போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 23-09-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 23-09-2023

தேசியம் :-


Card image cap
  • டெல்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்டம்பர் 23) தொடக்கிவைக்கிறார்.
  • நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
  • நாட்டில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சட்ட நடைமுறைகள்வழக்குகளில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.
  • பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல்யோசனைஅனுபவத்தை பகிர்வதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டுள்ளது.
தமிழ் நாடு  :-

Card image cap
  • தம் உறுப்புகளை ஈந்துபல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், ‘இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முக்கிய குறிப்புகள்

  • உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்திலுள்ள மாநிலம் - தமிழ்நாடு
  • தமிழ்நாட்டில் Transplant Authority of Tamil Nadu(TRANSTAN) என்ற அமைப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கட்டுப்படுத்துகிறது.
  • 1994-இல் Transplantation of Human Organs Act என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய பிறகுஇறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1995-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டது.
  • இதனை தொடர்ந்து தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா்.
  • இதனை ஒழுங்குபடுத்த 2015-இல் Transplant Authority of Tamil Nadu உருவாக்கப்பட்டது.
  • 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதிஉடல் உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுஇந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

விருதுகள் :-

Card image cap
  • சர்வதேச அளவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் நார்மன் இ போர்லாக் விருது(Norman E Borlaug Award) விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • இவ்வாண்டு இந்த விருது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளரான முனைவர் சுவாதி நாயக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில்(International Rice Research Institute) தற்போது ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
  • சுமார் 500-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைகளில் நிலங்களில் பயிரிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள சுவாதி நாயக்ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார்.

முக்கிய குறிப்புகள்

  • நோபல் பரிசு பெற்றவரும் நவீன பசுமைப் புரட்சியின் தந்தை எனவும் அழைக்கப்படும் நார்மன் இ போர்லாக் பெயரால் உலக உணவு பரிசு அமைப்பு(World Food Prize Foundation) இந்த விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
  • இந்த விருது பெரும் மூன்றாவது இந்தியர் சுவாதி நாயக்’.
  • இதற்கு முன்பாக,டாக்டர் அதிதி முகர்ஜி-2012 மற்றும் டாக்டர் மகாலிங்கம் கோவிந்தராஜ் -2022 ஆகியோர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

விளையாட்டு செய்திகள்  :-

Card image cap
  • சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்டம்பர் 23) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. அட்டவணைப்படி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் போட்டிகள்கரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது.
  • ஆசிய விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது இது 3-வது முறையாகும்.
  • இப்போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபா் 8-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை கண்காணிப்பது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பணியாகும்.
  • இந்தாண்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 45
  • இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்

  • ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
  • கடைசியாக 2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.
  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது.
  • இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை - 655
  • இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.
முக்கிய நாட்கள்  :-

Card image cap
  • சர்வதேச சைகை மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் சைகை மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்சைகை மொழிகளின் நிலையை வலுப்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு - 1951
  • நிலையில்  2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்ட ஆண்டு – 2018
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர். இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர்.
  • சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும்.
Card image cap
  • உலக ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • கனடா நாட்டை சேர்ந்த, 12 வயது சிறுமியான மெலிண்டா ரோஸ்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும்தன்னைசுற்றி இருந்தவர்கள் மத்தியில்மகிழ்ச்சியையும்உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.
  • அவரது நினைவாகஆண்டு தோறும்செப்டம்பர் 22-ஆம் தேதி, 'உலக ரோஜா தினம்கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் மக்களை ஊக்குவித்து ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post