இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 25/05/2023

 

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 25/05/2023


தேசியம் :-

               Card image cap

  • உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
  • டேராடூன் - தில்லி இடையே இயக்கப்பட உள்ள இந்த பயணிகளின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த ரயில் 302 கிமீ தூரத்தை 4.45 மணி நேரங்களில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக மே 18-ஆம் தேதியன்று பூரி மற்றும் ஹவுரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Card image cap
  • நமது நாடு சுதந்திரமடைந்தபோதுஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில்தேவாரத் தொகுப்பில் இருந்து கோளறு பதிகத்தின் 11-வது வரியான "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"என்று பாடி தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம்பண்டித நேருவிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை ஆகஸ்ட் 141947 அன்று வழங்கினார்.
  • இந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலைபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் கால செங்கோலின் சிறப்பு

  • செங்கோல் என்ற சொல் தமிழில் செம்மை என்ற சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இதற்கு நேர்மை என்று பொருள்.
  • இந்த செங்கோலின் உச்சியில் கம்பீரமான பார்வையைக் கொண்ட புனிதமாக நந்தி இருக்கும்.
  • இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக நீடித்த பேரரசுகளில் முதன்மையாக திகழ்ந்ததமிழ் மண்ணை மையமாகக் கொண்ட சோழப் பேரரசில் ஆட்சியாளர் அதாவது வழிவழியாக மன்னர்கள் மாறும் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கடைபிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை இது.
  • ஆட்சி பீடம் ஏறும் போது பாரம்பரிய குருவோ அல்லது முன்பு ஆட்சியில் இருந்த மன்னனோ புதிய ஆட்சியாளரிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
  • செங்கோலைப் பெறுபவர் நியாயமாகவும்நடுநிலையுடனும் ஆட்சி புரிவதற்கான ஆணையைப் பெறுகிறார்.
  • மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இதனை மறக்கவே கூடாது.

1947-இல் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட வரலாறு

  • இந்தியா விடுதலை பெற்ற போதுபிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி கைமாறியதைக் குறிக்கும் வகையில்இந்த சோழர் கால நடைமுறை பின்பற்றப்பட்டது.
  • மவுண்ட்பேட்டன் பிரபு ஜவஹர்லால் நேருவிடம் இந்தியா சுதந்திரம் அடைந்ததை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு சின்னத்தை தேர்வு செய்யும்படி கேட்டபோது 'செங்கோல்என்ற கருத்து வெளிப்பட்டது.
  • இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜபோகலாச்சாரிஆட்சிக்கு வந்தவுடன் ஒரு புதிய மன்னருக்கு 'செங்கோல் வழங்கும் சோழ பாரம்பரியத்தை பின்பற்ற நேருவிற்கு பரிந்துரைத்தார்.
  • ஆகஸ்ட் 14, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதிருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான்மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலை பெற்றார்.
  • ஓதுவார் மற்றும் திருமகள் முன்னிலையில் பாசுரம் ஓதிசுவாமிக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. அவர்கள் தேவாரத் தொகுப்பில் இருந்து கோளறு பதிகத்தின் 11-வது வரியான "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"என்று பாடியதும் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோலை வழங்கினார்.
  • செங்கோல் நீதியின் செங்கோலாக முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒரு சிறந்த தேசத்தின் பிறப்பை நினைவூட்டுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்

  • புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன.
  • 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
  • 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம்நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
  • நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் HCP டிசைன் வழங்கியது.

குறிப்பு

  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவின்போது(மே 28) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல் என்பது சோழர் காலத்து செங்கோல் அல்லசோழர் காலத்து செங்கோல் மாதிரி வடிவில் 1947- இல் உருவாக்கப்பட்டது ஆகும்.
  • இதனை தமிழகத்தில் உள்ள நகைக் கடை அதிபர் உம்மிடி பங்காரு செட்டிஇதை கைவினைக் கலையால் வடிவமைத்தார்.

தமிழகம் :-


Card image cap
  1. ஆராய்ச்சிகண்டுபிடிப்புபல்கலைக்கழக ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  2. பொருளாதார நடவடிக்கைவளர்ச்சியில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  3. தொழிற்கல்விதிறன் மேம்பாடுபுத்தாக்க பொருளாதார செயல்பாடுகளுக்காக சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  5. பாடத்திட்டம்பாட மேம்பாட்டுக்காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  6. தொழில்நுட்பம்தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்டகால கூட்டாண்மைக்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும்சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.


Card image cap
  • சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும்சிங்கப்பூரின் சிற்பியுமான லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னமும்அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
  • தமிழர்களின் மற்றொரு தாய்நாடாக சிங்கப்பூர் இருக்க காரணமாக இருந்தவர் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. சிங்கப்பூரை மிகக்குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றியவர் லீ க்வான் யூ.
முக்கிய நாட்கள் :-



Card image cap
  • தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது கழுத்தின் முன் அமைந்துள்ளது. தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் Thyroid-stimulating hormone (TSH) கீழ் T3 மற்றும் T4 என்னும் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இவை தான் உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை பராமரிக்க செய்கின்றன. இதில் குறைபாடு உண்டாகும் போது ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்கிறது.
  • இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் மே 25-ஆம் தேதி சர்வதேச தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post