போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 16-09-2023
தேசியம் :-

- பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- அதன்படி, இனி ஆதார், கல்வி நிறுவனங்களின் அட்மிஷன், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, திருமண பதிவுமற்றும் அரசு வேலை நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாக இனி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- பிறப்பு-இறப்பு சட்டத் திருத்தம் என்பது தேசிய மற்றும் மாநில புள்ளிவிவரங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன் செயல்திறனையும் அதிகரிக்க முடியும்.
- மேலும், டிஜிட்டல் பதிவு மூலம் சமூக நலன்களை வழங்குவதற்கும் இந்த சட்டத்திருத்தம் உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இந்த புதிய சட்டத்திருத்தத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத் தளத்தை பராமரிக்க இந்திய பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17-இல் புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (India International Convention and Expo Centre -IICC) முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- துவாரகாவில் 'யஷோபூமி' செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை வலுப்படுத்தப்படும்.
- மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு மற்றும் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான மொத்த கட்டுமான பரப்பளவு கொண்ட 'யஷோபூமி' உலகின் மிகப்பெரிய MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) மையமாக அமையும்.
- இந்த மையம் 5400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது
சர்வதேசம் :-

- ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் நடைபெற்ற ஒரு விழாவில் அந்த நாட்டிற்கான அதிகாரப்பூர்வ தூதராக ஜாவோ ஷெங் என்பவரை நியமித்துள்ளது சீன அரசு.
- இதன் மூலம் தலிபான் நாட்டை கையகப்படுத்தப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தானுக்கான புதிய தூதரை முறையாக மற்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு என்ற பெயரை சீனா பெற்றுள்ளது.
- தலிபான்களை எந்த வெளிநாட்டு அரசாங்கமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- உலகம் முழுவதும் மக்களால் தோ்வு செய்யப்பட்ட தலைவா்களின் புகழ், செயல்பாடு மதிப்பீட்டை வாராந்திர அடிப்படையில் கணக்கிட்டு ‘மாா்னிங் கன்சல்ட்’ அமைப்பு வெளியிட்டு வருகிறது.
- G 20-உச்சி மாநாடு தில்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக பிரதமா் மோடி முதலிடம் வகிக்கிறாா். அதே வேளையில், 18 சதவீத மக்கள் அவரது தலைமையை ஏற்கவில்லை.
- பிரதமா் மோடிக்கு அடுத்து 64 சதவீத மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவராக ஸ்விட்சா்லாந்து அதிபா் அலெய்ன் பொ்செட் 2-வது இடத்தில் உள்ளாா்
- இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபா் பைடன், பிரான்ஸ் அதிபா் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவா்களின் தலைமையை ஏற்கும் மக்களின் சதவீதத்தைவிட ஏற்காதவா்களின் சதவீதமே அதிகமாக உள்ளது.
பொருளாதாரம் :-

- அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டைம்’ இதழும், தரவுசேகரிப்பு நிறுவனமான ஸ்டேடிஸ்டாவும் இணைந்து உலகளவில் 750 சிறந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
- இந்தியாவில் இருந்து மொத்தம் 8 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 64-வது இடத்தில் உள்ளது.
- விப்ரோ 174-வது இடத்திலும், மஹிந்திரா குழுமம் 210-வது இடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 248-வது இடத்திலும் உள்ளன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 262, ஹெச்டிஎஃப்சி பேங்க் 418, விஎன்எஸ் குளோபல் சர்வீசஸ் 596, ஐடிசி 672-வது இடங்களில் உள்ளன.
- மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபெட், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
- வருவாய்,ஊழியர்களின் திருப்தி, சுற்றுச்சூழல் - சமூக - பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- இலங்கைக்கான இந்தியாவின் அடுத்த தூதராக(High Commissioner) சந்தோஷ் ஜா என்பவரை நியமித்திட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் செப்டம்பர் 14 அன்று வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ள்ளது.
- இவர் 1993 ஆம் ஆண்டின் IFS அதிகாரி ஆவார் மேலும் தற்போது இவர் பெல்ஜியம் நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய நாட்கள் :-

- ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதியை ஓசோன் பாதுகாப்பு தினமாக கொண்டாடுகிறது.
ஓசோன் என்பது என்ன?
- ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்த ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும்.
- ஓசோனை C.F. ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில் காணப்படுகிறது. ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம்.
- ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாக்கிறது.
- ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1% குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் DNA-வை நேரிடையாக பாதிக்கும்
ஓசோன் துளை: - ஓசோன் துளை என்பது வளி மண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை.
- இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை.ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கபடுவதால் ஓசோனில் துளை ஏற்படுகிறது.
- 1980-ஆம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் மிகப் பெரிய ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30% குறைந்து காணப்பட்டது.
- இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது.
ஓசோன் இழப்பினால் ஏற்படும் விளைவுகள்: - ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும்.
- புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும்.
- நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.
ஓசோன் படலத்தில் ஏற்படும் இழப்பை தடுக்கும் முறைகள்:
- குளோரோ ப்ளூரோ கார்பன்களுக்கு(CFC) பதிலாக ஹைட்ரோ குளோரோ ப்ளூரோ கார்பன்கள்(HCFC), ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள்(HFC), ஹைட்ரோ கார்பன்களான பியூட்டேன் புரோபேன் போன்றவற்றையும், அம்மோனியா நீர் மற்றும் நிராவி போன்றவை மாற்று பொருளாக பயண்படுத்தலாம்.
- ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்யவோ அல்லது கடுமையான வரைமுறைகளை கொண்டு வரலாம்.குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம்.
- மிக முக்கியமாக புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்பதன் மூலம் ஓசோன் படல இழப்பை குறைக்கலாம்.
Tags:
Current Affairs