போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 25-09-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 25-09-2023

தேசியம் :-

Card image cap

  • சென்னை – திருநெல்வேலி
  • விஜயவாடா-சென்னை
  • உதய்பூர்-ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்-பெங்களூரு
  • பாட்னா-ஹவுரா
  • காசர்கோடு – திருவனந்தபுரம்
  • ரூர்கேலா-புரி
  • ராஞ்சி-ஹவுரா
  • ஜாம்நகர்-அகமதாபாத்

இவை  தமிழகம்கேரளாதெலங்கானாஆந்திராகர்நாடகாராஜஸ்தான்பிஹார்மேற்கு வங்கம்ஒடிசாஜார்க்கண்ட்குஜராத் ஆகிய 11 மாநிலங்களையும்முக்கிய வழிபாட்டுத் தலங்களையும் இந்த ரயில்கள் இணைக்கின்றன.

 

முக்கிய குறிப்புகள்

  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களைரயில்வே அமைச்சகம் 2019-இல் அறிமுகம் செய்தது.
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
  • இவை சென்னை பெரம்பூர் ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன
  • வந்தே பாரத்தின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் பிப்ரவரி 15,2019-இல் தொடங்கப்பட்டது.
  • தமிழகத்திற்குள் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே ஏப்ரல் 8,2023-இல் தொடங்கப்பட்டது.
  • மொத்தம் உள்ள வந்தே பாரத்  ரயில்களின் எண்ணிக்கை - 34
Card image cap
  • உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று(செப்டம்பர் 24) அடிக்கல் நாட்டினார்.
  • மொத்தம் ரூ.451 கோடியில் அமைக்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 30,000 பேர் அமர முடியும்.
  • இந்த மைதானத்தின் வடிவமைப்பு சிவனை மையமாகக் கொண்டிருக்கும். மைதானத்தின் கூரைபிறை வடிவில் இருக்கும். தூண்கள் திரிசூல வடிவில் இருக்கும். மைதானத்தின் இருக்கைகள்கங்கை நதியின் படித்துறையை ஒத்திருக்கும்.
  • கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் L&T நிறுவனம், 30 மாதங்களில் மைதானத்தை கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

அடல் உறைவிடப் பள்ளிகள்:

  • உத்தர பிரதேசம் முழுவதும் ரூ.1,115 கோடியில் 16 அடல் உறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று(செப்டம்பர் 24)  தொடங்கிவைத்தார். கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவமாணவிகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சர்வதேசம் :-

Card image cap

  • அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
  • 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டி உள்ளனர்.
  • 183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்த படியாக நியூ ஜெர்சியில் உள்ள இந்த கோயில் இரண்டாது பெரிய கோயிலாக கருதப்படும்.
  • 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர்வாட் கோயில் வளாகம்உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும்.
  • இது, 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இதனை அங்கீகரித்துள்ளது.

தமிழ் நாடு  :-

Card image cap

  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணிஎன்ற அழைப்பு மையத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஊராட்சி மணி’ என்றழைக்கப்படும் பிரத்யேக அழைப்பு மையத்தை நாளை(செப்டம்பர் 25) திறந்துவைக்கிறார்.

'ஊராட்சி மணிதிட்டம் பற்றிய தகவல்கள்

  • தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155340 வழங்கப்பட்டுள்ளது.
  • மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராகஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊராட்சி மணி என்ற பெயர்மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை இது உறுதி செய்கிறது. மக்களுக்கு பாரபட்சமற்றசமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது. அழைப்பு மைய நிர்வாகி மூலமாகவோஇணையதளம் வாயிலாகவோ குறைகளை உடனடியாக தீர்க்கும்வகையில்உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
  • இதுதவிரசமூக வலைதளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுஉரிய தீர்வு காணப்படும்.
  • அதேபோலசமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுஅவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முக்கிய நாட்கள்  :-


