போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 30-08-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 30-08-2023


தேசியம் :


Card image cap

  • கர்நாடக மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘கிரகலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின்  மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் அறிவித்த முக்கிய திட்டங்கள்

  • கிரஹ ஜோதி திட்டம் - அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
  • கிரகலட்சுமி திட்டம் -  வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்
  • அன்ன பாக்யா திட்டம் - வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்
  • யுவ நிதி திட்டம் - வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும்வேலையில்லா பட்டயப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் 1500 ரூபாயும், 2 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம்
  • உசித பிரயாணா திட்டம் - பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம்

முக்கிய குறிப்புகள்

  • கர்நாடக முதல்வர் - சித்தராமையா
  • துணை முதல்வர் - டி.கே.சிவக்குமார்


பொருளாதாரம் : 

Card image cap
  • மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று(ஆகஸ்ட் 29) அறிமுகப்படுத்தினார்.
  • இது மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்படுகிறது.அதை 20% ஆக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
  • முதற்கட்டமாககடந்த ஏப்ரல் மாதம் சில இடங்களில் 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-க்குள் நாடு முழுவதுவம் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் இனோவா ஹைகிராஸ் காரை மின்சாரத்திலும் 100% எத்தனாலிலும் இயங்கும் வகையிலான ஹைபிரிட் காராக உருவாக்கியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் : 


Card image cap

Super Blue Moon எனப்படும் எனும் வானியல் அரிய நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது.

சூப்பர் மூன் (Super Moon)

  • நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

ப்ளூ மூன் (Blue Moon)

  • ப்ளூ மூன் என்பது நிலவு நீல நிறத்தில் தோன்றும் என்பதல்ல. இது அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வின் சிறப்பு பெயர்.
  • பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும்ஒருமுறை அமாவாசையும் வரும்.
  • ஆனால்மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் முறை முழு நிலவு தோன்றும் போது2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் என்று குறிப்பிடுகின்றனர்.
  • ஒவ்வொரு ப்ளூ மூனும்இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாககடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு நடந்தது.

சூப்பர் ப்ளூ மூன்(Super Blue Moon)

  • சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் சேர்ந்து ஏற்படும் நிகழ்வு சூப்பர் ப்ளூ மூன் எனப்படும்.
  • இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும்மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்தாண்டின் மிகப்பெரியமிகப் பிரகாசமாக நிலவை இன்று நாம் காணலாம்.
  • இது 10 (அல்லது) 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.
  • அடுத்த சூப்பர் ப்ளூ மூனை 2037- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் காண முடியும்.
  • இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7.30 மணிக்கு உச்சம் தொடும்.

Card image cap
  • சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் ‘லேசரால் தூண்டப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியின் (Laser-Induced Breakdown Spectroscope --LIBS)’ ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
  • அதன் மூலம்தென்துருவத்தின் அருகேயுள்ள பகுதியில் கந்தகம்(Sulphur) இருப்பது உறுதியாகியுள்ளது.
  • கந்தகம் மட்டுமின்றி அலுமினியம்கால்சியம்இரும்புக்ரோமியம்டைடேனியம்மாங்கனீஸ்சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
  • ஆய்வுத் திட்டத்தின் முக்கிய இலக்கான ஹைட்ரஜன் தேடல் நடந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பெங்களூரு ISRO வளாகத்தில் அமைந்துள்ள மின்-ஒளியியல் அமைப்புக்கான ஆய்வகத்தில் உருவான LIBS கருவி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய குறிப்புகள்

  • சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தினம் - ஜூலை 14,2023
  • விண்கலம் ஏவப்பட்ட ராக்கெட்டின் பெயர் - Geosynchronous Satellite Launch Vehicle Mark III எனப்படும் LVM 3
  • விண்கலத்தின் எடை - 3,895 கிலோ
  • லேண்டரின் பெயர் - விக்ரம்
  • ரோவரின் பெயர் - பிரக்யான்
  • சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு - ரூ.615 கோடி
  • திட்ட இயக்குனர் - வீர முத்துவேல்
  • சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தினம் – ஆகஸ்ட் 23, 2023(தேசிய விண்வெளி தினம்)
  • சந்திரயான்-திட்டத்தின் ஆயுள் - 14 நாட்கள்
  • நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சூட்டப்பட்ட பெயர் - சிவசக்தி புள்ளி
  • நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகள் - அமெரிக்காரஷ்யாசீனா மற்றும் இந்தியா





விளையாட்டு செய்திகள் : 


Card image cap
  • இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும்உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தா பற்றிய குறிப்புகள்

  • சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, 3 வயது முதல் செஸ் விளையாடத் தொடங்கி, 5 வயது முதல் செஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
  • 10 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • 2013-ஆம் ஆண்டு 8 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2015-ஆம் ஆண்டு 10 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
  • மேலும்12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று அன்றைய காலத்தில் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
  • செஸ் CANDIDATE தொடரில் விளையாட தேர்வாகி உள்ள இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, FIDE செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று தனி வீரராகவும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • கடந்த ஆண்டு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்
  • தற்போது  இளம் வயதில் இந்தியாவில் இருந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


முக்கிய நாட்கள்  : 



Card image cap
  • இந்தியாவில் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆகஸ்டு 30-இல் தேசிய சிறுதொழில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த ஆதாரங்களில் சிறுதொழில் மிகவும் முக்கியமானவை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களாக இந்த துறை இயங்கி வருகிறது.
  • 2000- ஆம் ஆண்டு ஆகஸ்டு 30-இல்இந்திய சிறுதொழில் அமைச்சகம் இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு சிறப்பு ஆதரவை வழங்கும் வகையில் சிறிய அளவிலான தொழில்கள் (SSI) துறைக்கான கொள்கை சார்ந்த தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
Card image cap
  • பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதியைக் கோருவதோடுஅது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம்(International Day of the Victims of Enforced Disappearances) கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
  • அரசியல்,வன்முறை,போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா கடந்த 30.08.2011 தேதியன்று அறிவித்தது.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post