வினாத்தாள் 7 - இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(151-175)

 இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் முந்தைய வருட தேர்வு வினாக்கள்(151-175)


கீழே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வருட இந்திய தேசிய இயக்க வரலாறு தேர்வு வினா-விடைகளை (151-175 ) படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) (151-175) இல் பங்குபெற 👇


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு முந்தைய வருட தேர்வு வினா-விடைகளை (151-175 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇

151. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது ?

A) கோகலே.     -   நியூ இந்தியா

B) பாரதியார் ‌   -யுகந்தர்

C) திலகர்           -  கேசரி*

D) காந்திஜி        -காமன் வீல்

 

152. ஆய்க.

துணிபுரை(A)ஒத்துழையாமை

இயக்கத்தைகாந்திஜி வாபஸ் வாங்கினார்

காரணம் (R) சௌரி சௌராவில் போலீஸ்காரர்கள்கொல்லப்பட்டது அவரது மனத்தை மாற்றியது

குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

A) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம்(R) ஆகும்*

B) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம்(R) அல்ல

C) (A) உண்மை, ஆனால் (R) தவறானது D) (A) தவறு, ஆனால் (R) உண்மை

 

153. காந்திஜியின் அரசியல் குரு

A) பாலகங்காதர திலகர்

 B) தாதாபாய் நௌரோஜி

C) லாலா லஜ்பத் ராய்

 D) கோபாலகிருஷ்ண கோகலே*

 

154. ஆய்க.

துணிபுரை (A) : இந்தியர்கள் சைமன்

கமிஷனைபுறக்கணித்தனர்.

காரணம் (R) : அது இந்தியர் பிரச்சனையை சரியாக ஆராயவில்லை

இதில்

A) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம்(R) ஆகும்

B) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம்(R) அல்ல

C) (A)உண்மை,ஆனால்(R)தவறானது* D) (A) தவறு, ஆனால் (R) உண்மை

 

155. பின்வகுவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை 

A) அலிகார் இயக்கம்-ஜின்னா*

B) ஹோம்ரூல் இயக்கம்-திலகர்

 C) உப்பு ஈத்தியா கிரகம் -காந்திஜி

D) வங்காளப் பிரிவினை- கர்சன்

156. தனிநாடு வேண்டி முஸ்லிம் லீக் எப்போது கோரிக்கைவிடுத்தது?

 A) 1939

B) 1940*

C) 1941

D) 1942

 

157. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

 A) சி.இராஜகோபாலாச்சாரி

 B) மௌண்ட்பேட்டன் பிரபு*

C) ஜவஹர்லால் நேரு

 D) சர்தார் வல்லபாய் படேல்

குறிப்பு: சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்

சி. இராஜகோபாலாச்சாரி

 

158, பட்டியல் I-ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான

பதிலைத் தேர்ந்தெடு

 

பட்டியல் (1)                          பட்டியல் (2)

 a) பாண்டிச்சேரி       1. ஆங்கிலேயர்கள்

b) கோவா                    2. டேனியர்கள்

c) தரங்கம்பாடி     3. பிரெஞ்சுக்காரர்கள்

d) மதராஸ்             4. போர்ச்சுகீசியர்கள்

குறியீடுகள்

    a   b   C    d

A) 4  1   2  3

 B) 2  3  4  1

C)  3  4   2  1*

D) 4   3  1   2

 

59. பட்டியல் 1-ஐ பட்டியல் 11 - உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான

பதிலைத் தேர்ந்தெடு 3

பட்டியல் (1)                        பட்டியல் (2)

a) மூங்கில் நடனம்          1.பஞ்சாப்

b) பங்காரா                       2.தமிழ்நாடு

c) சுதி                                3.நாகலாந்து

d) கோலாட்டம்                 4. வங்காளம்

 

      a   b  C  d

A)  2    3  1  4

B) 2    1   4  2

C) 3    1  4   2*

D) 4    3   2   1

 

160. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது

A) நாளாசாகிப்    -ஜான்ஸி

B) குன்வார்சிங்   -  காள்பூர்

C) பேகம் ஹசரத் மஹால்- லக்னோ *

 D) லெட்சுமி பாய்   -    குவாலியர்

 

161. பாராக்பூர் சிப்பாய் கலகம் தோன்ற உண்மையானகாரணம்

A) பூர்வீக வங்காள படையினர், பர்மியருக்கு எதிராகசண்டையிட மறுத்தனர்*

 B) சிப்பாய்கள் அதிகம் படி கேட்டனர்

C) இந்திய வீரர்கள் அலட்சியத்துடன் நடத்தப் பட்டனர்

 D) இந்திய வீரர்கள் தலைப்பாகைகள் அணிய மறுத்தனர்

 

162.பழங்காலத்தில்இந்தியநுழைவாயிலாக இருந்தது

A) கயா

 B) பம்பாய்

 C) துவாரகா

 D) கைபர்*

163. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்க: கூற்று. (A): 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்இந்தியதேசிய காங்கிரஸ் வெளியேறுவெள்ளையனே

