போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் |
IMPORTANT CURRENT AFFAIRS - 10-11-2023
🔘 தேசியம் :-

- இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கில் 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இன்று(நவம்பர் 10) தொடங்கியது.
- இதில், இந்திய தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- அமெரிக்க தரப்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது, முக்கிய கனிமங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் தற்போது நிலவும் சர்வதேச சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
- மேலும், உயர்-தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதில், ஆலோசிக்கப்படுகிறது.
🔴 தமிழ் நாடு :-

- புறப்பொருளைப்பற்றி வெண்பா யாப்பில் கூறும் நூல் புறப்பொருள் வெண்பா மாலை. இது புறப்பொருளுக்குரிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை இயற்றியவர் ஐயனாரிதனார். போர் பற்றிய செய்திகளை இந்நூலில் அறியமுடிகிறது.
- நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்,பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய பன்னிரு திணைகளின் இலக்கணத்தைத் துறை வகையோடு புறப்பொருள் வெண்பாமாலை விளக்குகின்றது.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள்
திணை | பொருள் விளக்கம் |
வெட்சி | பகைவரது ஆநிரை கவர்தல் |
கரந்தை
| பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல் |
வஞ்சி
| பகை நாட்டின்மீது போர் தொடுத்தல் |
காஞ்சி
| பகைவரை எதிர்த்துப் போரிடுதல் |
நொச்சி | பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல் |
உழிஞை | பகைவர், மதிலைச் சுற்றி வளைத்தல் |
தும்பை
| பகை மனனர் இருவரும் போரிடுதல் |
வாகை
| போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல்
|
பாடாண் | ஒருவனுடைய கல்வி, புகழ்,வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல் |
பொதுவியல்
| வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல் |
கைக்கிளை | ஒருதலைக் காமம் |
பெருந்திணை | பொருந்தாக் காமம் |

- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகே இரும்பேடு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழைமையான இரு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
- இவை அப்பகுதியில் வாழ்ந்த இனக்குழு தலைவா்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் அவா்களது நினைவாக எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.
- தொல்லியல் துறையினா் இதை சதிகற்கள் என்று அழைக்கின்றனா்.
- விஜயநகர மன்னா்கள் காலத்தில் வீரன் ஒருவன் போரில் இறந்தவுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறியிருக்கிறாா். அந்த இருவரையும் இன்று வரை மக்கள் ‘தங்கலான்’, ‘தங்கலாட்சி’ என்ற பெயரில் வழிபடுகின்றனர்
⚪ விளையாட்டு செய்திகள் :-

- தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்.
- சர்வதேச அளவில் பிரனீத் கவுர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாக அமைந்தது.

- சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகள் சார்பில் சர்வதேச ஓபன் FIDE ரேட்டிங் ஓபன் செஸ் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.3 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த போட்டி சென்னையில் உள்ள சீயோன் சர்வதேச பள்ளியில் வரும் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டியை மவுண்ட் செஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் இணைந்து நடத்துகிறது.
🟣 முக்கிய நாட்கள் :-

- உத்தரகாண்ட் மாநிலமானது 09.11.2000-இல், உத்தர பிரதேசத்திலிருந்து பிரித்து தனியாக உருவாக்கப்பட்டபோது உத்ராஞ்சல் என அழைக்கப்பட்டது.
- பின்னர் 2007-இல் உத்தரகாண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- முதல்வர் -புஷ்கர் சிங் தாமி
- ஆளுநர் - குர்மித் சிங்

- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 முதல் 14 வரை, அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம்(International Week of Science and Peace) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அந்தந்த நாடுகளில் அமைதியை வளர்க்கவும் மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
- 1986 ஆண்டு முதல் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (WORLD SCIENCE DAY FOR PEACE AND DEVELOPMENT) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தையும், அதிகரித்து வரும் அறிவியல் சவால்கள் பற்றிய விவாதங்களில் பொது மக்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்க இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Building Trust in Science”.
- 2001-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பினால் (UNESCO), இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
Tags:
Current Affairs