போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 29-08-2023
சர்வதேசம் :-

- Alphabet - சுந்தர் பிச்சை
- Microsoft - சத்ய நாதெள்ளா
- YouTube - நீல் மோகன்
- Adobe - சாந்தனு நாரயண்
- President of the World Bank Group - அஜய் பங்கா
- Starbucks - லக்ஷமன் நரசிமன்
- Cognizant - ரவி குமார்
- IBM - அர்விந்த் கிருஷ்ணா
- Honeywell - விமல் கபூர்
- Micron Technology - சஞ்சய் மஹோத்ரா
- French luxury fashion house Chanel – லீனாநாயர்
- Albertsons Companies - விவேக் சங்கரன்
- NetApp - ஜார்ஜ் குரியன்
- Palo Alto Network - நிகேஷ் அரோரா
- Novartis International - வசந்த் நரசிம்மன்
- CEO of Arista Network - ஜெயஸ்ரீ உல்லால்
- FedEx - ராஜ் சுப்ரமணியம்
- Inmarsat - ராஜீவ் சூரி
- Wayfair - நிராஜ் ஷா
- Vertex Pharmaceuticals - ரேஷ்மா கேவல்ரமணி
- Cadence Design System - அனிருத் தேவ்கன்
- VMware - ரங்கராஜன் ரகுராம்
- Microchip Technology - கணேஷ் மூர்த்தி
- GoDaddy - அமன் பூட்டானி
- Morningstar - குணால் கபூர்
- Nordson Corporation - சுந்தரம் நாகராஜன்

- ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் நடந்தது.
- இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
- இதன் மூலம் அதிபர் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.
தமிழ்நாடு :-

தமிழக உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழக புள்ளியியல் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கூறியதாவது:
- 2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் (GSDP at constant price) 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டுக்கான நடப்பு விலையில் (GSDP at current price) தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக உள்ளது.
- தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது.
- இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது.
- இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரியாக 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக உள்ளது.
- 2022-23-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- தமிழகத்தில் விலைவாசி, தேசிய அளவைவிட குறைவாக உள்ளது. பணவீக்க குறியீட்டு எண் மாநில அளவில் 2021-22-இல் 7.92 சதவீதம், 2022-23-இல் 5.97 சதவீதமாக காணப்பட்டது. அதேநேரம் தேசிய அளவில் 9.31 சதவீதம் மற்றும் 8.82 சதவீதமாக உயர்ந்திருந்தது.
- தமிழகத்தில் உற்பத்தி துறையின் வேகமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2021-22-இல் 9.7 சதவீதம் என இருந்த நிலையில், 2022-23-இல் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- சேவை துறையின் பங்கு 2022-23-இல் ரூ.6,57,363 கோடி.மொத்த உற்பத்தி மதிப்பில் இது 50.9 சதவீதம்
- தற்போது மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளது.

- சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் மத்திய அரசு சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.
முக்கிய குறிப்பு
- 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இருமொழிக் கொள்கை’ தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் கீதிகா ஸ்ரீவாஸ்தவா ஆகஸ்ட் 28 அன்று நியமிக்கப்பட்டாா்.
- பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பெண் ஒருவா் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- தற்போதைய இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாா் விரைவில் தாயகம் திரும்புவாா் என்றும் இஸ்லாமாபாதில் கீதிகா ஸ்ரீவாஸ்தவா தனது பொறுப்புகளை விரைவில் ஏற்பாா் என்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்:-

- ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது.
- 9 நாட்கள் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் திருவிழாவில் அமெரிக்கா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களை குவித்து பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது.
- இந்தியா ஒரே ஒரு தங்கத்துடன் 18-வது இடத்தை பெற்று தொடரை நிறைவு செய்தது.
- முன்னதாக, நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நாட்கள்

- இந்திய ஹாக்கி உலகின் ஜாம்பவான், மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி 'தேசிய விளையாட்டு தினம்' ஆக கொண்டாடப்படுகிறது.
- இந்த நாளில், விளையாட்டு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
- முதல் தேசிய விளையாட்டு தினம், இந்தியாவில் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
மேஜர் தயான் சந்த் பற்றிய தகவல்கள்
- 1905 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தவர்.
- பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா இருந்த போதும் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய அசாத்திய வீரர்.
- 1928, 1932, 1936 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஹாட்ரிக் தங்கம் வெல்ல உதவியவர்.
- 1926 முதல் 1949 வரையில் இந்திய ஹாக்கி அணியில் இவர் விளையாடி உள்ளார். தேசத்திற்காக 185 போட்டிகளில் விளையாடி 570 கோல்களை பதிவு செய்துள்ளார்.
- 1956ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் பஞ்சாப் படைப்பிரிவில் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றபோது, அதே ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷணை வழங்கி கெளரவித்தது.
- 1979ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இவர் காலமானார்.
இந்தியாவில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகள்
- மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது- விளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்றழைக்கப்பட்ட இவ்விருது 2021-ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றப்பட்டது.
- அர்ஜுனா விருது- 1961-ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது.
- டென்சிங் நார்கே விருது – சாகச விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
- துரோணாச்சார்யர் விருது - சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது

- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29, அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு நடத்தப்படுகிறது.
- அணு ஆயுத சோதனையினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
- இத்தினம் 2010 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது
முக்கிய குறிப்புகள்
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
- உலகளவிலுள்ள அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை - 12,512
- இவற்றில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.
9 அணு ஆயுத நாடுகளிடமுள்ள தற்போதைய கையிருப்பு
- ரஷ்யா - 5,889
- அமெரிக்கா - 5,244
- சீனா - 410
- பிரான்ஸ் – 290
- இங்கிலாந்து – 225
- பாகிஸ்தான் - 170
- இந்தியா-164
- இஸ்ரேல்- 90
- வடகொரியா- 30
Tags:
Current Affairs