தீர்மானத்தை பின்பற்றியது

காரணம்(R): கிரிப்ஸ் தூதுக்குழு உடனடியாக சில சலுகைகளை அளிக்காமல் வருங் காலத்திற்கு சில வாக்குறுதிகளைதந்தது

 கீழ் உள்ளவற்றை கொண்டு சரியான விடையளி:

A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) க்கு சரியானவிளக்கம் அல்ல

B) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) க்கு சரியானவிளக்கம்*

C) (A) சரி ஆனால் (R) தவறு

 D) (A) தவறு ஆனால் (R) சரி

164. பட்டியல் 1- ஐ பட்டியல் II - உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான

பதிலைத் தேர்ந்தெடு

 பட்டியல் (1)                           பட்டியல் (2)

a) சார்ஜன்ட் கல்வி திட்டம் 1. கி.பி.1948

b) ஹார்டாக் கமிட்டி             2. கி.பி. 1835 c) மெக்காலே அறிக்கை.     3. கி.பி. 1944

d)ராதாகிருஷ்ணன்கமிஷன்4.கி.பி.1929

     a b c d

A)  2 3 4 1

B)  4 1 2 3 

C)  2  1 3 4

D)  3  4 2 1*

 

165. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

 A) மௌரியர்கள்  -ஒரே சுல்லால் ஆன தூண்கள்.*

B) குஷானர்கள்க-குகை கட்டிட கலை                                   

C) குப்தர்கள்           -காந்தாரக்கலை

 D) நாயக்கர்கள்       -இரதங்கள்

 

166. சமண மதத்தை பொறுத்தமட்டில் கீழ்க்கண்டகூற்றுகளில் எவை சரியானவை

1. மகாவீரர், ஆன்மா, ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறி செல்லும் என்பதை நம்பவில்லை

II. மகாவீரர் மோட்சமடைவதை வலியுறுத்தினார்

III. உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீரர் மறுத்தார்

 IV. மகாவீரர் யாகங்கள், பலிகள், சடங்குகள் ஆகியவற்றிற்குஎதிரானவர் 

இவற்றில்,

A) 1 மற்றும் II சரியானவை

B) I, மற்றும்III சரியானவை

C) II மற்றும் III சரியானவை

D) I,III மற்றும் IV சரியானவை*

 

167. கீழ்க்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு இல்லை

A) கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை அவர்கருதவில்லை*.

 B) உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் நிலையற்றவை

என வெளியிட்டார்.

C) ஆசையே அனைத்து துன்பங்கட்கும் காரணம் என அவர்கூறினார்.

D) கரும விதி, மறு பிறவி ஆகியவற்றை வலியுறுத்தினார்.

 

168. இந்திய 'சமய சார்பிலா' கோட்பாட்டை உருவாக்கியதலைமை சிற்பி

A) இந்திரா காந்தி

B) காந்தி*

 C) ஜவஹர்லால் நேரு

 D) தாகூர்

 

169. 'நேரடி நடவடிக்கை நாள்' என முஸ்லீம் லீக் குறித்தது 

A) 2 செப்டம்பர், 1946

B) 16 ஆகஸ்ட், 1946*

 C) 14 நவம்பர், 1946

 D) 23 டிசம்பர், 1946

 

170. 'செஞ்சட்டையர்களின்' தலைவர்

A) மகாத்மா காந்தி 

B) எல்லை காந்தி*

C) சுபாஷ் சந்திர போஸ்

 D) பகத்சிங்

 

171.1878ம் ஆண்டு சுதேசி மொழியில் பத்திரிகைசட்டத்தை கொண்டு வந்தவர்

 A) கானிங் பிரபு

B) லிட்டன் பிரபு*

C) ரிப்பன் பிரபு

D) கர்சன் பிரபு

 

172. இந்தியாவின் முதுபெரும் மனிதர், என்று அன்புடன் அழைக்கப்படுபவர்

A) காந்திஜி 

B) தாகூர்

C) தாதாபாய் நௌரோஜி*

D) திலகர்

173) 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் தந்தி கம்பி அமைக்கப்பட்டது

A)மும்பை முதல் தானா வரை

B) கல்கத்தா முதல் ராணி காஞ்சி வரை

C)கல்கத்தா முதல் ஆக்ரா வரை*

D)சென்னை முதல் அரக்கோணம் வரை

 

174. கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக:

1. பிட் இந்திய சட்டம்

II. ஒழுங்கு முறை சட்டம்

III. மிண்டோ மார்லி சீர்திருத்த சட்டம் IV.விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை

இவற்றில்,

A) I, II, IV, III 

B) II, III, I, IV

C) IV, I, III, II

 D) II, I, IV, III*

 

175.கீழ்கொடுக்கப்பட்டவற்றுள்,எந்த

ஒன்றுசரியாகப்பொருத்தப்பட்டுள்ளது?

A) சாஸ்திரி, சிரிமாவோ ஒப்பந்தம்-1964

B) சிம்லா ஒப்பந்தம்                           -1974

C) தாஷ்கண்ட் ஒப்பந்தம்                -1966*

D) பஞ்ச சீல ஒப்பந்தம்                      -1955

 







Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post