போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 16-06-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  16-06-2023


தேசியம் :-


Card image cap

அயோத்தி ராமர் கோயில் பற்றிய குறிப்புகள்

  • உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில்மூன்று தளங்களாக ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது.
  • கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம்அனுமன் சிலைராமாயண நுாலகம்மகரிஷிவால்மிகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றன.
  • மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன.
  • மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி. கோயிலில் 12 நுழைவாயில்கள் இருக்கும்.
  • கோயிலின் பெரும்பாலான பகுதிகள் பிங்க் நிற கற்களில் கட்டப்பட்டாலும்நுழைவாயில் மட்டும் வெள்ளை மார்பிளால் அமைக்கப்படுகிறது.
  • ராமர் சிலை அமையும் கருவறை முழுவதும்தாஜ்மஹாலில் உள்ளது போன்ற வெள்ளை மார்பிளால் அமைக்கப்படுகிறது.
  • இந்த பிங் நிற பாறைகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 4.75 லட்சம் கன அடி கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இரும்புசெங்கல்சிமென்ட் பயன்படுத்தப்படவில்லை.
  • முழுவதும் பாறை கற்களால் கட்டப்படுகிறது. இன்டர்லாக்கிங் சிஸ்டம்காப்பர் வயர் மூலம் கற்கள் இணைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு துாணிலும் 16 சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தரைதளத்தில் மட்டும் 4000 சிலைகள் அமைக்கப்படுகின்றன.
  • நாகரா கட்டடக்கலையில் வடிவமைக்கப்படுகிறது.
  • சோம்நாத் கோயிலை கட்டிய பிரபாகர் சிங் சோம்புரா பேரன் சந்திரகாந்த் சோம்புரா இக்கோயிலை வடிவமைத்துள்ளார்.
  • 2587 புனிதமான இடங்களில் இருந்து மண், 155 புண்ணிய நதிகளில் இருந்து நீரும் கொண்டு வந்து கோயில் கட்டுமான பூஜை செய்யப்பட்டது.
  • ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மணிஇக்கோயிலில் பொருத்தப்பட உள்ளது.

சர்வதேசம் :-






Card image cap
  • வன்முறையால் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஐநா சார்பில் பல்வேறு நாடுகளின் வீரர்களை கொண்ட அமைதிப் படை செயல்பட்டு வருகிறது.
  • அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியின்போது அமைதிப்படை வீரர்களில் பலர் உயிரிழந்தவர்களின் உயிர்தியாகத்தைப் போற்றும் வகையில்ஐநா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று ஐ.நா. பொது அவையில் இந்தியா நேற்று வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்தது.
  • இந்தியாவின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம்இந்தியாவங்கதேசம்கனடாசீனாஅமெரிக்காபிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளால் ஐ.நா. பொது அவையில் சமர்ப்பிக்கப்பட்டு   ஓட்டெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

முக்கிய குறிப்புகள்

  • ஐ நா சபை  தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 24 அக்டோபர் 1945
  • ஐ நா தலைமையகம் - நியூயார்க்
  • ஐ நா-வின் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 193
  • ஐ.நா - வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி - ருச்சிரா கம்போஜ்
தமிழ் நாடு :-


Card image cap
  • சென்னைகிண்டிகிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
  • தளங்கள் கொண்ட கட்டிடங்கள் 4. 89 ஏக்கர் நிலத்தில் 51, 429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
  • 2021-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது
  • கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல்இருதயவியல்கதிரியக்கவியல்நரம்பியல்நுண்ணுயிரியல்மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சைஅவரச சிகிச்சைபல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதயம்நரம்புஇரைப்பைசிறுநீரகம்ரத்தநாளம்புற்றுநோய்ரத்த மாற்று தொடர்பான உயர் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளன.
  • மருத்துவமனைக்கு தனியாக இயக்குநர், 2 உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
  • இணை பேராசிரியர்கள் 30 பேர்உதவிப் பேராசிரியர்கள் 100 பேர் என மொத்தம் 130 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
  • இதை தவிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தை மேற்கொள்ள புதியதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும்
 தொழில்நுட்பம் :-


Card image cap
  • வாகனங்களில் பொருத்தும் வகையிலான காற்றுமாசுபாட்டைக் கண்டறியும் கருவியை சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • குறிப்பிட்ட ஒரு பகுதியில் சில மீட்டர் தூரத்தில் கூட காற்றின் தரம் மாறக் கூடும் என்பதால் காற்றின் தரத்தை ஒரே இடத்திலிருந்து கண்காணிப்பது சாத்தியமற்றது. எனவேவாகனங்களில் பொருத்தும் வகையில் காற்று மாசுபாட்டைக் கண்டறியும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதை சென்னை ஐஐடி பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி தலைமையில் செயல்பட்ட ஆராய்ச்சியாளர் குழு உருவாக்கியுள்ளது.
  • இந்திய அளவில் காற்றின் தரத்தைக் கண்டறிதல்காற்றின் தரம் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தல்தரவுகளைச் சேகரித்தல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கருவி தரத்தை அளவீடு செய்வதுடன்சல்பர் ஆக்ஸைடுநைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவையும்புற ஊதாக் கதிர் அளவையும்சாலைகளின் தடிமன் போன்றவற்றையும் சோதனை செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.
முக்கிய நாட்கள் :-



Card image cap
  • ஆண்டுதோறும் ஜூன் 16 சர்வதேச குடும்பத்திற்கான பணம் அனுப்புதல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • உலகம் முழுவதும் தங்களது சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து அந்நிய நிலத்தில் தங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உழைத்து பணம் அனுப்புகிறார்கள் இவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஐ.நா. சபை ஜூன் 16ம் தேதியை சர்வதேச குடும்பத்திற்கான பணம் அனுப்புதல் தினமாக அங்கீகரித்துள்ளது.
  • இத்தினம் 2008 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
  • இந்தாண்டின் கருப்பொருள் : “Digital remittances towards financial inclusion and cost reduction”

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post