கபீா் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 கபீா் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்





 தமிழக அரசின் 2022ம் ஆண்டுக்கான கபீா் புரஸ்கார் விருது பெற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரால் குடியரசு தினவிழாவின்போது கபீா் புரஸ்கார் விருது‘ வழங்கப்படுகிறது. 

இவ்விருது மூன்று பிரிவுகளின்கீழ் தலா ரூ.20,000, ரூ.10,000, மற்றும் ரூ.5,000 என தகுதி உடையோருக்கு வழங்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளா்கள் ஆகியோர் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப்பணியின் ஒரு பகுதியாக நிகழும்பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவா். இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாந்தவா்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

 மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலகம் செயல்படும் இடமான இந்திய விளையாட்டு ஆணையம், பயிற்சி மையம், ராஜன் தோட்டம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு வரும் 12ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 மேலும் விபரங்களுக்கு 74017 03459 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post