போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 12-08-2023
தேசியம் :-

- பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் 3 மசோதாக்களை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தாக்கல் செய்தாா்.
- இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மசோதா 2023’ என்ற மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS) மசோதா 2023’ என்ற மசோதாவும், இந்திய ஆதாரச் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (BS) மசோதா 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.
முக்கிய அம்சங்கள்
- ஒரு வழக்கில் 180 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்
- விசாரணை நிறைவடைந்ததும் 30 நாள்களில் தீா்ப்பு
- அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் நீதி
- தேசத் துரோக சட்டம் முழுமையாக ரத்து
- கும்பல் தாக்குதலுக்கு 7 ஆண்டுகள் சிறை அல்லது மரண தண்டனை
- சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை.
- கூட்டுப் பாலியல் குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை
- பிரிவினையைத் தூண்டுதல், ஆயுதக் கிளா்ச்சி, தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை அல்லது ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகியவை புதிய குற்றங்களாக பட்டியல்
- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபரின் சொத்துகள் முடக்கம்
- மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டும் குறைக்க முடியும்.
- வழக்குகளில் தண்டனை கிடைக்கும் விகிதம் 90 சதவீதமாக உயரும்
- விரைவான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும்

- நாட்டின் கடைசி தபால் நிலையமாக சமீப காலம் வரை அறியப்பட்ட தபால் நிலையம், "நாட்டின் முதல் தபால் நிலையம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது ஜம்மு-காஷ்மீரின் கேரன் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அருகே கிஷன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
- இதன் பின்கோடு எண் 193224. ஒரு பக்கம் கிஷன்கங்கா நதியும், மறுபக்கம் நீலம் நதிக்கரையில் கரையின் குறுக்கே அமைந்துள்ள இந்த தபால் நிலையம், ஒரு தபால் நிலைய அதிகாரி மற்றும் மூன்று பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
- இது சமீப காலம் வரை நாட்டின் கடைசி தபால் நிலையமாக அறியப்பட்டது, ஏனெனில் அதைத் தாண்டி தபால்களை அனுப்ப முடியாது. பின்னர், ராணுவம் அதை முதல் தபால் நிலையமாக மாற்றியது. ஏனெனில், இது தொலைதூரத்தின் அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அல்லது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதல் நிலையம்.
தமிழ்நாடு :-

- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது
- இந்நிலையில், இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொருளாதாரம் :-

