போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 22-08-2023
தேசியம் :-

- மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் ஆகஸ்ட் 21 அன்று பதவியேற்றனர்.
- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை பற்றிய குறிப்புகள்
- மாநிலங்களவை உறுப்பினர்களின் அமைப்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 80
- மாநிலங்களவை மொத்த உறுப்பினர்கள் : 250 மிகாமல் இருத்தல் வேண்டும்
- தற்போதுள்ள உறுப்பினர்கள் : 245
- இதில் 233 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- நியமன உறுப்பினர்கள் : 12 ( மத்திய அரசின் பரிந்துரையின்படி கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என்று துறைசார் சாதனையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்)
- மாநிலங்களவையின் தலைவராகச்செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்(ஜக்தீப் தன்கர்)
- ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
- மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் - உத்திர பிரதேசம்(31)
- மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் எண்ணிக்கை - 18
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
- அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்
- மாநிலங்களவை துணைத்தலைவர் - ஹரிவன்ஸ் நாராயணன் சிங்
- மாநிலங்களவை அவைத் தலைவர் - பியூஷ் கோயல்
- மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் - மல்லிகார்ஜுன கார்கே
- மாநிலங்களவை செயலகத்தின் நிர்வாகத் தலைவர் - பிரமோத் சந்திர மோடி
- மாநிலங்களவையில் அதிகமுறை உறுப்பினராய் இருந்தவர் - டாக்டர் மகேந்திர பிரசாத்(7 முறை)
- மாநிலங்களவையில் அதிகமுறை உறுப்பினராய் இருந்த பெண் - டாக்டர். நஜ்மா ஏ. ஹெப்துல்லா(6 முறை)
சர்வதேசம்:-

- BRICS கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி மாநாடு இதுவாகும்.
- அதில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
- மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்கிறாா். மாநாட்டின் ஒருபகுதியாக அவா்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
- இந்த மாநாட்டில், இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம் மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
BRICS - முக்கிய குறிப்புகள்
- 2001-ஆம் ஆண்டு, கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ'நீல், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய BRIC என்ற சுருக்கத்தை உருவாக்கினார்.
- இந்த நாடுகள் வரும் 2050-ஆம் ஆண்டு உலகிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக மாறும் என்று அவர் கணித்தார்.
- 2006-ஆம் ஆண்டு இந்த நான்கு நாடுகளும் இணைந்து 'BRIC' நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.
- அதில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இணைந்து 'BRICS' கூட்டமைப்பு என்ற பெயரை இந்த அமைப்பு பெற்றது.
- சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- New Development Bank என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் BRICS கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி கடந்த 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, BRICS நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
- பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து, 324 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அவர்களுடைய ஒட்டுமொத்த தேசிய வருவாய் 26 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் 26 சதவிகிதம் ஆகும்.
தமிழ்நாடு:-

- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை நேற்று(21.8.2023) தொடங்கி வைத்தார்.
- இதை செயல்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 பசுமை ஆர்வலர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Green Fellowship Programme பற்றிய குறிப்புகள்
- முதல்வரின் பசுமைத் நல்கை திட்டமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்க்கை முறை போன்ற துறைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்களுக்கான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம்(Institute of Energy Studies), திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.
- திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின்அடிப்படையில் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பசுமை ஆர்வலர்களின் பணிகள்
- பசுமை ஆர்வலர்கள், தமிழகத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கியப் பங்காற்றுவர்.
- பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு கால நிலைமாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் போன்ற முக்கிய அரசுத் திட்டங்களின் செயலாக்கத்திற்கு பசுமைத் ஆர்வலர்கள் துணை புரிவர்.
- சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” போன்ற சூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர்.
உதவித்தொகை & முதுகலை பட்டம்
- இரண்டாண்டுகள் சேவைபுரியும் காலகட்டத்தில், பசுமை ஆர்வலர்களுக்கு மாதம் ரூ.60,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- அதேபோல, திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.
- 2 ஆண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து “கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்புக்கான பட்டத்தையும் பெறுவர்.

- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதன்படி, புதிதாக ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகமது நசிமுதின் நியமிக்கப்பட்டு உள்ளாா்.
- ஆணையத்தின் உறுப்பினா்களாக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி எம்.சி.சாரங்கன், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் சி.செல்லப்பன், போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் உளவியல் சிகிச்சைத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஓ.ரவீந்திரன், இன்-கேஜ் குழுமத்தின் நிறுவனா் விஜய் கருணாகரன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
- ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது, அந்த விளையாட்டுகளை அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது உட்பட பல்வேறு பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

- தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க “நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை” (Companies Compliances and Financials Monitoring System) www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.(தமிழகத்தில் தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை-66)
- இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் வகிப்பதாக அவதார் குழுமம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil angels (www.tamilangels.fund) என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- பிரதமரின் முத்ரா திட்டம், ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நாட்டிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
- ‘நலம் 365’ - தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட YouTube சேனல்
- புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக ‘தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம்- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு.
- இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமையவுள்ளது.
- அரசுப் பள்ளி மாணவிகள் உயா் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் பயனாளா்களுக்காக, பிரத்யேக வங்கி அட்டையை (டெபிட் காா்டு) பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (BOB) அறிமுகப்படுத்தியுள்ளது.
”மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் புதுமைப் பெண் திட்டம்” - அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள், தங்களது உயா் கல்வியைத் தொடா்வதற்கு வசதியாக அவா்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்.
- சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட புதிய கேலரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- “அவள்” திட்டம் (Avoid Violence through Awareness and Learning) - பெண்கள், சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டம்
- வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு 31,629 ஹெக்டரிலான அங்கக வேளாண் பரப்பினைக் கொண்டு தேசிய அளவில் 14வது இடத்தில் உள்ளது.
- புதிய விளையாட்டு நகரம் அமையவுள்ள மாவட்டம் - தஞ்சாவூர் (செங்கிப்பட்டி)
- தமிழக அரசால் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் - குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- EEPC (இந்திய பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்) இந்தியா சார்பில் 10-வது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி (IESS X) சென்னையில் நடைபெற்றது. (மொத்த ஏற்றுமதியில் இந்தியா அளவில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.)
- தமிழ்நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர்
- சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் - மனோரா, தஞ்சாவூர் மாவட்டம்
- பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். (இளையபெருமாள், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்).
- ஆரணியில் டாக்டர்.கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
- கீழடி அருங்காட்சியக தொல்பொருட்களை 3Dயில் பார்க்கும் வகையில் கீழடி புனை மெய்யாக்க செயலி (Keeladi Augment Reality (AR) App-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் பாறையில் உருவாக்கப்பட்ட தானிய அரவை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.இது மொத்தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது.
- செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.(செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக 2015-இல் தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும்)
- சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. "சமூக நீதி போராட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வது மற்றும் சமூக நீதி இயக்கத்தின் தேசிய திட்டத்தில் இணைவது" என்ற தலைப்பு இந்த மாநாட்டின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- 2022-ஆம் ஆண்டிற்கான, நாட்டிலேயே எஸ்.ஐ.,க்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக, தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் சுழற்கோப்பை வழங்கி உள்ளது.
- ‘முதல்வர் திறனறி தேர்வு திட்டம்' - இப்புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அருகேயுள்ள திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, 2022-23 நிதி ஆண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம்- தமிழ்நாடு
- ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி நகரப் பஞ்சாயத்து ஆனது, திடக்கழிவு மேலாண்மையில் ஒரு முன் மாதிரியான நகரப் பஞ்சாயத்து என்ற அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.
- வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய தகவல் அடங்கிய செப்பு பட்டயத்தை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் ஆங்கிலேய ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன். 20-10-1799-இல் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. (கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - 16 அக்டோபர்,1799).
- ‘சிங்கப்பூரின் தந்தை’ என போற்றப்படும் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள் :-

- சின்சினாட்டி சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதில் இறுதி போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- ஜோகோவிச், மூன்றாவது முறையாக சின்சினாட்டி கோப்பையை கைப்பற்றி உள்ளார்.
- அதேபோல், பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ‘கோகோ காஃப்’ கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய நாட்கள்:-

