10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
10x 1 = 10
1.ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை
அ) 6,16
ஆ) 7,17
இ) 8,18
ஈ) 7,18
2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஐசோடோப்பின் நிறை
3. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
அ) 17 வது
ஆ) 15 வது
இ) 18 வது
ஈ) 16 வது
4.________________என்பது ஆவர்த்தன பண்பு
அ) அணு ஆரம்
ஆ) அயனி ஆரம்
இ) எலக்ட்ரான் நாட்டம்
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
5. துருவின் வாய்ப்பாடு
அ) FeO.xH2O
ஆ) FeO4.xH_O
இ) Fe2O1.xH2O
ஈ) FeO
6. அலுமினோ வெப்ப வினையில் அலுமினியத்தின் பங்கு
அ) ஆக்சிஜனேற்றி
ஆ) ஆக்சிஜன் ஒடுக்கி
இ) ஹைட்ரஜனேற்றி
ஈ) சல்பர் ஏற்றி
7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு எனப்படும்.
அ) வர்ணம் பூசுதல்
ஆ) நாகமுலாமிடல்
இ) மின்முலாம் பூசுதல்
ஈ) மெல்லியதாக்குதல்
8. கீழ்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.
அ) He
ஆ) Ne
இ)Ar
ஈ)Kr
9.நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்யம் ஆக காரணம்
அ) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ) குறைந்த உருவளவு
ஈ) அதிக அடர்த்தி
10. இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கிய உலோகம்
அ) Ag
ஆ) Hg
இ) Mg
ஈ) Al
சுருக்கமாக விடையளி. 6 x 2 = 12
11. துரு என்பது என்ன? துரு உருவாதன் சமன்பாட்டை எழுதுக.
12. இரும்பு துரு பிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
13.எந்த அமிலம் அலுமினியத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
14. A என்ற செம்பழுப்பு உலோகம் 02 வுடன் வினைபுரிந்து <1370 K வெப்ப நிலையில் B என்ற கருமை நிற சேர்மத்தை உருவாக்கும். >1370 K வெப்ப நிலையில் A வானது சிவப்பு நிற C யை உருவாக்கும் எனில் A, B, C என்னவென்று வினைகளுடன் எழுதவும்.
15. A என்பது வெள்ளியின் வெண்மை நிற உலோகம் A ஆனது 02 உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக்கலவை விமானத்தின் பாகங்கள் செய்ய பயன்படும். A மற்றும் B என்ன?
16. அலுமினியத்தின் பயன்கள் யாவை?
விரிவான விடையளி. 2x 4 = 8
17. ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை நிற படலம் B யை உருவாக்கும். A அடர் H2SO4 வுடன் வினைபுரிந்து மற்றும் Dயை உருவாக்கும். D வாயு நிலை சேர்மம் எனில் A, B, C, D எவை?
18. ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி?
வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க
