📚 திருக்குறளின் சிறப்புகள் 📚

 📖 *திருக்குறளின் சிறப்புகள்:-* 📖






*1.* 👉  *திருக்குறளில்  ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை*

*2.* 👉🏾  *திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812*

*3.* 👉  *திருக்குறளின் முதல் பெயர் ~ முப்பால்*

*4.* 👉🏾  *திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133*

*5.* 👉  *அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள்,*

*6.* 👉🏾  *பொருட்பாலில் 70 அதிகாரங்கள்*

*7.* 👉  *காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.*

*8.* 👉🏾  *திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் ~ 1330*

*9.* 👉  *திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380*

*10.* 👉🏾  *திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700*

*11.* 👉  *திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250*

*12.* 👉🏾  *திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்:*

👉  குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71)

👉  குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)

*13.* 👉🏾 *திருக்குறள் அ கரத்தில் தொடங்கி ன கரத்தில் முடிகிறது*

*14.* 👉  *ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது*

*15.* 👉  *திருக்குறளில் உள்ள சொற்கள் ~ 14,000*

*16.* 👉🏾  *திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194*

*17.* 👉  *திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247_இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை*

*18.* 👉🏾  *திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்*

*19.* 👉  *திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை*

*20.* 👉🏾  *திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்*

*21.* 👉  *திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி*

*22.* 👉🏾  *திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள*

*23.* 👉  *திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.*

*24.* 👉🏾  *திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து – னி*

*25.* 👉  *திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" -  ஆறு முறை*

*26.* 👉🏾  துறவு: குறள் எண்: 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

*27.* 👉  *திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ, ங*

*28.* 👉🏾  *திருக்குறளில் நேரடியாக இடம்பெறாத சொல்- கடவுள்*

*29.* 👉  *திருக்குறளில் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.*

*30.* 👉🏾  *திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.*

*31.* 👉  *திருக்குறள் எண் 411_யில் ஐந்து முறை செல்வம் என்கிற சொல் வருகிறது.*

_செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்_
செல்வத்துள் எல்லாம் தலை

*32.* 👉  *திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்*

*33.* 👉🏾  *திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்*

*34.* 👉  *திருக்குறளை உரையாசிரியர்களுள் 10_வது உரையாசிரியர் - பரிமேலழகர்*

*35.* 👉🏾  *திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.*

*36.* 👉  *திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி யு, போப்*

*37.* 👉🏾  *திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.*

*38.* 👉  *திருக்குறளில் இடம்பெறாத இரு எண்கள்- ஏழு மற்றும் ஒன்பது*

*39.* 👉🏾  *திருக்குறள் அதிகமான மொழிகளில் வெளிவந்துள்ளது*

*40.* 👉  *திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியில் எழுதியவர் கிட்டு சிரோன்மணி.*

*41.* 👉🏾  *நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது.*

*42.* 👉  *திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்*

*43.* 👉🏾  *குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.*

*44.* 👉  *வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.*

*45.* 👉🏾  *வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.*

*46.* 👉  *திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.*

*47.* 👉🏾  *திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.*

*48.* 👉  *திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்.*

*49.* 👉🏾  *திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.*

*50.* 👉  *சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.*

*51.* 👉🏾  *திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.*

*52.* 👉  *திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.*

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post