இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 10-06-2023


இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  10-06-2023


தேசியம் :-



          Card image cap

  • இந்தியாவில் நீரிழிவு நோய்உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் ICMR நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான 'தி லான்செட்' (The Lancet) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 1,13,043 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வின்படி,
  • இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
  • தேசிய அளவில் நீரிழிவு நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4%
  • குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4.8%
  • தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4% உள்ளது(6-வது இடம்)

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) பற்றிய குறிப்புகள்

  • மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவானது (Indian Council for Medical Research) இந்திய ஆராய்ச்சி நிதிச் சங்கம் (Indian Research Fund Association -IRFA) என்ற பெயரில் 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இந்திய விடுதலைக்குப் பிறகு,1949 ஆம் ஆண்டில்இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலாக(ICMR) மாற்றியமைக்கப்பட்டது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித்துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • தலைமையகம் - புதுதில்லி
  • தற்போதைய தலைமை இயக்குநர் - டாக்டர் ராஜீவ் பால்

Card image cap
  • அனைவருக்கும் இணையதள சேவை கிடைக்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் பிராட்பேண்ட் இணையதள சேவையை தொடங்கியுள்ள கேரள அரசுஅதற்கு 'கேபான்' - 'கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்(KFON)' என பெயரிடப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த இணையதள சேவை மற்றவர்களுக்கு குறைந்த விலையில் அளிக்கப்பட உள்ளது.
  • இந்த, 'பிராட்பேண்ட்திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 299 ரூபாய்க்கு 20 MBPS வேகத்தில், 3,000 GB வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • கேரள ஃபைபர் ஆப்டிகல் நெட்வொர்க் மூலம்இணையத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலமான கேரளா உள்ளது.
  • இதற்காககேரளா முழுதும் 1,500 கோடி ரூபாய் செலவில், 35,000 கி.மீ.துாரத்திற்கு, 'ஃபைபர் ஆப்டிக் கேபிள்வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 30,000 அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

பொருளாதாரம் :-



Card image cap

 

  • மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படிடிஜிட்டல் பணபரிவர்த்னையில் முன்னணியில் இருக்கும் முதல் நாடுகள்
  1. இந்தியா(2022-இல் 8.95 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது)
  2. பிரேசில் (2.92 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை) 
  3. சீனா(1.76 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை)
  4. தாய்லாந்து(1.65 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை)
  5. தென் கொரியா(80 லட்சம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை)
  • உலக அளவில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post