இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 23/05/2023
தமிழகம் :-

- நவம்பர் 1,1956 - மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை `மதராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் `மதராஸ் ஸ்டேட்' ஆனது.
- ஜூலை 27, 1956- மெட்ராஸ் எனும் பெயரை மாற்றி 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.
- அக்டோபர் 13, 1956- தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்த சங்கரலிங்கனார், 76-வது நாளில் உயிர் துறந்தார்.
- மே 7, 1957- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைந்த திமுக, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென்று தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள், எதிர்த்து 127 வாக்குகள் பதிவாகி திமுகவின் முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னெடுத்துச் சென்றது.
- ஜனவரி 30,1961 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
- மார்ச், 1961 - நாடாளுமன்ற மாநிலங்களவையில் புபேஷ் குப்தா, தமிழ்நாடு என பெயர் மாற்றம் வேண்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். புபேஷ் குப்தாவோடு அந்த அவையில் உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டு வரலாற்றுத் தரவுகளிலிருந்தும் பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் என்று எடுத்துச் சொல்லி தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்று புபேஷ் குப்தாவின் மசோதாவை ஆதரித்து பேசினார். எனினும் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
- ஜுலை 23, 1963- தமிழ்நாடு சட்டமன்றத்தில் திரும்பவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம அரங்கண்ணல் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.
- ஜூலை 18, 1967 - திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “‘மெட்ராஸ் மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தை அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றினார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 தற்போது தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- நவம்பர் 23, 1968- நாடாளுமன்றத்திலும் மெட்ராஸ் மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 1, 1968 - தமிழ்நாடு பெயர் சூட்டு விழா பாலர் அரங்கத்தில் (இன்றைய கலைவாணர் அரங்கம் அமைந்த இடம்) நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.
- ஜனவரி 14,1969 - தமிழ்நாடு என்ற பெயர் முறைப்படி மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
விருதுகள் :-

- பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான 'கம்பானியன் ஆப் ஆர்டர் ஆப் பிஜி' என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி பிஜி நாட்டுப் பிரதமர் கவுரவித்தார்.
- பிஜி நாட்டைப் போல பப்புவா நியூ கினியாவும் தனது உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளது. பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியா விருது வழங்கியது.
விளையாட்டுச் செய்திகள் :-

- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சா்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் வரும் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறும் என விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
- போட்டியை நடத்தும் இந்தியாவுடன், ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கொலம்பியா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்கின்றன.
- இந்திய தரப்பில் மகளிா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா தலைமையிலும், ஆடவா் பிரிவில் சௌரவ் கோஷல், அபய் சிங் தலைமையிலும் அணிகள் கலந்து கொள்கின்றன.

- ஈட்டி எறிதலில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் ஆகியுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதன் மூலம் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என அறியப்படுகிறார்.
- உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் டைமண்ட் லீகில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நீரஜ்.

- ஒவ்வொரு ஆண்டும் ஆமைகள் அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாப்பாக வாழவும், அழிவில் இருந்து அவற்றை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'உலக ஆமைகள் தினம்', அனுசரிக்கப்படுகிறது.
- மே 23-ஆம் தேதியில் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த தினம், 2001-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது.
Tags:
Current Affairs