10 - ஆம் வகுப்பு
அறிவியல்
அலகு - 7 அணுக்களும் மூலக்கூறுகளும்
சிறுதேர்வு
மொத்த மதிப்பெண்கள்: 30
இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
10× 1 = 10
1.கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
அ) 6.023 X 1023 ஹீலியம் அணுக்கள்
ஆ) 1 ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம்
ஈ) 1 மோல் ஹீலியம் அணு
2. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு
அ) குளுக்கோஸ்
ஆ) ஹீலியம்
இ) CO2
ஈ) ஹைட்ரஜன்
3. திட்ட அழுத்த வெப்ப நிலையில் 4.4 கி CO2 வின் பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ) 0.1 லிட்டர்
4. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
5.1 amu என்பது
அ) C- 12 ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் அணு நிறை
இ) C- 12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) 0-16 ன் அணு நிறை
6.கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது
அ) ஒரு கிராம்c -12 அணுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது
7. திட்ட வெப்பஅழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ) 11.2 லிட்டர்
ஆ) 5.6 லிட்டர்
இ) 22.4 லிட்டர்
ஈ) 44.8 லிட்டர்
8. ²⁰Ca⁴⁰தனிமத்தின் உட்கருவில்
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ) 16 கி
ஆ) 18 கி
இ) 32 கி
ஈ) 17 கி
10. 1 மோல் எந்த ஒரு பொருளும் மூலக்கூறுகளைப் பெற்றிருக்கும்
அ) 6.023X 103
ஆ) 6.023X103
இ)93.0115X1023
ஈ) 12.046X 1023
சுருக்கமாக விடையளி. 6 x 2 = 12
11. அணுக்கட்டு எண் வரையறு.
12.வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
13.அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் காண்க.
14. 27 கி அலுமினியத்தின் மோல் எண்ணிக்கையை கண்டறிக.
15. நீரின் மோலார் நிறையை காண்க.
16. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
III விரிவான விடையளி. 2x 4 = 8
17.நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
18. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை தருவி.
வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க
