போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 15-06-2023
தேசியம் :-

- நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-இல் உருவாக்கப்பட்டது.
- அமலாக்க இயக்குனரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது.
- இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதார சட்டத்தை அமல்படுத்துவதால் இந்த துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.
- அதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அமலாக்க இயக்குநரகம் மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி என ஐந்து பிராந்தியத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
- 2018-ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி 5 சட்டங்களை அமல்படுத்துவது என்பது இதன் முக்கியப் பணிகளாக உள்ளன.
- சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 2002 (Prevention of Money Laundering Act)
- அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (Foreign Exchange Management Act)
- தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018 (Fugitive Economic Offenders Act)
- அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (Foreign Exchange Regulation Act)
- காபிபோசா சட்டம்(COFEPOSA) 1974
- குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்புதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதனை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19 இன் கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

- இந்தியா–மியான்மர்–தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்பு இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நெடுஞ்சாலை 2,800 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
- இதில் 2,500 கிமீ இந்தியா மற்றும் மியான்மரில் அமைகிறது. குறைந்த தூரமேதாய்லாந்தில் அமைகிறது.
- இந்த நெஞ்சாலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தொடங்கி இந்தியாவில் கொல்காத்தாவில் முடிவடைகிறது.
சர்வதேசம் :-

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
- உலகளவிலுள்ள அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை - 12,512
- இவற்றில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.
9 அணு ஆயுத நாடுகளிடமுள்ள தற்போதைய கையிருப்பு
- ரஷ்யா - 5,889
- அமெரிக்கா - 5,244
- சீனா - 410
- பிரான்ஸ் – 290
- இங்கிலாந்து – 225
- பாகிஸ்தான் - 170
- இந்தியா-164
- இஸ்ரேல்- 90
- வடகொரியா- 30
தமிழ் நாடு :-

- ஜி-20 மகளிர் மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 15) தொடங்குகிறது.
- இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 158 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- இன்று நடைபெறும் தொடக்கநிகழ்ச்சியில், மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.
2023-ஆம் ஆண்டிற்கான ஜி-20 மாநாடு
- தலைமை பொறுப்பு - இந்தியா
- கருப்பொருள் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நடப்பாண்டு ஜூன் 16 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதையடுத்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருகிறார்.
முக்கிய நாட்கள் :-

- சென்னை எழும்பூரில் உலக முதியோா் வன்கொடுமை விழிப்புணா்வு தினத்தை (ஜூன் 15) முன்னிட்டு ‘பெண்கள் மற்றும் முதுமை: அறியாமையா அல்லது அதிகாரமா’ என்ற தலைப்பில் ‘ஹெல்பேஜ் இந்தியா’ என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- அதன்படி,இந்தியாவில் பாலின விகிதம் 948/1000. ஆனால், முதியோருக்கான பாலின விகிதம் 1065/1000. (முதுமைப்பருவத்தில் பெண்களே அதிகம் உள்ளனா்)
- முதுமை காலத்தில் ஆண்களைவிட பெண்கள் சமூக ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனா்.
- இந்திய மக்கள் தொகை 2021 -இன் படி பெண்கள் 66 கோடிபோ் உள்ளனா். இதில் வயதான பெண்கள் 7 கோடி போ் உள்ளனா்.
- 54 சதவீத பெண்கள் இன்றளவும் கல்வியறிவில்லாமல் உள்ளனா். 75 சதவீதப் பெண்கள் எந்த சேமிப்பும் இல்லாமலும், 66 சதவீதப் பெண்கள் எவ்வித சொத்துகளும் இல்லாமல் பொருளாதார ரீதியாக பிறரை சாா்ந்திருக்கும் நிலையில் உள்ளனா்.
- தமிழகத்தைப் பொருத்தவரை வயதான பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் 16 சதவீதம் உயா்ந்துள்ளது. உடல்ரீதியான வன்முறை 52 சதவீதமும் , வாா்த்தை வன்முறை 51 சதவீதமும் நிகழ்த்தப்படுகிறது. இதுபோன்ற வன்முறைகளை பாதிக்கப்பட்டவரின் மகன் 33 சதவீதமும் , உறவினா்கள் 33 சதவீதமும் , 12 சதவீதம் மருமகள்களும் நிகழ்த்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் தொடர்பான சர்வதேச தினங்கள்
- உலக முதியோா் வன்கொடுமை விழிப்புணா்வு தினம் - ஜூன் 15
- உலக அல்சைமர் தினம் - செப்டம்பர் 21
- சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 1
Tags:
Current Affairs