போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 13-06-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  13-06-2023


தேசியம் :-


Card image cap

மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டுஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,

  • தேசிய அளவில் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிலைக் கல்வி அளவில் மாணவா்களின் இடைநிற்றல் விகிதம் சராசரியாக 12.6 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் பீகாரில் இடைநிற்றல் 20.46 சதவீதமும்குஜராத்தில் 17.85 சதவீதமும், அசாமில் 20.3 சதவீதமும்ஆந்திராவில் 16.7 சதவீதமும், பஞ்சாப்பில் 17.2 சதவீதமும்மேகாலயாவில் 21.7 சதவீதமும்கர்நாடகாவில் 14.6 சதவீதமாகவும் இருந்தது. இந்த , 7 மாநிலங்களில் மாணவா்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை(12.6%) விட அதிகம்.
  • மத்திய பிரதேசத்தில் இடைநிலை கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 23.8 சதவீதத்தில் இருந்து 10.1 சதவீதமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இடைநிற்றல் விகிதம் 11.2 சதவீதத்தில் இருந்து 10.7 சதவீதமாக குறைந்துள்ளது.

 

பிற தகவல்கள்

  • பள்ளி அளவில் மாணவா்கள் சோ்க்கை விகிதம் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதத்தை எட்ட வேண்டுமென தேசிய கல்வி கொள்கையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு ஐக்கியநாடுகளின் யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 33 சதவீத பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளுக்காக தங்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
  • சமக்ர சிக்ஷா அபியான் (முழுமையான கல்வி திட்டம்),2018 மே மாதம் தொடங்கப்பட்டது. சர்வ சிக் ஷா அபியான்ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷாஆசிரியர் கல்வி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சர்வதேசம் :-




Card image cap
  • ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
  • கல்விஅறிவியல்கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான யுனெஸ்கோவில் பாலஸ்தீனத்தை இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • யுனெஸ்கோ அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறிஅந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது.
  • இந்த நிலையில்யுனெஸ்கோவில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வள ஆதார மேலாண்மைப் பிரிவுக்கான இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்ரி அஸூலேவிடம் சமா்ப்பித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

யுனஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல்பண்பாட்டு நிறுவனம்) பற்றிய குறிப்புகள்

  • நிறுவப்பட்ட ஆண்டு - 1945
  • தலைமையகம் - பாரிஸ்
  • தலைமை இயக்குநர் - ஆட்ரி அசோலே

தமிழ் நாடு :-


Card image cap

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2023 என்ற இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுபவை,

  • ஏக்கருக்கு 45 கிலோ யூரியா
  • 50 கிலோ டிஏபி
  • 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான இரசாயன உரங்கள் முழு மானியத்தில்
  • 1.24 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவிகித மானியத்தில்
  • மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடித் தொகுப்பு
  • 6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகள்
  • 747 பவர் டில்லர்கள்
  • 15 பவர் வீடர்கள்

இத்திட்டம் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.இந்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால்நடப்பாண்டில் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap
  • தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மேலும் முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன்பிரியாகுமார்திருமலை முத்துசெல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிகார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர்,  மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம் பற்றிய குறிப்புக்கள்

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படிதமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆணையத்துக்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டது.
  • மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களை தேர்வுக் குழுவின் பரிந்துரையின் படி ஆளுநர் நியமிப்பார்.
  • இத்தேர்வுக் குழுவானது,முதலமைச்சர் (தேர்வுக் குழுவின் தலைவர்),சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சர் ஆகிய மூன்று பேர்களை கொண்டிருக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  • 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இச்சட்டப்படி,மனுதாரர்கள் அளித்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
  • இந்தியாவின் உச்சநீதிமன்றமானது அரசியலமைப்பில் உள்ள ஷரத்து 19(1)(a)- இல் உள்ள பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றுடன் தகவல் அறியும் உரிமையும் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடு - ஸ்வீடன்


விளையாட்டுச் செய்திகள் :-


Card image cap
  • ஆா்ஜென்டீனாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே 1-0 கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
  • இந்தப் போட்டியில் உருகுவே சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும்.
  • சிறந்த வீரா் விருதும்அதிக கோல் அடித்தவா் விருதும் இத்தாலியின் சீசா் கசாடெய்க்கு வழங்கப்பட்டது.
முக்கிய நாட்கள் :-



Card image cap
  • ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
  • மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பேசும் விழிப்புணர்வு தினமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அல்பினிசம் எனும் வெண்தோல் குறைபாடு ஓர் அரிதான மரபணு குறைபாட்டு நோய்.
  • அல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக்கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல்கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள்“Inclusion is Strength”

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post