முதல் திருப்புதல் தேர்வு 2024
திருப்பத்தூர் மாவட்டம்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
|
|
அ. கைமாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
|
|
இ. அன்மொழித்தொகை |
1 |
|
|
ஆ. தளரப்பிணைத்தால் |
1 |
|
|
இ. சிரத்தையோடு
செய்தல் |
1 |
|
|
ஈ. வானத்தையும்,
பேரொலியையும் |
1 |
|
|
இ. குறிஞ்சி,
மருத, நெய்தல் நிலங்கள் |
1 |
|
|
இ. தமிழர்
பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு |
1 |
|
|
ஆ. பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
|
|
அ. கூவிளம்
தேமா மலர் |
1 |
|
|
ஆ.
3,1,4,2 |
1 |
|
|
ஈ. கோயம்புத்தூர்
– கோவை ( வினாவில் எழுத்துப்பிழை உள்ளது) |
1 |
|
|
ஈ. தனிப்பாடல்
திரட்டு |
1 |
|
|
அ. இரட்டுற
மொழிதல் அணி |
1 |
|
|
ஆ. கடல் |
1 |
|
|
இ. சந்தக்கவிமணி
தமிழழகனார் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
16 |
v பாசவர்
– வெற்றிலை
விற்போர் v வாசவர்
– நறுமணப்பொருள்
விற்பவர் v பல்நிண
விலைஞர்
– பல்வகை
இறைச்சிகளை விலைகூறி விற்பவர் v உமணர்
– உப்பு
விற்பவர் |
2 |
|
17 |
சரியான
வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
18 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார் # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம் |
2 |
|
19 |
விரும்பத்
தலுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள் |
2 |
|
20 |
இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை. |
2 |
|
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
|
2 |
|
23 |
அ. அழகியல், முருகியல் |
2 |
|
24 |
அமர்ந்தான்
- அமர்+த்(ந்)+த்+ஆன் அமர் –
பகுதி , த் – சந்தி, ந் – விகாரம், த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் விகுதி |
2 |
|
25 |
அ.
சிலைக்கு சீலை கட்டு ஆ.
பள்ளி விட்ட்தும் வீட்டுக்குச் சென்றான் |
2 |
|
26 |
இன்னிசையளபெடை
– ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது. |
2 |
|
27 |
முப்பால்
– மூன்று + பால் - ௩ ,
ஐந்திணை
– ஐந்து + திணை - ரு |
2 |
|
28 |
அ. மரத்தை
வளர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும் ஆ. சிறந்த
வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
காற்று
உயிருக்கு நாற்று
, தூய காற்று அனைவரின் உரிமை |
3 |
|
30 |
அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது. ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
|
31 |
அ. மொழிபெயர்ப்பால் ஆ. அனைத்துலக அறிவு இ. மொழிபெயர்ப்பு |
3 |
பிரிவு-2 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|
|
33 |
வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை
ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும்
சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு
நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்… |
3 |
|
|
34 |
அ.
|
3 |
|
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
ஆற்றுநீர்ப்
பொருள்கோள் – தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின்
நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
தன்மையணி எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும்
இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின்மனம் மகிழுமாறு
உரியசொற்களை அமைத்துப்பாடுவது தன்மையணியாகும். சான்று: ”மெய்யிற்
பொடியும் விரித்த கருங்குழலும் -----” அணிப்பொருத்தம்: கண்ணகியின்
தோற்றமும் , கண்ணீரும் கண்ட அளவிலேயே பாண்டிய மன்னன் தோற்றான். அவளது சொல் கேட்டவுடன் உயிரை நீத்தான். கண்ணகியின்துயர் நிறைந்த தோற்றத்தினை
இயல்பாக சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும். |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
|
38 அ. |
ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை
வர்ணிக்கும்போதும், நடை
அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம்
கண்முன் காண வைக்கிறது. ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச்
சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம் ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
||||||||||||
|
39
|
6,சோலை நகர்,
கோவில்பட்டி.
29-09-2020. அன்புள்ள அண்ணனுக்கு, தம்பி எழுதும் மடல். வணக்கம். தாங்கள்
புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாகனம் ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் கூற விரும்பி, இக்கடிதத்தில் அவற்றை எழுதியுள்ளேன். 1) தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டக் கூடாது. 2) சாலையின் வகைகள், மைல்கற்கள் விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். 3) போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும். 4) நடைமேடை நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும்,சாலையைக்
கடப்பவர்களையும், அச்சுறுத்தக் கூடாது. 5) எதிரில் வரும்,கடந்து
செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். 6) தேவை ஏற்படும்போது வேகத்தை குறைத்து,இதரவாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும். 7) இதர சாலைப் பயனாளிகளை நண்பர்களாக எண்ண வேண்டும். 8) மருத்துவமனை, பள்ளிகள் அருகே செல்லும்போது வேகத்தைக் குறைக்க வேண்டும். 9) மேலும் தேவையில்லாமல் ஒலிப்பான்களை ஒலிக்கக் கூடாது. மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துகள் நடைபெறாமல் காத்துக்கொள்ள முடியும். இவ் விதிகளை உங்கள் நண்பர்களும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினால், நலமாக
இருக்கும்.தங்கள்
பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
ப.கமலக்கண்ணன். உறைமேல்
முகவரி:
ஆ) அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் :
04-03-2021
உறை
மேல் முகவரி:
|
5 |
||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
|
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||
|
42
அ. |
(
மாதிரி விடை)
ஆ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய
தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு
தெரியும்?
எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள்
வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான
செய்தி.
நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும்
பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி
செலவாவதைத் தடுக்க இயலும் |
5 |
||||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. v திராவிட மொழிகளில் மூத்தது. v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம்
செய்ய வேண்டும். v தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.
ஆ) நீக்கப்பட்ட
பாடப்பகுதியிலிருந்து வினா கேட்கப்பட்டுள்ளது |
8 |
|
44 |
அ. முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின்
மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின்
பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. ஆ. இராமானுசர் நாடகம் முன்னுரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு
ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தண்டும் கொடியுமாக: திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக
இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அதனால் இராமானார், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர்
இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டு "நாள் உணக்கு
மட்டும் தான் அம்மந்திரத்தைச் சொல்வேன், நீ
உறவுகளுடன் என் வந்தாய்?" என வினவினார். அதற்கு
இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு
இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய
வேண்டும்" என்று கூறினார், ஆசிரியரின் கட்டளை: பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து "நான் கூறப்போகும் திருமந்திர
மறை பொருள்கள் உங்கள் மூவருக்கு மட்டுமே தெரிய வேண்டும். வேறு யாரிடமாவது இதைக்
கூறினால் அது ஆசிரியர் கட்டளையை மீறியதாகும். அப்படி நடந்தால் அதற்குத்தண்டனையாக
நாகமே கிட்டும்" என்றார். பின்னர் "திருமகளுடன் கூடிய நாரயணனின்
திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன்
சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்று பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும்
மூன்று முறை உரக்கச் சொன்னார்கள். திருமந்திரத்தை
மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல்
இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத்
தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச்
சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை
கூறினார்கள். குருவின் சொல்லை
மீறுதல்: குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பினளி நீங்கி பெரும் பேறு
பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று
விளக்கமளித்தார். குருவின் ஆசி இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார்.
இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார். முடிவுரை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற
உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென
வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார் |
8 |
|
45 |
அ. தலைப்பு : உழவெனும் உன்னதம் முன்னுரை: ”ஏர் முனைக்கு நேரிங்கே
எதுவுமே இல்லே” என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம். உழவுத்
தொழிலும் உழவர்களும்: ”நித்தமும் உழவே அவன்
நினைப்பு நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு” உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை
செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர்,
உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது. தமிழர்
வாழ்வில் உழவு ”தமிழனின் உதிரத்தில்
கலந்தது உழவு உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?” பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில்
மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை
மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில்
அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும்
விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில்
உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர். இலக்கியங்களில்
உழவுத் தொழில்: ”உழவர்கள் உழுத உழவினை நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன உழவின்
சிறப்பு: உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்
காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை
தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்
பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும்
அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார்
உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம். உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்: உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம்
வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும். முடிவுரை: 'சுழன்றும் ஏர்பின்னது
உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள்
எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார்
மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம்
அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப்
போற்றுவோம். ஆ. தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர் முன்னுரை: ”வாழ்ந்தவர்
கோடி! மறைந்தவர் கோடி! மக்கள் மனதில் நிலையாய்
நிற்பவர் யாரோ?” படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர்.
படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர்
என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர்
பற்றிக் காண்போமா? பிறப்பும் இளமையும்: ”விருதுப்பட்டிக்கு
இவரை விட பெரிய விருது தேவையா?” விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும்: சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார். தூய்மையும் எளிமையும்: ”எளிமையின்
இலக்கணம் – இவர் மனதில் கொண்டது பெருங்குணம்” பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர
அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர், மக்கள் பணியே மகத்தான பணி: 1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில்
பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18
மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில்
விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப்
படிப்பார். முடிவுரை: ”இருந்தாலும்
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன்போல யாரென்று ஊர்
சொல்ல வேண்டும்” 'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய
ஒப்பற்ற தலைவர் இவரே. |
|