போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 03-11-2023


போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 03-11-2023


🔘 தேசியம் :-


Card image cap

  • நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளில் தோ்தல் விழிப்புணா்வை எடுத்துச் செல்லும் வகையில் தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் நேற்று(நவம்பர் 2) கையொப்பமானது.
  • தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை உயா்த்தும் வகையில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகஇந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் படிவாக்காளா் கல்விக்கான தரவுகள் மற்றும் செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் ‘ஜனநாயக அறைகள்’ அமைக்கப்படும்.
  • தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான பாடங்கள் சோ்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பாடபுத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அறிமுகம் செய்யும்.
  • அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் வாக்காளா் கல்வி மற்றும் தோ்தல் விழிப்புணா்வு ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - ஜனவரி 25, 1950
  • தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் - ராஜிவ் குமார்

Card image cap
  • உலக உணவு இந்தியாவின் 2-வது மாநாடு (World Food India 2023) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (03.11.2023)  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்வுஇந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை’யாகக் காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் முதல் மாநாடு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.

🌍 சர்வதேசம் :-


Card image cap

  • மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி(SBI) கிளையை நேற்று(நவம்பர் 2) தொடங்கி வைத்தாா்.
  • இலங்கையில் கடந்த 159 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் SBIஅந்நாட்டின் மிகப் பழமையான வங்கியாகும். இந்த வங்கி உள்நாட்டிலும்வெளிநாடுகளிலும் தனது சேவைகளைத் தொடா்ச்சியாக அளித்து வருகிறது.

முக்கிய குறிப்புகள்

  • 1921-இல்மூன்று பிரசிடென்சி வங்கிகள் அதாவது வங்காள வங்கி (Bank of Bengal-1809), மும்பை வங்கி (Bank of Bombay-1840) மற்றும் சென்னை வங்கி (Bank of Madras-1843) ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது.
  • 1955-ஆம் ஆண்டு இம்பிரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுபாரத ஸ்டேட் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும்
  • SBI-இன் தற்போதைய தலைவர் - தினேஷ் குமார் காரா
  • இந்தியாவில் தற்போதுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை - 12

🔴 தமிழ் நாடு :-

Card image cap

  • கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று(நவம்பர் 2) திறந்துவைத்தார்.

அஞ்சலையம்மாள் - முக்கிய குறிப்புகள்

  • இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான அஞ்சலையம்மாள் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
  • 1921 ஆண் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவரும் தம் பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
  • 1927-இல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்துஇவரின் மகள்  அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி என பெயரிட்டார்.
  • இதன் பின்னர் 1931-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்த அஞ்சலையம்மாள் தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப்போராட்டம்சட்டமறுப்பு இயக்க போராட்டம்தனிநபர் சத்தியாகிரகப்போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றார்.
  • 1932-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் இவர் கர்ப்பமாக இருந்தார் என்பதனால் பிணையில் விடுவிக்கப்பட்டு பின் மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.சிறையிலேயே வளர்ந்த அவரது மகனுக்கு ‘ஜெயில் வீரன்’ என பெயரிட்டார்.
  • 1934-இல் காந்திகடலூருக்கு வந்தபோது அவரை பார்க்க அஞ்சலை அம்மாளுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியைச் சந்தித்தார். அவரது துணிச்சலை கண்டு வியந்த காந்தியடிகள் "தென்னாட்டு ஜான்ஸி ராணி' என்ற பட்டத்தை வழங்கினார்.
  • இவர் மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்(1937, 1946 மற்றும் 1952)
  • நாட்டுக்காக பாடுபட்ட தனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தவர் அஞ்சலை அம்மாள்.
  • தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்து போராடிய அஞ்சலையம்மாள் 20-2-1961-ஆம் ஆண்டு காலமானார்

🟢 பொருளாதாரம் :-


Card image cap

  1. HCL நிறுவனர் ஷிவ் நாடார் - ரூ.2042 கோடி (நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்)
  2. விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர்  - ரூ.1,774 கோடி
  3. முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் -  ரூ.336 கோடி
  4. குமார் மங்களம் பிர்லா குடும்பத்தினர் -  ரூ.287 கோடி
  5. கௌதம் அதானி  - ரூ.285 கோடி

இதில்பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகவே நன்கொடைகளை அளித்துள்ளனர். ஆனால்ஷிவ் நாடார் கலைகலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுங்காக நன்கொடை செய்திருக்கிறார்


🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap

  • மேகாலயா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி பணி ஓய்வு பெற்ற நிலையில்அந்தப் பதவிக்கு எஸ்.வைத்தியநாதனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
  • சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2013, அக்டோபா் 25-இல் நியமிக்கப்பட்ட எஸ்.வைத்தியநாதன், கடந்த 10 ஆண்டு கால நீதிபதி பணியில் 1,219 தீா்ப்புகளை வழங்கியுள்ளாா்.

கொலிஜியம் முறை என்றால் என்ன?

  • உயர் நீதிமன்றங்களுக்கும்உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும்இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலீஜியம்.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில்மூத்த நீதிபதிகள் 4 பேர் இடம் பெறுவர்.
  • கொலிஜியம் அமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல.
  • நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 1981, 1993, 1998 ஆகிய ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் கொலிஜியம் அமைப்பு உருவானது.
  • கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமித்து வருகிறது.
  • அதே நேரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. ஒருவேளை மத்திய அரசு நிராகரிக்கும் பெயர்களை கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்தால் மத்திய அரசு அதனை நிறைவேற்றியே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில்99-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் மூலம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission or NJAC) மத்திய அரசு கொண்டு வந்தது. இதில்புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
  • எனினும்இந்த ஆணையத்தை 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

முக்கிய குறிப்புகள்

  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 124(2)
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 217(1)
  • தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி(கொலீஜியத்தின் தலைவர்) - தனஞ்ஜெய யஷ்வந்த் சந்திரசூட்
  • மேகாலயா உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு - மார்ச் 23, 2013

🟣 முக்கிய நாட்கள் :-


Card image cap

  • ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்(International Day to End Impunity for Crimes against Journalists) ஆண்டுதோறும் நவம்பர் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது
  • முக்கிய குறிக்கோள்: ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் வன்முறைகளையும் தடுப்பதுபொறுப்புணர்வை உறுதிப்படுத்துதல்
  • 2013-ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post