10. ஆம்
வகுப்பு – தமிழ் – விரிவானக்கட்டுரை
இராமானுசர் நாடகம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு
ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தண்டும் கொடியுமாக:
திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக
இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அதனால் இராமானார், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட
பூரணர் கோபம் கொண்டு "நாள் உணக்கு மட்டும் தான் அம்மந்திரத்தைச் சொல்வேன், நீ உறவுகளுடன் என் வந்தாய்?" என
வினவினார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு
இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய
வேண்டும்" என்று கூறினார்,
ஆசிரியரின் கட்டளை:
பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து "நான் கூறப்போகும் திருமந்திர
மறை பொருள்கள் உங்கள் மூவருக்கு மட்டுமே தெரிய வேண்டும். வேறு யாரிடமாவது இதைக்
கூறினால் அது ஆசிரியர் கட்டளையை மீறியதாகும். அப்படி நடந்தால் அதற்குத்தண்டனையாக
நாகமே கிட்டும்" என்றார். பின்னர் "திருமகளுடன் கூடிய நாரயணனின்
திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன்
சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்று பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும்
மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.
திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:
திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல்
இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத்
தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச்
சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை
கூறினார்கள்.
குருவின் சொல்லை மீறுதல்:
குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பினளி நீங்கி பெரும் பேறு
பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று
விளக்கமளித்தார்.
குருவின் ஆசி
இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார்.
இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.
முடிவுரை
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய
மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்