Card image cap

  • இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல்சமூகம்இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாய (Pandit Deendayal Upadhyaya) பிறந்த தினமான September 25’ அந்தியோதயா தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜிபாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.
  • அந்தியோதயா என்பதன் பொருள் ‘ஏழைகளின் எழுச்சி’
Card image cap
  • உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனர் (Pharmacists) வகிக்கும் பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25 அன்று உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மருந்தாளுனர் தினமானது சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பால் (FIP) தொடங்கப்பட்டது.
  • 2009-இல் இஸ்தான்புலில் நடந்த மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் உலக மாநாட்டின் போதுசர்வதேச மருந்து கூட்டமைப்பு உலக மருந்தாளுநர் தினத்தை அனுசரிப்பது குறித்து முன்மொழிந்தது. மேலும் 1912-ஆம் ஆண்டு FIP நிறுவப்பட்ட செப்டம்பர் 25-ஆம் தேதி இந்த தினத்தை கடைபிடிப்பது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • உலக மருந்தாளுநர் தினம் 2022-இன் கருப்பொருள்: "ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்காக மருந்தகம் ஒன்றுபட்டுள்ளது"

Card image cap
  • 1916 -உத்திரப்பிரதேச மாநிலம்மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார்
  • கங்காபுரில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ராஜகரில் பள்ளி மேல்படிப்பும் பயின்றார். கணிதத்தில் சிறந்த மாணவராக விளங்கினார்.
  • 1937-இல் இன்டர்மீடியட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
  • கான்பூர் எஸ்.டி. கல்லூரியில் சேர்ந்தார். இங்கு அவர் சுந்தர்சிங் பண்டாரிபல்வந்த் மஹாசிங்கே ஆகியோரை சந்தித்தார்.
  • 1939-இல் பட்டம் பெற்றார். எம்.ஏ. படிப்பதற்காக ஆக்ரா சென்றார்.
  • சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் இவரால் முதுகலைப் படிப்பைத் தொடர முடியவில்லை.
  • அரசு வேலைக்கான தேர்வு எழுதப்போன சமயத்தில் வேட்டிகுர்தாதலையில் தொப்பி சகிதம் சென்ற இவரைப் பார்த்து சிலர் ‘பண்டிட்ஜி’ என்று கிண்டலாக அழைத்தனர். ஆனால் அதுவே பின்னாளில் இவரது பெயருடன் நிலைத்துவிட்டது.
  • இந்திஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார்.
  • தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
  • 1942-இல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார்.
  • ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
  • 1951-இல் சியாம் பிரசாத் முகர்ஜிபாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
  • தத்துவ அறிஞர்பொருளாதார வல்லுநர்சமூகவியலாளர்வரலாற்று ஆசிரியர்இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

இராணுவம் :-

Card image cap

  • இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டை இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
  • இதில் 20 நாடுகளின் ராணுவ தளபதிகள் உட்பட 35 நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
  • இந்த மாநாட்டின்போதுஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள்டிரோன்கள்எதிரிநாட்டு டிரோன்களை கண்டறியும் கருவிகள்டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள்ஜாமர்கள்துப்பாக்கிகள்பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவற்றை இந்திய ராணுவம் காட்சிபடுத்தவுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • 2014-ஆம் ஆண்டில் ரூ.686 கோடியாக இருந்த ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது 23 மடங்கு அதிகரித்து ரூ.16,000 கோடியை எட்டியுள்ளது.
  • அடுத்த நிதியாண்டுக்குள் ராணுவத் தளவாட ஏற்றுமதியை ரூ.35,000 கோடியாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்தியா தற்போது 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
  • இந்த ஏற்றுமதியில் 100 உள்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஏவுகணைகள்பீரங்கிகள்ராக்கெட் குண்டுகள்கவச வாகனங்கள்ரோந்து படகுகள்குண்டு துளைக்காத ஜாக்கெட்ரேடார்கள்கண்காணிப்பு கருவிகள் மற்றும் வெடிபொருட்களை நம்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது.
  • ஆஸ்திரேலியாஜப்பான்இஸ்ரேல்பிரேசில் உட்பட 34 நாடுகளுக்கு குண்டு துளைக்காத உடைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
  • சுமார் 10 நாடுகளுக்கு துப்பாக்கி குண்டுகளை ஏற்றுமதி செய்கிறது.
  • அமெரிக்காஇங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை ஏற்றுமதி செய்கிறது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post