7 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-3
செயல்பாடு- 3 அளவீடுகள்
அனைத்து அறிவியல்
ஆய்வுகளுக்கும் அளவீடு அடிப்படையானது. நமது அன்றாட வாழ்விலும் அளவீடு இது முக்கிய
பங்கு வகிக்கிறது. மதிப்பு தெரிந்த ஒரு திட்ட அளவினைக் கொண்டு,தெரியாத அளவின் மதிப்பைக் கணக்கிடும் செயல்பாடே அளவீடு ஆகும். ஒரு அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக
நமக்கு மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன. அவை கருவி திட்ட அளவு மற்றும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட அலகு ஆகும்.
அலகு என்பது
தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும். உலகின் பல்வேறு
பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு விதமான அலகு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர் .
அவற்றில் சில
பொதுவான முறைகள் பின்வருமாறு
FPS முறை: ( நீளம்-அடி,நிறை-பவுண்ட் மற்றும் காலம்-வினாடி)
CGS முறை: (நீளம்-சென்டிமீட்டர்,நிறை-கிராம் மற்றும் காலம்-வினாடி)
MKS முறை: (நீளம்-மீட்டர்,நிறை-கிலோகிராம் மற்றும் காலம்-வினாடி)
பன்னாட்டு அலகு முறை(SI UNITS)
1960ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11வது பொது மாநாட்டில், அறிவியல் அறிஞர்கள், இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்த்தினர் அந்த அலகு முறையானது. பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறை என்று அழைக்கப்படுகிறது.
கற்றல் விளைவு
இயற்பியல் அளவைகளை அளவிட்டு SI அலகுகளில் தெரிவித்தல். எ.கா. நீளம் கற்றுக்கொண்ட அறிவியல் கருத்துகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
மதிப்பீட்டு
செயல்பாடுகள்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.கீழ்கண்டவற்றுள் உன்னுடைய உயரத்தை அளக்க உதவும்
அலகு எது?
அ) கிலோகிராம்
ஆ)மீட்டர் இ)கிலோமீட்டர் ஈ)வினாடி
விடை; ஆ)மீட்டர்
2)________ஐ பயன்படுத்தி மிகத்துல்லியமாக எடையை
அளக்கலாம்.
அ)கடிகாரம் ஆ)கை கடிகாரம் இ)நிறுத்து கடிகாரம்
ஈ)அளவீடுகள்
3)ஐந்து கிலோ மீட்டர் என்பது __________க்கு சமம் .
அ)500 செ.மீ ஆ) 500 மீ இ)5000
மீ ஈ)5000 செ.மீ
விடை;
இ)5000 மீ
4) திரவத்தின் பருமனை பொதுவாக ______ என்ற அளவு மூலம் அளவிடலாம்.
அ)லிட்டர் ஆ)கிராம் இ)நானோ ஈ)கிலோ
விடை; அ)லிட்டர்
5) மெட்ரிக் முறை அலகுகள் 1790ல் ________ஆல் உருவாக்கப்பட்டது.
அ) இத்தாலி ஆ)ஆஸ்திரேலியா
இ)ரஷ்யா ஈ)பிரான்ஸ்
விடை; ஈ)பிரான்ஸ்
II.கோடிட்ட இடங்களை நிரப்புக
6) 20 டெ.சீ மீட்டர் என்பது______ஆகும்.
விடை; 2
மீட்டர்
7)நிலவில் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு
விசைப்போல் ________ல் பங்கு தான் உள்ளது.
விடை; ஆறில் ஒரு பங்கு
8) ஒரு மீட்டர்__________ சென்டிமீட்டர் .
விடை; 100
சென்டிமீட்டர்
9) ஒரு அளவை அளவிடும் முறைக்கு_______என்று பெயர்.
விடை; அளவீடு
10). ஒழுங்கற்ற பொருள்களில் பருமனை அளந்தறிய________முறை பயன்படுகிறது.
விடை; குவளை
III. சரியா தவறா என எழுதுக
11.மண்ணெண்ணெய் அளவு ஜாடி மூலம் அளவிடப்படுகிறது.
விடை; சரி
12. திடப்பொருள்கள் கொள்கலன் வடிவத்தை
கொண்டிருக்கும்
விடை; தவறு
13. துல்லியமான எடையை காண மின்னணுத்தராசு என்ற
கருவி பயன்படுகிறது.
விடை; சரி
14. SI அலகு முறை என்பது உலகம் முழுவதும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்.
விடை;சரி
15.முழம் என்பது நேரத்தை அளவிடும் நம்பகத்தன்மை
தகுந்த முறையாகும்.
விடை; சரி
IV. பொருத்துக
16.கெல்வின் - வெப்பநிலை
17.மீட்டர் - நீளம்
18. ஆம்பியர்- மின்னோட்டம்
19. மோல்- பொருட்களின் அளவு
20. கேண்டிலா- ஒளிச்செறிவு