இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 07-06-2023
தேசியம் :-

- குஜராத் மாநிலம் வட்நகரில் பிரதமா் மோடி தொடக்க கல்வி பயின்ற பாரம்பரிய பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- ‘பிரேரணா’ திட்டத்தின் கீழ், ஆழ்ந்த அனுபவம் மூலம் சிறாா்களுக்கு உத்வேகம் அளிக்கும் மையமாக திகழ, 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தப் பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘பிரேரணா: வட்டாரப் பள்ளி’ என்ற பள்ளி மறுமேம்பாட்டு திட்டம்
- மாற்றத்துக்குக் காரணமானவா்களாக இளைஞா்கள் திகழ்வதற்கு, அவா்களுக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் அனுபவ பள்ளி தனித்துவமான கல்வி முறையை கொண்டிருக்கும். எதிா்காலத்தில் மாற்றத்துக்குக் காரணமானவா்களாக சிறாா்கள் திகழ்வதற்கு, அவா்களுக்கு உத்வேகம் அளித்து விழுமியங்களைக் கற்பிக்க, இந்தப் பள்ளியில் வழக்கத்துக்கு மாறான முறையும், தொழில்நுட்ப வழிமுறைகளும் பயன்படுத்தப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற அனைத்து வகை பள்ளிகளைச் சோ்ந்த சிறாா்கள் தகுதியானவா்கள்.
- இந்தத் திட்டம் முதல்கட்டமாக குஜராத் மாநிலம் வட்நகரில் தொடங்கப்படுகிறது.
தமிழ் நாடு :-

- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.125 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த மையங்களில், ரூ.66 கோடி மதிப்பில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைபணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையம் காலை 8 முதல் பகல் 12 வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையும் செயல்படும்.
முக்கிய குறிப்புகள்
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் 1923-ஆம் ஆண்டில் பொது சுகாதாரத்திற்கென பிரத்யேகமாக நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- நாட்டிலேயே முதன்முதலில் பொது சுகாதார சட்டம் 1939-இல் தமிழ்நாட்டில் தான் இயற்றப்பட்டது.
- சென்னை மாகாணத்தின் முதலாவது சுகாதார ஆணையர் - கர்னல் கிங்(1892)
- 2020-21 கோவிட் ஆண்டிற்கான NITI ஆயோக்கின் வருடாந்திர 'மாநில சுகாதார குறியீட்டில் ' தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது (கேரளா - முதலிடம்).
- இந்தியாவிலே அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலம்- தமிழ்நாடு
- தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை - 36
விருதுகள் :-

- குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக சுரினாம் நாட்டிற்கு சென்ற திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான "Grand Order of the Chain of the Yellow Star"-ஐ அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத் வழங்கி கெளரவித்தார்.
- சுரிநாம் நாட்டுக்கு இந்தியா்கள் குடியேற தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி திங்கள்கிழமை(ஜூன் 5) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் முா்மு பங்கேற்று பேசினார்.
- அப்போது, அவா் பேசுகையில், ‘ சுரிநாம் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினா் 4-ஆம் தலைமுறை வரை மட்டுமே அயலக இந்தியா் அடையாள அட்டை பெற முடியும் என்ற தற்போது உள்ள விதிமுறை மாற்றப்பட்டு இனி 6-ஆம் தலைமுறை வரை அடையாள அட்டை பெறலாம் என அறிவித்தார்.
- மேலும் இந்தியா - சுரினாம் இடையே விவசாயம், விஞ்ஞானம், சுகாதாரம் கட்டிட திறன் உள்ளிட்ட துறைகளில் 4 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முக்கிய குறிப்பு
- கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்திய தொழிலாளா்களை ஏற்றி வந்த ‘லாலா ரூக்’ கப்பல் சுரிநாம் நாட்டுக்கு கடந்த 1873-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி முதன் முதலாக வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறையின் புதிய செயலராக, போக்குவரத்துத் துறை செயலா் கே.பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளாா்.
- அவா் போக்குவரத்துத் துறையின் செயலா் பொறுப்புடன், இயற்கை வளங்கள் துறையின் செயலா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா் என்று தலைமைச் செயலா் வெ.இறையன்புவின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக இயற்கை வளங்களுக்கென பிரத்யேக துறை உருவாக்கப்பட்டது. அதாவது, தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத் துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
- புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களை உள்ளடக்கிய இயற்கை வளங்கள் துறை உருவாக்கப்பட்டிருந்தது.
- இந்தத் துறையின் அமைச்சராக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் செயல்பட்டு வருகிறாா்.
விளையாட்டுச் செய்திகள் :-

- தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டிகளை உள்ளடக்கிய டெகத்லானில் 7003 புள்ளிகளை குவித்து இந்தியாவின் சுனில் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
- மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் புஷ்ரா கான் பந்தய தூரத்தை 9:41.47 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
முக்கிய நாட்கள் :-

- தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 1893-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதியன்று டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு செல்வதற்காக முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
- முதல் வகுப்பு பெட்டிக்கான பயணச்சீட்டை அவா் வைத்திருந்போதிலும், அவரை 3-ஆம் வகுப்பு பெட்டிக்குச் செல்லுமாறு ஆங்கிலேயா் ஒருவா் வற்புறுத்தினாா். அதை காந்திஜி ஏற்காததால் பீட்டா்மாரிட்ஸ்பா்க் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டாா்.
- இதன்பின்னர்தான் காந்தி பொதுவாழ்வுக்கு வந்தார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டி சத்யாகிரகப் போராட்டங்களை போராட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் சத்யாகிரகப் போராட்டத்துக்கு வயது இன்றோடு 130.
- தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைக்குரலாக 21 ஆண்டுகள் முழங்கிய காந்தி, ஜனவரி 9 1915-இல் இந்தியா திரும்பினார்.
- காந்தி இந்தியா திரும்பிய 9 ஜனவரி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தமிழ்ப் பத்திரிகை நடத்தினார். அதன் பெயர் "இந்தியன் ஒப்பீனியன்' நான்கு பக்கங்கள் கொண்ட இந்த பத்திரிகையில் ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், ஒரு பக்கம் இந்தியிலும், ஒரு பக்கம் குஜராத்தியிலும், ஒரு பக்கம் தமிழிலும் செய்திகள் வந்தன.

- உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது.
- உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டின் உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள், உணவின் தரம் உயிர்களைக் காக்கும் என்பதே ஆகும்.
இராணுவம் :-

- இந்திய கடற்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு 5.2 பில்லியன் டாலர் (ரூ.42,500 கோடி) மதிப்பில் ஜெர்மனியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய உள்ளது.
- இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், இந்திய பொதுத் துறை நிறுவனமான மசாகன் கப்பல்கட்டும் நிறுவனமும் ஜெர்மனியின் தைசென்க்ரூப் நிறுவனமும் இணைந்து இந்தியாவிலேயே 6 நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கை -16(இவற்றில் 10 கப்பல்கள் மிகப் பழமையானவை)
- இந்திய கடற்படைக்கு தற்போது தேவைப்படுகின்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கை -24
முக்கிய குறிப்புகள்
- மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் - ராஜ்நாத் சிங்
- முப்படை தலைமை தளபதி - ஜெனரல் அனில் சவுகான்
- இந்திய ராணுவ தளபதி - ஜெனரல் மனோஜ் பாண்டே
- இந்திய கடற்படை தளபதி - அட்மிரல் ஆர். ஹரி குமார்
- இந்திய விமானப் படை தளபதி - ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி

- உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட ‘டார்பிடோ’ எனும் நீர் மூழ்கி குண்டு பரிசோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக மேற்கொண்டது.
- நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது.
- இது, இந்திய கடற்படை மற்றும் DRDO -வின் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும்.
முக்கிய குறிப்புகள்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு(DRDO) - 1958
- DRDO -வின் தலைவர் - டாக்டர் சமீர் வி காமத்
Tags:
Current Affairs