10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் செயலியல்
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
6x 1 = 6
1.காஸ்பேரியன் பட்டைகள் வேரின் பகுதியில் காணப்படுகிறது.
அ) புறணி
ஆ) பித்
இ) பெரிசைக்கிள்
ஈ) அகத்தோல்
2.உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்பு பண்பாகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலைகள்
ஈ) மலர்கள்
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது எனப்படும்.
அ) ஆரப்போக்கு அமைப்பு
ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ) ஒன்றிணைந்தவை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
அ) கார்போஹைட்ரேட்
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) அசிட்டைல் கோ. ஏ
ஈ) பைருவேட்
5.கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
அ) பசுங்கணிகம்
ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி
இ) புறத்தோல் துளை
ஈ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
6. ஒளிச்சேர்க்கையின்போது எந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது.
அ) ATP யானது ADP யாக மாறும் போது
ஆ) CO2 நிலை நிறுத்தப்படும் போது
இ) நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ) இவை அனைத்திலும்
சுருக்கமாக விடையளி. 8 x 2 = 16
7. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
8. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
9. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
10. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது? இதற்கான சமன்பாட்டை எழுதுக.
11. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசு தொகுப்புகளை குறிப்பிடுக.
12. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
13. சுவாச ஈவு என்றால் என்ன?
14. இருவிதையிலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
III விரிவான விடையளி. 2 x 4 = 8
15.வேறுபாடு தருக.
1) ஒரு வித்திலை தாவர வேர் மற்றும் இரு வித்திலை தாவர வேர்
2) காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
16. காற்று சுவாசிகள் செல் சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க
