ஏவுகணை நாயகன் A P J அப்துல் கலாம் பற்றிய தகவல்கள்


ஏவுகணை நாயகன் A P J அப்துல் கலாம் பற்றிய தகவல்கள்


வினாடி வினாவில் பங்கு பெறுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


இந்திய துணை கண்டத்தின் தென்கோடியில் பிறந்து இந்தியப் பேரரசின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். அப்துல் கலாம். இந்தியாவின் எல்லை நகரங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில்  ஒரு நடுத்தர குடும்பத்தில் 1931 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம். தந்தை-ஜைனுல்லாபுதீன், தாய்-ஆஷியம்மா, ஐந்து அண்ணன்கள் ஐந்து அக்காக்கள் , கலாம் தான் அந்த வீட்டின் கடைக்குட்டி. ஆவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல்கலாம் என்று அவருக்கு பெயரிடப்பட்டது . பவுல் என்பது கலாமின் கொள்ளுத் தாத்தா. பக்கீர் என்பது தாத்தாவின் பெயர்.இவர்களை மரக்காயர் குடும்பம் என்பார்கள்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூதாதையர் வீட்டில்தான் கலாமின் குடும்பம் வசித்தது. அவர்கள் வசித்த தெருவின் பெயர் மசூதி தெரு மசூதி உள்ள தெருவில் வளர்ந்ததாலே கலாமுக்கு இறை பக்தி அதிகம் தினமும் பள்ளிக்கூடத்திற்கு செல்கிராறோ  இல்லையோ பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டே  ஆகவேண்டும்.

     ராமேஸ்வரத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்று மூன்று மதத்தினரும் இருந்தார்கள். ஆனாலும் அங்கு மதரீதியிலான பிரச்சினைகள் தலைதூக்கியது கிடையாது. செயின்ட் ராயப்பா சர்ச்சில் விழாக்கள் நடக்கும் போது மத பாகுபாடு பாராமல் எல்லோரும் அந்த விழாவில் கலந்து கொள்வார்கள். சிவன் கோயிலுக்குள் நிறைய முஸ்லிம்களை காணமுடியும். சிவன் கோவில் குருக்கள் பக்ஷிலஷ்மண சாஸ்திரிகளும்ஜைனுல்லாபுதீன் சிறந்த நண்பர்கள். ஒருவருக்கொருவர் அடுத்தவருடைய கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுப்பார்கள் . இருவரும் சேர்ந்தால் அங்கு அழகான பிரசங்கமே  நடக்கும் .ஆன்மிகம் என்பதற்கு இருவரும் விளக்கம் சொல்வார்கள். அருகே அமர்ந்து மாறிமாறி இருவரையும் வேடிக்கை பார்க்கும் கலாம் இரண்டில் எது சுலபமாகப் புரிகிறதோ அதை ஏற்றுக் கொள்வார்.


ராமேஸ்வரத்தில் வர்த்தகன் தெருவில் இருந்த தொடக்கப் பள்ளியில்தான் கலாம் படித்தார் . அந்தப் பள்ளிக்கூடம் தான் ராமேஸ்வரத்தில் முதல் முதலாக திறக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஆகும்.  ராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளி முடித்தபின்னர் ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில்  கலாம் சேர்ந்தார்.தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. ராமநாதபுரம் அவரைக் கவரவில்லை ராமநாதபுரத்தில் நினைவு அடிக்கடி எழுந்தது. சமயம் கிட்டும் போதெல்லாம் ராமேஸ்வரம் போய் வருவார்.

ராமநாதபுரத்தில் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை முடிந்ததும் 1950ஆம் ஆண்டு இன்டர்மீடியட் வகுப்பில் சேர திருச்சி புனித வளனார் கல்லூரிக்கு வந்து சேர்ந்த அப்துல் கலாம்.  அங்கு இன்டர்மீடியட், பிஎஸ்சி பட்டப்படிப்பையும் முடித்தார்.  அவர்  பி எஸ் சி படிப்பில் சேர்ந்த போது  வேலைவாய்ப்புகளோடு  தொடர்புடைய உயர்கல்வி படிப்புகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. பி எஸ் சி சேர்ந்த பின்னர்தான் தான் விரும்பிய இயற்பியல் பாடம் அதில் இல்லை என்பதைக் கண்டார்.


பொறியியல்  கல்வி வகுப்பில் சேர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது கனவு சாத்தியமாகும். இன்டர்மீடியட் முடிந்ததுமே பொறியியல் வகுப்பில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அப்பொழுது அது பற்றிய விஷயங்கள் தெரியாத காரணத்தால் பி எஸ் சி எல் சேரும்படி ஆகிவிட்டது. ஒருவழியாக பிஎஸ்சி படிப்பும் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்தார். தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெயர் பெற்ற எம் ஐ டி இல் சேர விண்ணப்பித்தார்


எம் ஐடியில் சேர்ந்த அப்துல் கலாம். கல்லூரியில் நுழைந்ததுமே அவருக்கு மகிழ்ச்சி அளித்த காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்கள். மாணவர்களுக்குச் செய்முறை விளக்கம் காண்பிப்பதற்கான விமானங்கள் அவை. அந்த விமானங்கள் அவரது கனவை வளர்த்தன. பறவை மாதிரி பறக்க வேண்டும் என்று கற்பனைச் சிறகு விரித்த மனிதனின் அறிவியல் உண்மை இந்த விமானம்.பயிற்சி முடிந்து விமானப் பொறியாளர் பட்டத்துடன் வெளிவந்தார் கலாம்



வினாடி வினாவில் பங்கு பெற

8 Comments

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post