இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 24/05/2023
தேசியம் :-

- கர்நாடக சட்டப்பேரவை தலைவராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கர்நாடக முதலமைச்சர் - சித்தராமையா
- துணை முதலமைச்சர் - டி.கே.சிவகுமார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான NVS-01 செயற்கைக்கோளுடன் GSLV F-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.
- தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (IRNSS) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
- அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் IRNSS 1A, 1B, 1C, 1D, 1E, 1F, 1G என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
- இதனிடையே, முதல் முதலில் செலுத்தப்பட்ட IRNSS 1-A செயற்கைக்கோள் செயலிழந்தது. அதற்கு மாற்றாக 2017-இல் IRNSS 1-H செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், அதை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
- அதன்பின், IRNSS 1 A-வுக்கு மாற்றாக 1 I செயற்கைக்கோள் 2018-ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக IRNSS 1-G செயற்கைக்கோளுக்கு மாற்றாக NVS-01 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
- NVS-01 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமிக்கும் வரை எஸ்.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
முக்கிய நாட்கள் :-

- காமன்வெல்த் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று நடைபெறும் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாகும், இருப்பினும் இந்தியா மற்றும் சில நாடுகள் அதை மே 24 அன்று கொண்டாடுகின்றன.
- 2023-ஆம் ஆண்டு காமன்வெல்த் தினத்தின் கருப்பொருள் “Forging a Sustainable and Peaceful Common Future”
Tags:
Current Affairs