இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 08-06-2023
தேசியம் :-

- பருவநிலை மாற்றம், அதன் மோசமான விளைவுகளை எதிா்கொள்ள மாநிலத்தில் அமைந்துள்ள 3,800 ஹிந்து கோயில்களில் பசுமைத் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின்கீழ் கோயில் வளாகத்தில், அதன் சுற்றுப்புற சுவா்களில் பூச்செடிகளும், கனி தரும் மரங்களும் வளா்க்கப்படும். இதில் கிடைக்கும் பூக்களும், கனிகளும் கோயிலின் தினசரி பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படுவதன் மூலம் கோயில்கள் தன்னிறைவு பெறும்.
- சுற்றுச்சூழலின் அடையாளமாக கோயிலை மாற்றும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

- மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்(Primary Agricultural Credit Societies) மூலம் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
- சாதாரண நோய்கள் முதல் நாள்பட்ட நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகளை, பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டுவந்தது.
- தற்போது நாடு முழுக்க 9,303 PMBJP மருந்தகங்கள் நகர்ப்புறங்களில் செயல்படுகின்றன.
- 10000 மக்கள் மருந்தக மையங்களை மார்ச் 2024-க்குள் திறக்க மத்திய அரசு ஏற்கனவே இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதம மந்திரி பாரதீய மக்கள் மருந்தக திட்டம்(Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana -PMBJP) பற்றிய குறிப்புகள்
- பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு தரமான மருந்துகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்காக, நவம்பர் 2008-இல் மத்திய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தினால் 'மக்கள் மருந்தக திட்டம்’ ('Jan Aushadhi Scheme' ) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
- முதலாவது ’மக்கள் மருந்தகம்’ அமிர்தசரஸ் பொது மருத்துவமனையில் 25-11-2008 அன்று தொடங்கப்பட்டது.
- செப்டம்பர் 2015-இல் ’மக்கள் மருந்தக திட்டம்’ ('Jan Aushadhi Scheme' ) , ‘பிரதம மந்திரி மக்கள் மருந்தக திட்டம்’ (Pradhan Mantri Jan Aushadhi Yojana) என மாற்றியமைக்கப்பட்டது.
- 2016 -ஆம் ஆண்டு இந்த திட்டமானது, மேலும் மேம்படுத்தப்பட்டு, பிரதம மந்திரி பாரதீய மக்கள் மருந்தக திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana -PMBJP) எனப்பெயரிடப்பட்டது
- மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை, சந்தை விலையைவிட 50% முதல் 90% வரை குறைவாக விற்கப்படும்.
தமிழ் நாடு :-

- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, கிண்டிநெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனவளாகத்தில் மரக்கன்றை நட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
- இதையடுத்து, நேற்றுமுதல் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் 340 சாலைகளில் மரம் நடும்பணி தொடங்கியது.
- இவ்வாறு நடப்பட உள்ள மகிழம்,வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சேர்ந்த 46,410 மரக்கன்றுகள், 24 மாதம் வளர்ச்சி கொண்டவை யாகும். பருவமழைக்கு முன்னரே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதாரம்:-

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,
- ரெப்போ விகிதம் - 6.5% (மாற்றம் இல்லை)
- SDF (ஸ்டான்டிங் டெபாசிட் ஃபேசிலிடி) விகிதம் - 6.25%
- மார்ஜினல் ஸ்டான்டிங் ஃபேடிலிடி மற்றும் வங்கி விகிதம் - 6.75%
ரிசர்வ் வங்கி - முக்கிய குறிப்புகள்
- நிறுவப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 1,1935 (1934-ஆம் ஆண்டு சட்ட விதிப்படி)
- ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
- தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு - 1937
- தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – ஜனவரி 1, 1949.
- இந்திய ரிசர்வ் வங்கி உருவாக முக்கிய காரணமாக இருந்த அம்பேத்கரின் புத்தகம் - `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்'
- மைய வங்கியை 'வங்கிகளின் வங்கி என கூறிய பொருளாதார வல்லுநர் - பி.ஏ. சாமுவேல்சன்
- இந்தியாவில் வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் பணக்கொள்கைக் குழுவின் தலைவர் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் - சக்திகாந்த தாஸ்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் - ஆஸ்போர்ன் ஸ்மித்
- ரெப்போ விகிதம் - ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் - வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்.
- தற்போது இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை - 12
விருதுகள்:-

- யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக இயக்குநரும் வன உயிரினக் காப்பாளருமான ஜகதீஷ் பகான் சுதாகர் தேர்வாகியுள்ளார்.
- இவ்விருதுடன் ரூ.9.91 லட்சம் (12 ஆயிரம் அமெரிக்க டாலர்) வழங்கப்பட உள்ளது. இந்த விருது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
- மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவிலுள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை - 18
- தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை - 3(மன்னார் வளைகுடா,நீலகிரி,அகத்தியர்மலை)
- இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம் - நீலகிரி(1986)
- யுனெஸ்கோவால் மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere Programme) என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1971
- Man and the Biosphere Programme திட்டத்தின்கீழ் இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை - 12
விருதுகள்:-

- ஐக்கிய நாடுள் சபையில் பெருங்கடல்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
- 1992-ஆம் ஆண்டு பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது.
- 2008-ஆம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்:'கோள் பெருங்கடல்: அலைகள் மாறி வருகின்றன'
Tags:
Current Affairs