- வருமான வரித் துறை வெளியிட்ட தரவுகளின்படி கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி நடப்பு நிதியாண்டில் கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட் 10 வரையிலான சுமாா் 4 மாத காலத்தில் கடந்தாண்டு நிலவரத்தைவிட 15.73 சதவீதம் கூடுதலாக ரூ.6.53 லட்சம் கோடி மொத்த நேரடி வரி வசூலாகியிருக்கிறது.
- மக்களுக்குத் திருப்பிச் செல்லுத்தப்பட்ட வரி கணக்கீட்டுப் பிறகு நிகர நேரடி வரி வசூல் கடந்தாண்டை விட 17.33 சதவீதம் அதிகரித்து ரூ.5.84 கோடியாக உள்ளது.
- நடப்பு நிதியாண்டில் வசூலிக்க கணிக்கப்பட்ட மொத்த நேரடி வரியில் 32.03 சதவீதம் குறிப்பிட்ட இந்தக் காலக்கட்டத்திலேயே வசூலாகியுள்ளது.
- அதே வேளையில், சுமாா் ரூ.69,000 கோடி வரி மக்களுக்குத் திரும்பி செலுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு நிலவரத்தை விட 3.73 சதவீதம் கூடுதலாக வரி இந்தக் காலக்கட்டத்தில் திரும்ப செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் வருமானவரி உருவான வரலாறு
- 24 ஜூலை 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
- 1866-ஆம் ஆண்டு, கவர்னர் ஜெனரல் டஃப்ரின், வருமான வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் முறைப்படியான முதல் வரிச் சட்டம். இதில், லைசன்ஸ் வரி, வருமான வரி என இரண்டுமே இருந்தன.
- 1917-இல் பெரும் செல்வந்தர்களுக்கு என்று தனியாக ‘சூப்பர் டாக்ஸ்' விதிக்கப்பட்டது.
- 1922-இல் ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, அடுத்த வருமானவரி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதுதான் ‘முழுமையான' வருமான வரிச் சட்டம். தற்போதுள்ள சட்டத்தின் தந்தை என்று சொல்லலாம்.
- 1924-இல் மத்திய வருவாய் வாரியம் அமைக்கப்பட்டது.
- சட்ட ஆணையம், 1922 சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டத்தைப் பரிந்துரைத்தது. அதன்படி வருமான வரிச் சட்டம், 1961 இயற்றப்பட்டது. இது 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
- 1963-ஆம் ஆண்டு, மத்திய வருவாய் வாரியத்தில் இருந்து மத்திய நேரடி வரி வாரியம் தனியாக உருவானது.
- 1966-இல் புலனாய்வு இயக்ககம் (Directorate of Investigation) உருவானது.
- 1994-இல் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அறிமுகமானது. இந்தியா முழுமைக்குமான இந்த எண், வருமான வரிக்குட்பட்ட நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதில் முழு வெற்றி கண்டது.
வருமானவரி குறித்த தகவல்கள்
- 1860-இல் வருவமான வரி அறிமுகமான முதல் ஆண்டில், அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வரியாக கிடைத்தது.
- இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது.
- 1970-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் வருமான வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
- கடந்த நிதி ஆண்டில்(2022-23) 19.68 லட்சம் கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
- வருமான வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா
- தமிழ்நாடு 4-வது இடத்தில உள்ளது
- தற்போது புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய் மற்றும் சூா்ய காந்த் இடம்பெற்றுள்ளனா்.
- இந்தக் குழு 23 உயா் நீதிமன்ற நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.அவா்களில் மூவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்-முக்கிய குறிப்புகள்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது- 62
- உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி - நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
- உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
- இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( 1 ஜூலை 1862)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
- சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
- சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதி பரிபாலணம்(அதிகார வரம்பு எல்லை) - தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
- மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கியது)
- தனி உயர்நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் - டெல்லி(1966)
- இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
- இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
முக்கிய நாட்கள் :-

- இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ஆம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
எஸ்.ஆர். ரங்கநாதன் பற்றிய குறிப்புகள்
- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள வேதாந்தபுரம் என்ற ஊரில் 1892-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் நாள் பிறந்தவர்.
- பள்ளிக்கல்வியை சீர்காழியிலும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் முடித்தார்.
- 1924-இல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார்.
- அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைத்தார். சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். 1928 முதல் 1945-ஆம் ஆண்டு வரை அதன் அமைப்புச் செயலாளராக செயல்பட்டார்.
- 1948-ஆம் ஆண்டு, இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.
- புத்தகங்களைப் பொருள் வாரியாக அடுக்குவதற்காக "கோலன் பகுப்பு முறை" என்ற முறையை கண்டுபிடித்தார். இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.
- நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ஆம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அளித்து சிறப்பித்தது.

- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சர்வதேச இளைஞர் தினம் நினைவுகூரப்படுகிறது.
- இளைஞர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது மற்றும் இன்றைய உலகளாவிய சமூகத்தில் இளைஞர்களிடம் இருக்கும் திறனைக் கொண்டாடுவது இதன் நோக்கமாகும்.
- 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச இளைஞர்கள் தின கருப்பொருள்: Green Skills for Youth: Towards a Sustainable World

- உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டு உலக யானைகள் தினத்தின் கருப்பொருள் "சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது"
- இத்தினம் 2012-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
முக்கிய குறிப்பு
- இந்தியாவில் உள்ள யானை காப்பகங்களின் எண்ணிக்கை - 33
- தமிழகத்தில் உள்ள யானை காப்பகங்களின் எண்ணிக்கை - 5 (நீலகிரி, நீலாம்பூர்(கோயம்புத்தூர்), ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அகத்தியர் மலை
- தமிழகத்தில் உள்ள யானைகள் எண்ணிக்கை - 2,961
- இந்தியாவில் யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
Daily current affairs are uploaded on this website
Tags:
Current Affairs