போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 04-11-2023

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 04-11-2023



🔘 தேசியம் :-


Card image cap

  • இந்தியாஅமெரிக்காஜப்பான்ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்த குவாட் அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன்அமெரிக்க அதிபர் ஜோ பைடன்ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
  • ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Card image cap

  • தேசிய தலைநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதிக்கு பின்னர் சராசரி காற்றின் தரம் நேற்று(நவம்பர் 3) 471 என்ற மிகவும் கடுமையான நிலையை எட்டியுள்ளது.
  • இதனிடையேடெல்லி மாநகராட்சிஅதன் குளிர்கால செயல்திட்டத்தின் கீழ்திறந்தவெளியில் கழிவுகளை எரித்தல்சட்டவிரோதமான கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் இடித்தல்சாலைகளில் குப்பைகளைக் கொட்டுதல் போன்றவைகளை கண்காணித்துக் கட்டுப்படுத்த 1,119 அதிகாரிகள் அடங்கிய 517 குழுக்களை மைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக்குறியீடு

  • 0 - 50 வரை இருந்தால் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கிறது.
  • 51 - 100 வரை இருந்தால் திருப்திகரமாக இருக்கிறது
  • 101 - 200 வரை இருந்தால் சற்று மிதமாக இருக்கிறது
  • 201 - 300 வரை இருந்தால் இறுக்கமாக இருக்கிறது
  • 301 -400 வரை இருந்தால் மிகவும் இறுக்கமாக இருக்கிறது
  • 401 -500 வரை இருந்தால் கடுமையானதாக இருக்கிறது
  • 500க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையானதாக இருக்கிறது

🌍 சர்வதேசம் :-


Card image cap

  • உலகம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களின் நல்வாழ்வைக் கணக்கிட மெக்கின்ஸி மருத்துவ கழகத்தால் 30 நாடுகளில் பணியாற்றும் 30,000 ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது
  • இதில் துருக்கி, 78 சதவீதம் பெற்று முதலிடத்திலும் இந்தியா 76 சதவீத அளவில் இரண்டாம் இடத்திலும் சீனா 75 சதவீதத்தோடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
  • ஜப்பான் 25 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

🔴 தமிழ் நாடு :-


Card image cap

  • தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான(Non-communicable disease) சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் தொடர்பான நோய் பாதிப்புகளை குறைக்கும் ஒரு விழிப்புணர்வு திட்டமான  ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்துகிறது.
  • இத்திட்டத்தை இன்று(நவம்பர் 4) காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
  • இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 8 கி.மீ. நீளத்துக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும்இங்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ரத்த அழுத்தம்நீரிழிவு நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாமும் நடத்தப்பட உள்ளது.

🟣 முக்கிய நாட்கள் :-


Card image cap

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி உலக உயிர்க்கோளக் காப்பக தினம் கொண்டாடப்படுகிறது.
  • நோக்கம்உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்அவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலையான  பயன்பாட்டை மேம்படுத்தவும்
  • இத்தினம் 2022-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

முக்கிய குறிப்பு

  • இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post