10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 9 கரைசல்கள் சிறுதேர்வு


10 - ஆம் வகுப்பு   அறிவியல்

   அலகு - 9  

   கரைசல்கள் சிறுதேர்வு 

       

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

                                                      10x 1 = 10






1. நீரில் கரைக்கப்பட்ட உப்பு கரைசல் என்பது கலவை.

அ) ஒருபடித்தான

ஆ) பலபடித்தான

இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை

ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை

2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

3.கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான்?

அ) அசிட்டோன் 

ஆ) பென்சீன்

இ) நீர்

ஈ) ஆல்கஹால்

4. குறிப்பிட்ட வெப்ப நிலையில் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்கமுடியாதோ அக்கரைசல்___________எனப்படும்.

அ) தெவிட்டிய கரைசல்

ஆ) தெவிட்டாத கரைசல்

இ) அதிதெவிட்டிய கரைசல்

 (ஈ) நீர்த்த கரைசல்

5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.

அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு 

ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட் 

ஈ) CS2 ல் கரைக்கப்பட்ட சல்பர்

6. குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்

அ) மாற்றமில்லை

ஆ) அதிகரிக்கிறது

இ) குறைகிறது

 ஈ) வினை இல்லை

7. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும். அ) 12 கி

ஆ) 11 கி

இ) 16 கி

ஈ) 20 கி

8. 25% ஆல்கஹால் கரைசல் என்பது

அ) 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

ஆ) 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
 
இ) 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

ஈ) 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

9. ஈரம் உறிஞ்சி சேர்மங்கள் உருவாகக் காரணம்

அ) ஈரம் மீது அதிக நாட்டம்

ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்

இ) ஈரம் மீது நாட்டம் இன்மை

 ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை

10.கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது. 

அ) ஃபெரிக் குளோரைடு 

ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்

இ) சிலிக்கா ஜெல்

ஈ) இவற்றுள் ஏதுமில்லை



 சுருக்கமாக விடையளி.         6 x 2 = 12


11. கரைசல் வரையறு.

12.நீரேறிய உப்பு வரையறு

13. கன அளவு சதவீதம் வரையறு.

14. 100 கி நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.

15. கரைதிறன் வரையறு.

16. குறிப்பு வரைக -தெவிட்டிய கரைசல்


III விரிவான விடையளி.        2x 4 = 8



17.கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றி குறிப்பு வரைக.

18. 1) ஈரம் உறிஞ்சி சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

2) MgSO4.7H,O உப்பை வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?







You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post