இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 09-06-2023

 


இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  09-06-2023


தேசியம் :-


             Card image cap

  • இந்த ஆண்டு நவம்பர்டிசம்பரில் இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு 2023' உலக அழகிப் போட்டி நடத்தப்படும் என்று மிஸ் வேர்ல்டுஅமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லே தெரிவித்துள்ளார்.
  • இது 71-வது 'மிஸ் வேர்ல்டுபோட்டியாகும்.
  • உலகம் முழுவதும் இருந்து 130 நாடுகளை சேர்ந்த பெண்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
  • இந்த ஆண்டு போட்டியில் ‘மிஸ் இந்தியாபட்டத்தை வென்ற சினி ஷெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

முக்கிய குறிப்புகள்

  • எரிக் மோர்லே என்பவர் கடந்த 1951-ஆம் ஆண்டில் ‘மிஸ் வேர்ல்டுபோட்டியை தொடங்கினார்.
  • 1996-ஆம் ஆண்டில் ‘மிஸ்வேர்ல்டுபோட்டி இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்றது.
  • மிஸ் வேர்ல்டுபட்டம் வென்ற முதல் இந்தியர் - ரீட்டா ஃபரியா (1966)
  • இதுவரை ‘மிஸ் வேர்ல்டுபட்டம் வென்ற இந்தியர்கள் - 6(ரீட்டா ஃபரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹெய்டன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000), மனுஷி சில்லார்(2017))
  • 2022-ஆம் வருடம் ‘மிஸ் வேர்ல்டுபட்டத்தை வென்றவர் - போலந்தை சேர்ந்த கரோலினா

தமிழ்நாடு :-




Card image cap
  • உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் 5-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2022-2023-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
  • இதில்தேசிய அளவில் கேரள மாநிலம் முதலிடமும்பஞ்சாப் மாநிலம் 2-ஆம் இடத்தையும்தமிழ்நாடு 3-ஆம் இடத்தையும் பெற்றது.
  • மேலும்இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் 'Eat Right Challenge – Phase II' என்ற போட்டி தேசிய அளவில் 231 மாவட்டங்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது.
  • உணவு வணிக நிறுவனங்களின் உரிமம் பெறுதல்தொடர் கண்காணிப்புஉணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல்விதிமுறைகளை பின்பற்றுதல்உணவு வணிக நிறுவனங்கள் வருடாந்திர கொள்முதல் விவரத்தை இணையத்தில் தாக்கல் செய்தல்இணைய வழியாக வரும் புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்தல்,உணவு வணிகர்களுக்கான பயிற்சி வழங்குதல்பொது இடங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விளம்பரம்சமூக வலைதளங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுசிறு தானிய உணவுகள் தொடர்பான விளக்கம்செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்த விளக்கங்கள் என பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டன.
  • இந்த போட்டியில் கோவை மாவட்டம் 200-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.

முக்கிய குறிப்புகள்

  • உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 2006
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) நிறுவப்பட்ட ஆண்டு - 2008
  • FSSAI- இன் தற்போதைய தலைவர் - ராஜேஷ் பூஷன்
  • உலக உணவு பாதுகாப்பு தினம் - ஜூன் 7

முக்கிய நாட்கள் :-




Card image cap
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 9 அன்று உலக அங்கீகார தினம்(World Accreditation day) கொண்டாடுகிறது.
  • அங்கீகாரம்அதன் பங்குதாரர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை வழங்குவதற்காக உலக அங்கீகார தினம் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினம் 2008 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த வருடத்தின் கருப்பொருள்:"உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலத்தை ஆதரித்தல்”.

இராணுவம் :-



Card image cap
  • அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
  • ஏற்கனவே மூன்று முறை சோதனை அடிப்படையில்செலுத்தப்பட்ட இத்தகையை ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவை உறுதிசெய்யப்படுவதற்கு ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்குமுன்முதன் முறையாக இந்த இரவுநேரப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • அக்னி தொடர் ஏவுகணைகள் 1982-இல் பாதுகாப்பு அமைச்சகத்தால்  தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) ஒரு பகுதியாகும்.
  • 'அக்னி பிரைம்’ ஏவுகணையானது1000 - 2000 கிமீ தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு(DRDO) - 1958
  • DRDO -வின் தற்போதைய தலைவர் - டாக்டர் சமீர் வி காமத்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post