போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 02-11-2023
🔘 தேசியம் :-

- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. இது, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22% என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகளவில் உணவு தானிய உற்பத்தியில் 8% அதாவது 93.1 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது.
- உலகளவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டொன்றுக்கு 121 கிலோ உணவை நுகர்வு நிலையில் வீணடிக்கின்றனர். இதில், 74 கிலோ உணவுகள் வீடுகளில் மட்டுமே வீணடிக்கப்படுகிறது.
- அதன்படி,இந்தியாவில் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார்.
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021-ன்படி, உலகளவில் உணவுகள் கழிவுகளாக வீணடிக்கப்படுவதற்கு குடும்பங்கள், உணவு சேவைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் காரணங்களாக உள்ளன.
🌍 சர்வதேசம் :-

- ஐ.நா.சபையால் ஆண்டுதோறும் அக்டோபா் 31-ஆம் தேதி ‘உலக நகரங்கள் தினம்’(World Cities Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடக கலைகள் மற்றும் இசை ஆகிய 7 படைப்பாற்றல் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் பட்டியலில் (UNESCO Creative Cities Network) புதிதாக 55 நகரங்கள் நிகழாண்டு இணைக்கப்பட்டன.
- இதில்,மத்திய பிரதேசத்தின் குவாலியா் நகரம் ‘இசை’ பிரிவிலும் கேரளத்தின் கோழிக்கோடு ‘இலக்கியம்’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளது.
- இவை தவிர கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்காக உஸ்பெகிஸ்தானின் புகாரா, ஊடக கலைக்காக மொராக்காவின் காசாபிளாங்கா, வடிவமைப்புக்காக சீனாவில் சோங்கிங், திரைப்படத்துக்காக நேபாளத்தின் காத்மாண்டு, இலக்கியத்துக்காக பிரேஸிலின் ரியோ டீ ஜெனிரோ, கைவினைப் பொருள்களுக்காக மங்கோலியாவின் உலான்பாதா் ஆகிய நகரங்களும் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன.
- இந்த பட்டியலில் 'இசை’ பிரிவில் 2017-ஆம் ஆண்டு சென்னை இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
யுனேஸ்கோ- முக்கிய குறிப்புகள்
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - நவம்பர் 16, 1945
- தலைமையகம் - பாரிஸ்
- தலைமை இயக்குநா் - ஆட்ரி அசோலே
- உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 194
🔴 தமிழ் நாடு :-

- நம்ம சாலை செயலி மூலம், நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும்பள்ளங்கள் குறித்து மக்கள் ஜிபிஎஸ் மற்றும் புகைப்படங்களுடன் புகார்களை பதிவேற்றம் செய்யலாம்.
- பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேலும், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவை குறித்தும் புகார்கள் அளிக்க ஏதுவாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது
- இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகார்களில் மாநில நெடுஞ்சாலைப் பள்ளங்கள் 24 மணி நேரத்திற்குள்ளும் , மாவட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் 72 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

- "தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்" ஆவணத்தை (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் - பயன்கள்
- அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டி
- அனைத்துத் துறைகளும் தங்களது முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (Key Performance Indicators) மற்றும் பயன்களை (Outcomes) எய்துவதற்கு உதவும்
- தமிழக மக்களுக்கு விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான (SMART Swift Monitorable, Accessible, Responsive and Transparent) நிர்வாகத்தை வழங்கும்
- தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம், டிஜிட்டல் முதிர்ச்சியை மதிப்பிடுவது முதல் தகவல்தொழில்நுட்ப வியூகத்தைச் செயல்படுத்துவது வரையிலான அனைத்து வழிகாட்டுதல்களையும்
- வழங்கும்
🟣 முக்கிய நாட்கள் :-

- தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
- உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவு மறைவற்ற வெளிப்படத்தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்பின் சாதனைகள் மற்றும் திட்ட செயலாக்கங்கள் குறித்து, தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் உள்ளாட்சி கடைபிடிக்கப்படுகிறது.
- அன்றைய தினத்தில் தமிழ்நாடு முழுதும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் நடைபெறும் தினங்கள்
- இந்தியக் குடியரசு தினம் - ஜனவரி 26
- தொழிலாளர் தினம் - மே 1
- இந்திய சுதந்திர தினம் - ஆகஸ்டு 15
- காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2
- உலக நீர் நாள் - மார்ச் 22
- உள்ளாட்சி தினம் - நவம்பர் 1

- இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
- அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.
- அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 -ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசால் கடைபிடிக்கப்படுகிறது.