7 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-4
செயல்பாடு- 4 வெப்பம்
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பொருட்களும் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே மூலக்கூறுகளின் அக ஆற்றல் ஆகும். இந்த அக ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் பொழுது அது வெப்ப ஆற்றல் எனப்படுகிறது.
வெப்பத்தின் விளைவுகள்
திடப்பொருள்களை
விட திரவப்பொருட்கள் அதிகமாக விரிவடையும் ஆனாலும் வாயு பொருள்கள் இவை இரண்டையும்
விட அதிகமாக விரிவடையும்.
எளிய பரிசோதனைகளை
மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளை கண்டறிதல் எடுத்துக்காட்டு வெப்பம்
கற்றுக்கொண்ட அறிவியல் கருத்துகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல் எடுத்துக்காட்டு வெப்பம
மதிப்பீட்டு
செயல்பாடுகள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1)நமது உடலின் சராசரி வெப்பநிலை________ஆகும்.
அ) 36°C ஆ)
34°C இ)37°C ஈ)35°C
விடை; இ)37°C
2) பழச்சாறு தயாரிக்கும்போது வெப்பத்தை குறைக்க_______சேர்க்கிறோம்.
அ) உப்பு ஆ)பனிக்கட்டி இ)எலுமிச்சை சாறு
ஈ)சர்க்கரை
விடை; ஆ)பனிக்கட்டி
3. பொருள்களின் வெப்பநிலை_________ பாயும் திசையை தீர்மானிக்கிறது.
அ) நிலை ஆற்றல் ஆ) இயக்க ஆற்றல் இ)ஒளி ஆற்றல் ஈ)வெப்ப ஆற்றல்
விடை; ஈ)வெப்ப ஆற்றல்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
4. மரக்கட்டை நிலக்கரி எரிவாயு போன்றவற்றை
எரிப்பதால்________பெறலாம்.
விடை; வெப்பத்தையும் ஒளியையும்
5.வெப்பநிலையானது மூலக்கூறுகளின் ___________ இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஒரு அளவீடு.
விடை; சராசரி
6. மின் இஸ்திரி பெட்டியில் மின்னோட்டம் ஒரு
கடத்தியின் வழியே பாயும் போது ________உருவாகிறது.
விடை; வெப்பம்
7. ___________ ஒளி நம் உடலில் படும் பொழுது நாம் வெப்பத்தை
உணர்கிறோம்.
விடை; சூரிய
8. ______________ ஒருவகை ஆற்றலாகும்.
விடை; வெப்பம்
III. சரியா தவறா என எழுதுக
9.பொருள்களைக்குளிர்விக்கும் போது வெப்பநிலை உயர்கிறது
விடை; தவறு
10. இரு பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயும் போது
வெப்பம் உட்கொள்ளப்படுகிறது.
விடை; தவறு
11.ஆதிகால மனிதன் இரு கட்டைகளை உரச செய்து
நெருப்பை உருவாக்கினார்.
விடை; தவறு
12.நாம் சூரியனும் இருந்து வெப்பம் ஒளியும்
பெறுகிறோம்.
விடை;சரி
13. ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை
பாதிக்குமானால் அவை இரண்டும் வெப்ப தொடர்பில் உள்ளது.
விடை; சரி
IV. பொருத்துக
14. வெப்பம் - ஜூல்
15.வெப்பநிலை- கெல்வின்
16. வெப்ப சமநிலை- வெப்பப் பரிமாற்றம் இல்லை.
17.பனிக்கட்டி- 0°C
18.நீரின் கொதிநிலை- 100° C