முதல் திருப்புதல் தேர்வு 2024
தருமபுரி & திண்டுக்கல் மாவட்டம்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
|
ஆ. மணி வகை |
1 |
|
|
ஆ, இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
1 |
|
|
ஈ. சிற்றூர் |
1 |
|
|
இ. பால்
வழுவமைதி, திணை வழுவமைதி |
1 |
|
|
ஈ. மன்னன்
, இறைவன் |
1 |
|
|
இ. தண்டவாளக்
குறுக்குக் கட்டைகள் |
1 |
|
|
ஈ. அங்கு
வறுமை இல்லாததால் |
1 |
|
|
ஈ . சிலப்பதிகாரம் |
1 |
|
|
ஆ. இரண்டாம்
இராசராசன் |
1 |
|
|
ஆ. அதியன்,
பெருஞ்சாத்தன் |
1 |
|
|
இ. வினா
எதிர் வினாதல் விடை |
1 |
|
|
ஆ. திருவிளையாடற்
புராணம் |
1 |
|
|
அ. பரஞ்சோதி
முனிவர் |
1 |
|
|
இ. புண்ணிய,
எண்ணிய |
1 |
|
|
இ. பாண்டிய
மன்னன் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
|
16 |
சரியான வினாத்தொடரை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
|
18 |
கலைஞரைப் பேராசிரியர்
அன்பழகனார், பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக்
கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும்
பாராட்டியுள்ளார். |
2 |
|
19 |
நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதல் உண்டு
, நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு |
2 |
|
20 |
செயற்கைக்
கோள் , இயந்திர மனிதன் |
2 |
|
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை
அறிந்து செயல். ( வினா தவறு, ”செயற்கை” எனத்தொடங்கும் குறள்) |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ.
வெளிப்படையாகக் காட்டு ஆ. பார்க்காத படம் |
2 |
|
23 |
அ.
காடு ஆ. காற்று |
2 |
|
24 |
பதிந்து
- பதி +த்(ந்) + த் +உ; பதி - பகுதி த் - சந்தி (ந் -ஆனது விகாரம்) த் - இறந்தகால இடைநிலை உ-வினையெச்ச விகுதி |
2 |
|
25 |
அ. காப்புரிமை ஆ. குறியீட்டியல் அ. கற்குவியல் ஆ. ஆட்டுமந்தை |
2 |
|
26 |
அ.
பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் ஆ. கோபத்தை
ஆறப்போட வேண்டும். |
2 |
|
27 |
வெண்பாவின்
பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா (எ-கா)
வேலொடு
நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான்
இரவு. |
2 |
|
28 |
அ. கல்வியே
ஒருவருக்கு மிகுந்த உயர்வு தரும். ஆ. மரத்தை
வளர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும். |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
# மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது. # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. |
3 |
|
30 |
அ) ராமன்
மீது கொண்ட பக்தியால் ஆ) பெருமாள் திருமொழி (
திருவாய்மொழி) இ) குலசேகர ஆழ்வார் |
3 |
|
31 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும்
கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
பிரிவு-2 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|
|
33 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
|
|
34 |
அ.
|
3 |
|
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
– தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
நிரல்நிறை அணி நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி
அவ்வரிசைப்படியே இணைத்துப் பொ ருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். எ.கா. அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வவாழ்க்கை பண்பும் பயனும்
அது. பாடலின்
பொருள்: இல்வவா ழ்க்கை அன்பும்
அறமும் உடையதாக
விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே
ஆகும். அணிப்பொருத்தம் இக்குறளில் அன்பும் அறனும்
என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற
சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது
நிரல் நிறை அணி ஆகும். |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
|
38 அ. |
ü கூத்தன்,மற்றொரு
கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து
நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. ü தற்காலத்தில் ஆசிரியர்களும்,குறிப்பிட்ட
துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
|
39
|
8,சோழன்தெரு,
செங்குன்றம்.
22-09-2020. அன்புள்ள மாமாவுக்கு,
தமிழ்த்தென்றல்
எழுதும் கடிதம். நான்
இங்கு நலம். தங்கள்
மற்றும் தங்கள் குடும்பத்தினரின் நலம் அறிய ஆவல்.சென்ற
வாரம் எங்களது பள்ளித் திடலில் பணப்பை ஒன்று கிடைத்தது.
அதை
என்னுடைய தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.அதைத்
திறந்து பார்த்தபோது, தான்
அதில் பெருந்தொகையான பணம் இருப்பது தெரிய வந்தது. அதை எனது
தலைமையாசிரியர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு செய்தேன்.
அதற்காக
என்னை எனது தலைமை ஆசிரியரும், என்னுடைய
ஆசிரியர்களும் என்னைப் பாராட்டி,இறைவணக்கக்
கூட்டத்தில்,சிறப்பு
செய்தனர்.இந்த செய்தி,
நாளிதழிலும் வெளி வந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது.
எனவே
இச்செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள்
அன்புடைய,
பெ.தமிழ்
தென்றல். ஆ) அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் :
04-03-2021
உறை மேல் முகவரி: |
5 |
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
42
அ. |
(
மாதிரி விடை) 1. குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2. உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3. விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4. நூல்களைப் படித்தல். 5.
திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன்
பயன்பாட்டை குறைக்கச் செய்தல். ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின்
உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும்
மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும்
சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) ( மாதிரி) ஆ) # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும்
பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும். |
8 |
|
44 |
அ. முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை
கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும்
அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. ஆ.
அ. முன்னுரை: ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார் நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று
மேளமும்,நாகசுரமும் வேகமாக
ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம்
திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார்
பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்
புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின் உதவி: சிறிது நேரம்
கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில்
சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.
அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று
நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம் அனுமார் கழற்றி
வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப்
போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார் போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு
ஆடு என்றார்”. அவனும் நன்றாக ஆடினான். அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான்.
பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று,
வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார். முடிவுரை: “என்னலே, எனக்கே
பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்
கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான். |
8 |
|
45 |
அ. உட்தலைப்புகள் இட்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ஆ. முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர்
எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்:
பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்:
96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும்
தமிழ்: சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்
பல்வேறு வகையான
இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட
செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
|