போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 17-06-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  17-06-2023


தேசியம் :-


Card image cap
  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்ட கட்டிடத்தின் வளாகத்தில்தான் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) செயல்பட்டு வந்தது.
  • இதற்கு தற்போது 'பிரதம மந்திரி அருங்காட்சியகம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 ஆண்டுகள் வாழ்ந்தார்.
  • இந்த வீட்டில் கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது.
  • இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக நேரு நினைவு சொசைட்டி இயங்கி வருகிறது.
  • நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சுதந்திர போராட்டங்கள் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த சொசைட்டியின் தற்போதைய தலைவராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார்.


சர்வதேசம் :-


Card image cap
  • பிரதமா் மோடி முன்மொழிவின் அடிப்படையில்ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுமென ஐ.நா. கடந்த 2014-இல் அறிவித்தது.
  • இதைத் தொடா்ந்து2015-ஆம் ஆண்டுமுதல் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில்பிரதமா் மோடி வரும் 21 முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். சா்வதேச யோகா தினத்தன்றுநியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அவரது தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
  • ஐ.நா. தலைமையகத்தில் பிரதமா் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

முக்கிய குறிப்புகள்

  • ஐ.நா. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - அக்டோபர் 24,1945
  • ஐ.நா. தலைமையகம் - நியூயார்க்
  • ஐ.நா. பொதுச் சபையின் 77-ஆவது அமா்வின் தலைவா் -  சாபா கோரோசி

தமிழ் நாடு :-



Card image cap
  • சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம்(Fintech city)ரூ.254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  • இந்த நிதிநுட்ப நகரம்நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவாக சாலைகள்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திடக்கழிவு மேலாண்மைமழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
  • மேலும்அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன்வணிக வளாகங்கள்,  நட்சத்திர விடுதிகள்பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். 
  • இந்நகரம் அமைவதன் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன்சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்



  • Card image cap
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை சேலம்  மாநகர காவல்துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
    • இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதற்கு புலம்பெய்ந்தோர் பாதுகாப்பு (Migrant Care) என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்த செயலி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை அவர்களின் முகவர்களுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருதுகள் :-



Card image cap
  • தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளைகடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
  • அந்த வகையில்,இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் எழுதிய கட்டுரைகள் ‘ஆசாதி’ என்ற பெயரில் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன.அந்த மொழி பெயர்ப்பு நூலுக்காகத்தான் வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவ்விருதோடு இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய்க்கான காசோலை அளிக்கப்படும் என்றும் சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
  • அருந்ததி ராய் 1997 ஆம் ஆண்டு தனது முதல் புத்தகமான 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு' புக்கர் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post