக்குகள் (SDG) உச்சிமாநாடுபருவநிலை இலக்குகள் உச்சிமாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
  • முக்கிய நிகழ்வான பொது விவாதம் செப்டம்பர் 19-இல் தொடங்குகிறது. அந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் தலைவா்களின் தற்காலிக பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் செப்டம்பர் 26-ஆம் தேதி உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக வெளியிடப்பட்ட முதல் தற்காலிக பட்டியலில் பிரதமா் மோடி செப்டம்பர் 22-ஆம் தேதி உரையாற்றுவாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ஐக்கிய நாடுகள் சபை பற்றிய குறிப்புகள்

  • உலக அமைதிக்கும்பரஸ்பர பாதுகாப்பினை உருவாக்குதல்உலக நாடுகளிடையே நட்பை வளர்ப்பது பொருட்டும்உலக மக்களை இணைக்கும் பொருட்டும் 1945-இல் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்தான் பரிந்துரை செய்தார்.
  • இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு லண்டனில் கூடியது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படையாக 6 அம்சங்கள் உள்ளன. அவை: 1. பொதுச் சபை 2. பாதுகாப்பு சபை 3. சமூகப் பொருளாதார சபை 4. சர்வதேச நீதிமன்றம் 5.பொறுப்பாண்மைக் குழு 6. செயலகம்.
  • ஐ.நா. பொதுச் சபையின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை - 193
  • ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் அமைந்துள்ள இடம் - நியூயார்க்
  • ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 10 நிரந்தரமில்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கியது.
  • நிரந்தரமில்லா உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. பொதுச் சபையால் தேர்வு செய்யப்படுகின்றன.
  • பிரிட்டன்சீனாபிரான்ஸ்ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. ஐ.நா.வில் கொண்டுவரும் எந்த தீர்மானத்தின் மீதும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் உரிமைஇந்த 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஐக்கிய நாடுகள் தினம் 1948-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 78-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் தலைவராக செயல்படுபவர் - டென்னிஸ் பிரான்சிஸ்

Card image cap
  • ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்து வரும் இந்தியாஅக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடத்தவுள்ளது.
  • அதில் அமெரிக்காபிரிட்டன்ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் கலந்துகொள்ள உள்ளனா். மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
  • இந்நிலையில் இக்கூட்டமைப்பில் 55 நாடுகளைக் கொண்ட  ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைப்பதற்கான தீா்மானம் இம்மாநாட்டில் இயற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜி-20 மாநாடு பற்றிய குறிப்புகள்

  • இருபது நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் அமைப்பு [Group of Twenty Finance Ministers and Central Bank Governors] என்பதன் சுருக்கமே ஜி20 ஆகும்.
  • இந்த கூட்டமைப்பு உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்துபேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியினை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த அமைப்பு 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இதில் இடம் பிடித்துள்ள 20 நாடுகளின் பட்டியல் இந்தியாஇந்தோனேசியாஅமெரிக்காஇங்கிலாந்துஅர்ஜென்டினாபிரேசில்சீனாஜெர்மனிஆஸ்திரேலியாகனடாஜப்பான்ரஷ்யாதென்ஆப்பிரிக்காதுருக்கிதென்கொரியாஇத்தாலிமெக்சிகோசவுதி அரேபியாபிரான்ஸ்ஐரோப்பிய ஒன்றியம்.
  • ஜி-20அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1  முதல்  நவம்பர் 30 வரை  தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.


இறப்பு :-


Card image cap
  • ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுனுக்குக் குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்.
  • சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்விஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய  நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார்.
  • 2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
  • சமீபத்தில் சந்திரயான் 3, லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்தது. அந்த சந்திரயான் விண்கலத்திற்கும் கவுன்டவுன் குரல் கொடுத்தவர் வளர்மதிதான்.
  • முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசு நிறுவிய கலாம் விருதை, 2015-இல் முதல்முறையாக பெற்றவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post