10 TH STD TAMIL FIRST REVISION EXAM ANSWER KEY TENKASI DISTRICT

 முதல் திருப்புதல் தேர்வு 2024  

தென்காசி மாவட்டம்  

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் 


வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                          பகுதி-1                                                                          15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

  1.  

ஈ. இளங்குமரனார்

1

  1.  

. ஐ, கு

1

  1.  

. கொன்றை வேந்தன்

1

  1.  

. வானத்தையும், பேரொலியையும்

1

  1.  

இ. செய்குத்தம்பி பாவலர்

1

  1.  

ஈ. கரகாட்ட்த்தின் வேறுபெயர்கள் யாவை?

1

  1.  

இ. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

  1.  

ஈ . நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

  1.  

. திருப்பதியும், திருத்தணியும்

1

  1.  

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

  1.  

அ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

1

  1.  

இ. எம் + தமிழ் + நா

1

  1.  

. பன்புத்தொகை

1

  1.  

. தமிழ் மொழியை

1

  1.  

. வேற்று மொழியினர்

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

சரியான வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

17

கி.பி.முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்ற கிரேக்க மாலுமி பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.நடுக்கடல் வழியே முசிறித் துறைமுகத்துக்கு வரும் வழியைக் கண்டுபிடித்தார்.எனவே யவனர்கள்(கிரேக்கர்கள்) அவர் பெயரையே அக்காற்றுக்கு வைத்தனர். 

2

18

அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2

19

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

20

v  பாசவர்வெற்றிலை விற்போர்

v  வாசவர்நறுமணப்பொருள் விற்பவர்

v  பல்நிண விலைஞர்பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்

v  உமணர்உப்பு விற்பவர்

2

21

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

2

                                                                                   

 

                                                                                   பிரிவு-2                                                                 5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

எதிர்காலம் உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

2

23

வெண்பா – செப்பலோசை     ஆசிரியப்பா - அகவலோசை

2

24

தண்ணீரைக் குடி: நீ தண்ணீரைக் குடி.      தயிரை உடைய குடம்தயிரை உடைய குடம் பார்

2

25

. அழகியல் , முருகியல்   . சின்னம்

2

26

முல்லை – வரகு, சாமை    மருதம் – செந்நெல் , வெண்ணெல்

2

27

அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்.    ஆ. அமிர்தமும் (அமிழ்தமும்)  நஞ்சு

2

28

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி, த் – சந்தி , த் – இறந்தகால இடைநிலை , அ- பெயரெச்ச விகுதி

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

    வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.

3

30

) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான  நலன்களை  உருவாக்குகின்றன.

    )இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என  எண்ணாமல்  ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

     ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று  சங்க  இலக்கியங்கள்  கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

     ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்   தேவையே.

3

31

. விளைபொருள்  வகை

. சம்பா கோதுமை, குண்டு கோதுமை, வாற்கோதுமை 

. செந்நெல், வெண்ணெல், கார்நெல்

3

                                                                             பிரிவு-2                                                                        2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

3

34

.

செம்பொ னடிச்சிறு கிண் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

     திருவரை யரைஞ ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

     பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

     கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

    ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

3

                                                                                பிரிவு-3                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

2.    மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

3.    பாடினேன் தாலாட்டுவினைமுற்றுத்தொடர்

4.    ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

3

36

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

      மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள் வரவேண்டாம் எனக் கூறிகையசைப்பதாகக் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

37

 

சீர்

அசை

வாய்பாடு

பல்லார்

நேர்+நேர்

தேமா

பகைகொளலின்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

பத்தடுத்த

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

தீமைத்தே

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

நல்லார்

நேர்+நேர்

தேமா

தொடர்கை

நிரை + நேர்

புளிமா

விடல்

நிரை

மலர்

3

                                                                                  பகுதி-4                                                                  5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

)

ü  மெய்க்கீர்த்திப் பாடல் சொல் நயம் , பொருள் நயம் மிக்கது

ü  இரண்டாம் இராசராசன் கருணையுடன் ஆட்சி செய்தான்

ü  மக்கள் அனைத்து நற்பண்புகளிலும் சிறந்து விளங்கினர்

ü  கல்வியில் சிறந்து விளங்கினர்.

ü  அவனது நாட்டில் எவ்வித குற்றங்களும் நடைபெறவில்லை.

ü  மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர்.

5

39

 

ü  அ. அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

)

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,           சேலம் – 636001

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                   இப்படிக்கு,

            1. கட்டுரை                                                                                                                                                       தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                               அ அ அ அ அ.

நாள் : 04-03-2021


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

)

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

   ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

     பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

     இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

      வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறதுவின்ஸ்டன் சர்ச்சில்

5

                                                                             பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

 

) உரிய விடை எழுதியிருப்பிஹ் மதிப்பெண் வழங்குக.

8

44

. முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:                                                                                                       

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

. தலைப்பு: விண்ணியல் அறிவு (விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்)

முன்னுரை:

எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும்

நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும் தெரியும்

      தமிழர் அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழன் அறிவியலின் முன்னோடி:

       தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று.

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

                                                       கருவளர் வானத்து இசையில் தோன்றி"

      எனத்தொடங்கும் பரிபாடலில் புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில்

            முயற்சிகளைச் செய்துபார் ஆகாயம் உன் காலடியில்

      விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

           1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.

நமது கடமை:                                           

                   ”அறிவியல் எனும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்

                   கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்”     - வைரமுத்து

        அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும்  அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

       "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

. மாற்றப்பட்ட வினா தரப்பட்டுள்ளது

 பதிவிறக்க

 

 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post