- டச்சுக்காரர்கள் 1599-ஆம் ஆண்டு ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் உயர்த்த, லண்டனில் உள்ள வர்த்தக மையத்தில் வியாபாரிகள் கூடி விலை உயர்வை எதிர்த்து கிழக்கு நாடுகள் செல்வத்தை தாமே திரட்ட முடிவெடுத்து 1600-ஆம் ஆண்டு ஜனவரி 1- இல் கிழக்கிந்திய கம்பெனி நிறுவினார்கள்.
- 1609-ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் 1613-ஆம் ஆண்டு சூரத்தில் தங்களது வணிகத்தை முதன் முதலாகத் தொடங்கினர். இதுவே ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் தொடக்கமாக அமைந்தது.
- தென்னிந்தியாவில் முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை கம்பெனி அதிகாரிகள் ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே எடுத்துக் கொண்டு வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக் பட்டம் பெற்ற சென்னப்ப நாயக்கரின் மகன்கள் டாமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் ஐயப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து மதராஸ் பட்டணம் என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர்.
- இந்த அனுமதி பத்திரம் 1639-ஆம் ஆண்டு ஆகஸ்டு 22- இல் எழுதப்பட்டது. இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள்.
- டாமர்லா சகோதரர்கள் அந்த இடத்தை தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் இருக்க வேண்டுமென்று விரும்பினர்.
- நிலத்தின் மேற்கு பகுதியில் ரோமன் கத்தோலிக்க தலையாரி மீனவ குடியிருப்பை சேர்ந்த மதராசன் என்பவரின் வாழைத்தோப்பில் தொழிற்சாலை அமைக்க விரும்பினார். இடைத்தரகர் திம்மப்பா தொழிற்சாலைக்கு மதராஸ் பட்டணம் என்று பெயர் சூட்டப்படும் என்று தலையாரி மதராசனுக்கு வாக்குறுதி கொடுத்து வாழைத்தோப்பை வாங்கி கொடுத்ததால் மதராஸ் பட்டணம் என்ற குப்பமும், மதராஸ் பட்டணம் என்ற கோட்டையும், காலப்போக்கில் நெசவாளர்கள் குடியேறிய சுற்றியுள்ள பகுதி சென்னபட்டணம் என்று வழங்கலாயிற்று.
- சென்னபட்டணம் வந்ததற்கு இன்னொரு காரணம் கோட்டை கட்டப்பட்ட இடத்தில் சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்ததாகவும் அந்த இடம் அப்போதே சென்னபட்டணம் என்று இருந்ததாகவும், ஆங்கிலேயர் அந்த கோவிலை இடித்து இடிபாடுகளை உபயோகித்து கோட்டை சுற்றி பாதுகாப்பு அரண் எழுப்பினர் என்ற ஆராய்ச்சி குறிப்பு ஒன்று கூறுகிறது. ஆக மதராஸ் என்ற பெயரும் உள்ளூர்வாசிகள் இட்ட பெயர் சென்னை பட்டணம் என்று இருபெயர் தாங்கி நகரம் உருவானது.
- 1640-ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
- கோட்டையில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். இந்த குடியேற்றம் விரைவில் கோட்டை பகுதிக்கு அப்பால் விரிவடைந்தது. பல உள்ளூர் வணிகர்களும், துபாஷி என அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் மொழி பெயர்பாளர்களும் வெளியூர்களின் இருந்து அழைத்து வரப்பட்ட நெசவாளர்களும், கூலித்தொழிலாளர்களும் கோட்டைக்கு வெளிப்பகுதியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர்.
- கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்து ’White town’(வெள்ளையர்கள் நகரம்) எனவும் கோட்டைக்கு வெளியே இடப்பக்கம் உள்ள பகுதிகள் ‘Black town’ (கருப்பர் நகரம்) எனவும் அழைப்பட்டது. 1906-ஆம் ஆண்டு இந்தியா வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக கருப்பர் நகரத்திற்கு’ ஜார்ஜ் டவுன்’ என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
- ஆங்கிலேயர்களின் கட்டுமானம் சென்னை நகரின் வடிவமைப்பை மாற்றியது. ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகம், உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் போன்ற சின்னச் சின்ன சின்னங்கள் பிரிட்டிஷ் மற்றும் இந்தோ-சராசெனிக் பாணி கட்டக்கலைகளை பிரதிபலிப்பதாய் மாறியது.
- 1688-இல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதராஸ் நகரை முதல் நகரசபையாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதராஸ் பெற்றது.
- 1746-இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மதராஸ் மாகாணத்தையும் பிரெஞ்சு அரசு கைப்பற்றியது.
- மீண்டும் 1749- இல் மதராஸை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதனை அடுத்து திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் மதராஸ் மாகாணத்தில் இருந்த சென்னை பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. இப்படியாக ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதராஸ்.
சுதந்திரத்துக்குப் பின்னர்
- 1947-இல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது.
- மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-இல் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது.
- மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது.
- அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன.
- 1991-இல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது.
- 1995-இல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே.
- இதன் தொடர்ச்சியாக, 1996 ஜூலை 17-இல், மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், 'மெட்ராஸ்' அதிகாரபூர்வமாக 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- சென்னை உருவான தினத்தை சிறப்பிக்கும் விதமாக 2004-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ஆம் தேதி “சென்னை தினம்” கொண்டாடப்படுகிறது.
சென்னை நகரம் - சிறப்பு பெயர்கள்
- தென்னிந்தியாவின் நுழைவாயில்
- ஆசியாவின் டெட்ராய்ட்
- இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்
- இந்தியாவின் வங்கித் தலைநகரம்
Tags:
Current Affairs